Pages - Menu

Friday, December 23, 2011

சலனக் குறிப்புகள்


எரிகிற கொள்ளியில்
சுள்ளிகள் எடுத்து
எரிக்க முனைந்தால்
பொசுங்கியது ஆசை

இது தான் வெற்றியென்று
முடித்துக் கொள்ள
முடியாமல் வெற்றிகரமாக
தோல்வி கொள்கிறேன்

கொதிக்கும் நீரில்
குதித்தாடும் குமிழ்கள்
வாய்பிளந்து மரணத்தை
குடிக்கும்

கற்பூரத்தை சர்க்கரை
என நிருபிக்க
சொன்ன பொய்கள்தான்
அதை காற்றிலே கரைத்துவிட்டது

புதிராக இருந்தாலும்
ஒரு திசை போதும்
மற்றவற்றை காட்டிக்கொடுக்க

திறந்திருந்த ஒன்றை
திறந்து வைத்தவர்
யாரென்கிறது
ஆற்றுப் பாலத்து கல்வெட்டு

ஊரெல்லாம் தூங்கிக்
கொண்டிருக்க மனித இனத்தையே
உலுப்பியது அலார ஒலி

திண்ணை இதழிலும் படிக்கலாம்

4 comments:

  1. "புதிராக இருந்தாலும்
    ஒரு திசை போதும்
    மற்றவற்றை காட்டிக்கொடுக்க"
    அருமையான வரிகள் நண்பரே! நன்றி!
    படிச்சீங்களா?:
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  2. புதிராக இருந்தாலும்
    ஒரு திசை போதும்
    மற்றவற்றை காட்டிக்கொடுக்க
    >>
    ரசித்தேன்

    ReplyDelete
  3. ஃஃஃஃபுதிராக இருந்தாலும்
    ஒரு திசை போதும்
    மற்றவற்றை காட்டிக்கொடுக்கஃஃஃஃ

    வாழ்க்கையின் பல மறுதலிப்புகளை வரிகளாக்கி மன ஓட்டத்தை முடக்கிய வரிகள்...

    நன்றீங்க...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது