Pages - Menu

Tuesday, October 20, 2009

இவள் பாதி இவன் மீதி-II

இரண்டு காதல் கவிஞர்கள் மீண்டும் சந்தித்த வேளையிலே வார்த்தை வரவில்லை கவிதை தான் வருகிறதாம்

இவள்இவன்

அவிழ்ந்த கனவுகளை
வாறுகிறேன்
பேணுகிறேன்
எனக்காக இல்லை
நீ தரும் பூக்கள்
அரங்கேற்றம் காண

நான் தரும் பூக்கள்
மலிவானது எனயென்னாதே
நீ சூட்டியபின் அது
விலைமதிப்பற்றதாகும்
ஆனால் அதுகூட உன்
சிரிப்புக்கு
இணையாகமுடியாது

உன்சிரிப்பொலியின்
எதிரொலிகள் நான்
உறங்கும் போதும் என்
கனவறையில் உலாவுகிறது
சத்தமின்றி

உன் விழிகளில் துளைத்த
என் தூக்கத்தை தேடுகிறேன்
கண்டுவிட்டேன் காரணத்தை
நீ என் விழிகளுள்
உறங்குகிறாயென்று

உன் விழிகள் என்னை தழுவும்போது
என் விழிகள் மட்டுமே நாணுகிறது
ஆனால் இதயம் உன் நினைவுகளில்
மட்டும் தான் நீந்துகிறது

கன்னிராசிக்காரி
உன் மீன் விழி
என் மேல் விழுந்ததிலிருந்து
நான் மீன ராசிக்காரன்
ஆகிவிட்டேன்

கிழிக்க மனமின்றி கிழித்தேன்
காதல் நாட்காட்டியின்
பக்கங்களை
உன் ராசிக்கு நானென்றும்
என் ராசிக்கு நீயென்றும்
கடிதம் வரைவதால்

நீ கிழித்த என்
காதல் கடிதத்திலும்
கண்டேன் உன்
விரல் ரேகைகள்
என் வார்த்தைகளோடு
உரசலாக பேசுவதை


தொடர்புடைய பகுதி:
இவள் பாதி இவன் மீதி-I

2 comments:

  1. அருமையாக உள்ளது ஒவ்வொரு படைப்புகளும் வாழ்த்துக்கள்,
    எமது வலை http://tamilparks.50webs.com

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது