Pages - Menu

Sunday, July 4, 2010

எல்லாம் ஒரு விளம்பரம்





பாரம்பரிய உடைத்திருவிழாவில்
விளம்பரமில்லாமல்
அம்மணத்தோடு ஒரு
குழந்தை

*****


பிரதான பத்திரிகையில்
இரண்டாம்பக்கம்
இரண்டாம் நிலைப் பத்திரிகையில்
எல்லாம் முதல் பக்கம்
என மணமகள் தேவை விளம்பரம்
கொடுத்தாயிற்று ஆனால்
பக்கத்தில் வரதட்சணை வழக்கில்
இருவர் கைது என்ற செய்தியை
கவனிக்கத் தவறிவிட்டோம்.


*****


கோரிக்கைகளும்
விளம்பரங்களும்
இல்லாத உண்ணாவிரதம்
பட்டிணிச்சாவு


*****


பசுமை சூழ்ந்த புல்வெளி
பிம்பம் கொண்ட விளம்பரப் பலகையை
வெறித்துப் பார்க்கிறாள் தாய்.
வெற்று பால் பாக்கெட்டுகளை
நுகர்ந்துப் பார்க்கிறாள் மகள்.
இனி பால் தரப்போவது அந்த பசுயில்லையே ..

6 comments:

  1. அனைத்தும் அள்ளி போகிறது மனதை.

    ReplyDelete
  2. @இராமசாமி கண்ணண்
    வாங்கண்ணே, உங்கள் வரவு எனக்கு நல்வரவு.
    @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
    @ப்ரியமுடன் வசந்த
    வங்க நண்பர்களே ஊக்கப் பூர்வமான கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. கோரிக்கைகளும்
    விளம்பரங்களும்
    இல்லாத உண்ணாவிரதம்
    பட்டிணிச்சாவு


    ..... சரிதான்..... அதேதான்....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் கவிதைகள்

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது