Pages - Menu

Wednesday, November 25, 2009

என்னைப் போல ஒருவன்

புதிய மடி கிடைத்தது
புகுந்தோடி தவழ்ந்தேன்;
உயரமான தோள்கள் கிடைத்தது
உலகை ஏறிப் பார்த்தேன்;
பாச விரல்கள் கிடைத்தது
பற்றிக்கொண்டேன் பயமின்றி;
பைசா காசுகள் கிடைத்தது
பையுடன் செலவழித்தேன்;
விழாகாலத்தில் சொக்காய் கிடைத்தது
விடியவிடிய போட்டுக் கொண்டேன்;
பணவாசனையால் சீட்டுகிடைத்தது
படித்துப் பட்டம் வாங்கினேன்;
வேலைக்கு தேவை வந்தது
வெளிநாட்டு குழுமத்தில் சேர்ந்தேன்;
மணவறை யோகம் வந்தது
மணாலனாக மாலையிட்டேன்;
பாசம் வசதிக்கு இடர்தந்தது
பணம்கட்டி முதியோரில்லத்தில்விட்டேன்;
எனக்கென்று புதுவுறவுகிடைத்தது
உத்தமப்புத்திரனுக்கு தந்தையானேன்;
அவனுக்கும் பாசம் இடருதோ?
தாத்தாப்பாட்டியின் காப்பக முகவரிக் கேட்கிறான்.

கவிதையை வெளியிட்ட தமிழோவியத்திற்கு நன்றி:
http://www.tamiloviam.com/unicode/11190906.asp

4 comments:

  1. அருமை நண்பரே தொடருங்கள்.....

    ReplyDelete
  2. அலோசனை சீர் செய்யப்பட்டது
    நன்றி கமலேஷ் மற்றும் பாலவாசகன்.

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது