Pages - Menu

Sunday, March 11, 2012

சாக்கடை -ஒரு கேள்வி

சாக்கடை என்பது என்ன?
விதவிதமான பதில்கள்...............

  • அசுத்த நீரைக் கொண்டிருக்கும் அருவருப்பான இடம்
  • இந்திய அரசியல்
  • நம்முடைய அசுத்தத்தைக் கொண்டு செல்லும் ஒரு இடம்
  • கழிவு நீரைக் கடத்தும் வழிப்பாதை
  • அசுத்தமாகப் பட்ட புனித நதிகள்
  • மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரைக் கடத்திச் செல்லும் தண்ணீர் லாரி
  • கழிப்பறைகளின் சீதனம்
  • ஆறுகளை நாறடிக்க மனிதன் கண்டுபிடித்த நூதன திட்டம்
  • பக்கத்து வீட்டுடன் சண்டை போட கிடைக்கும் சான்ஸ்
  • தண்ணீர் பஞ்சத்தை தீர்மாணிக்கும் சிமிண்டு தொட்டி
  • சிலருக்கு வாழ்க்கைக் கொடுக்கும் ஆலயம்
  • பதவியிருக்கையில் டெண்டர் விட கிடைத்தவொரு வாய்ப்பு
  • ஊழல் நடக்கும் எல்லா இடமும்
  • மழைக்காலத்தில் தூங்கவிடாமல் வீட்டுக்குள் வரும் வேண்டா விருந்தாளி
  • பேப்பர் கப்பல் விடும் இடம்
  • உயிர் பல்வகைமை கொண்ட உள்நாட்டு நீர் ஆதாரம்
  • சீ ச் சீ தள்ளி நில்லுங்க
  • பெருச்சாளிகளின் கூடாரம்
  • அந்த மூடி போட்டு மூடியிருக்கும் பள்ளம்
  • சுகாதாரம் காக்க, நீராதாரம் கடத்த உருவாக்கப்பட்ட சாலை
  • கடலில் கலக்கும் தற்கால கால்வாய்கள்
  • பணம் படைத்தவர்கள் பார்த்திடாத இடம்
  • சென்ட் அடித்தவர்கள் மூக்கை மூடிச்செல்லும் இடம்
  • பன்றிகளின் பரிணாமத் தொட்டில்
  • நகரத்து அஃறிணைகளின் குடிநீர் குளங்கள்
  • நீர் சதுரங்கள்
  • தலைவர் வயிறு
  • மழை நீர் சேமிக்காத மடையர்களின் வடிகால்
  • சிந்து நாகரீகத்தில் சிந்திக்கவைத்த நீர்மேலாண்மை
  • புவியீர்ப்பில் புரளும் தண்ணீர் ஜடம்
  • பராமரிக்கப்படாத உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து
  • வைகை
  • சாயப்பட்டறையின் புதலவர்
  • கொசுக்களின் கோடை மாளிகை
  • மனிதர்களை விழுங்கும் புதைக்குழி
  • குடிகாரர்களின் மாமியார் வீடு
  • மின்சாரம் தேவைப்பாடாத பெரிய நெட்வொர்க்
  • தேர்தல் முடிந்தப்பின் வாக்குறுதிகள் செல்லுமிடம்





*இந்த ஒரு கேள்விக்குரிய வேறு சுவாரசிய பதில்களையும் கருத்திட்டும் சொல்லலாம்.

2 comments:

  1. சுகாதாரமான நாட்டினையும் அல்லாத நாட்டினையும் ஒன்று சேர்க்கும் இடம்.கூடி வாழ முடிவெடுத்த மனித இனத்தின் அடையாளம்மனிதனுக்கு வியாதி வந்ததற்கான முதல் காரணிமனித இனம் உயிரோடிருப்பதற்கான சாட்சி

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது