Pages - Menu

Sunday, April 3, 2011

கோலிவுட் குறும்பு கிரிக்கெட் இரும்பு

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா கோப்பையை தக்கவைத்துக் கொண்டது அதாவது போட்டி நடத்தும் நாடு என்கிற அடிப்படையில் வெளியாட்களுக்கு தராமல் தக்கவைத்தது சபாஸ் தான். அடுத்து இந்த வெற்றி அணியில் இருப்பவர்கள் பல தளங்களில் ஜொலிப்பார்கள், அரசியல், விளம்பரம், விருதுகள் ..... இந்தப் பட்டியலில் சற்றும் எதிர்பாராத விதமாக கோலிவுட்டிலும் ஜொலிப்பார்கள் என்று தோசைமணி சொன்னான். நாம் தானே இந்தியாவின் மிகப்பெரிய சினிமா ரசிகர்கள். தூசி தட்டி கூகிள் விட்டுப் பார்த்தால் இந்த கிரிக்கெட் வீரர்கள் பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள் என கண்டுபிடித்துள்ளேன்.

என்ன மாயமோ மந்திரமோ தோனி சாதிச்சுட்டாருனு நினைக்கையில ஆடியோ ரிலீசுக்கு மலேசியா போகப்போராராம்.பஞ்ச டயலாக்குகளை எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டாராம்


முதன்முறையாக ரெட்டைவேடத்தில் நடிக்க புக்காகியுள்ளாராம்.படத்தில் இளமையாக தெரிகிறாராம்

பைனலில் இரண்டாவது பாலிலேயே லீவ் போட்டு வந்து இந்தப் படத்தில நடிக்க ஒத்துக்கொண்டுள்ளாராம்.

ஏன்னா வெறி ஏன்னா எறி என்று பாகிஸ்தானை வெளுத்தக் கையோடு இந்தப் படத்தில் புக்காகியுள்ளாராம். கண்ணீர் மல்க கலக்கியுள்ளாராம்

இந்திய அணி தோற்கும் நிலையில் இருக்கும் போது மானம் காத்த கம்பீர்க்கு இந்தப் படவாய்ப்பு தானமாக கிடைத்துள்ளது. அதிலும் மின்னுவாராம்.

கோவத்தில் எதிரியை அடி அடின்னு அடித்து சேர்ந்துள்ளாராம் இந்தப் படத்தில். தமிழுக்கு புதுவரவு.

விஜய் அரசியலுக்கு செல்வதால் கிடைத்த வாய்ப்பை நான்கு பயன்படுத்தியுள்ளார் ஜாகீர் ஹான். பந்து போல பறக்கும் சண்டைக் காட்சிஎல்லாம் உண்டாம்.

சரி போட்டி போட்ட நாடுகள் எங்கப்பா? கொஞ்சம் தேடுங்க அந்த பஸ் ஸ்டாண்டு பக்கத்திலயெல்லாம் நல்லா பாருங்க இந்தப் படத்தில அவுங்கள நடிக்க வச்சுருவோம் என்கிறார் கோலிவுட்டை சேர்ந்த பிரபல இயக்குனர்


இந்த கோலிவுட் படையெடுப்பின் காரங்களை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் அபாரம்.
ஒரு படம் நடித்து விட்டால் முதல்வராகிவிடலாமாம். ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தல் ஆணையத்தையே டபாய்க்கலாமாம். கட்சிக்கு பிரச்சாரம் செய்து சம்பாரிக்கலாமாம். அதுபோக அரசு வீடு கட்டித்தருமாம், ரசிகர் மன்றங்கள் எல்லாம் கிடைக்குமாம். டிவி சேனல்களில் நடுவராக வாய்ப்புகிடைக்குமாம். இலவசமாக வெளிநாடுகளுக்கு போகலாமாம். ரசிகர்கள் கோவில்யெல்லாம் கட்டுவார்களாம். சிலைவைப்பார்களாம், பால் அபிஷேகம் செய்வார்களாம். ஜனாதிபதி ஆககூட முடியுமாம் ....... என்று பல விஷயங்களை அடிக்கினார்கள்.


முன்னணி நடிகர்களெல்லாம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக பால் பொறுக்கும் சிறுவர்கள் புலம்பினார்கள்.

என்று முன்னரே கிராபிக்ஸ் செய்தாலும் வின்னரே நாம்தான் என்ற போது பொய்களும் உண்மையாகிவிடுகிறதே

கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்த்து நாமும் வாழ்த்துவோம்.

4 comments:

  1. எங்க தல டோனி சூப்பர் ல எப்டி எங்க தல சும்மா இந்திரன கள்ளகுறாரு எங்க தல டோனி கு பெரிய விசில் அடிங்க pa

    ReplyDelete
  2. உங்க டோனி இந்திரன எங்க கம்பீர் ஒரு கேபிள் ல அத்து விட்ட kooda pudingikum

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது