Pages - Menu

Tuesday, July 27, 2010

மிடில் கிளாஸ் கவிதை

சிகையலங்காரம் தாளிக்கும் 
எண்ணெய் பூச்சுக்களும்
உடையலங்கோலமாக்கும் 
விடையற்ற உடுப்புக்களின்
தெளிப்புத் திரவங்களும்
நுனிமூக்கைத் துளைத்து
பொருளாதார மந்தநிலையிலும்
'நுகர்'வோர் நலன் காக்கிறது.

சலுகைகள் மற்றும் இலவசங்கள் 
சத்தம் மாறாமல் வழங்கப் படுகிறது
வறுமையும் விலையேற்றமும்
அர்த்தம் மாறாமல் ஓட்டிக்கொண்டதை
வாங்கியப்பின்னரும் உணரமுடியவில்லை.

பட்டாணி மடித்துக் கொண்டுவந்த 
பார்சல் தாளின் பத்தியொன்றில்
துப்புரவுத் தொழிலாளியின் சம்பள
உயர்வுச் செய்தி.
கடைசியில் காகிதத்தை கசக்கி
நடுரோட்டில் குப்பையாக்கிவிட்டு வந்தேன்.

அதிகாலை மழையில் நனைக்கப்பட்ட  
நாளிதழுக்காக சண்டை போட அந்த
சிறுவன் நாளை கிடைப்பான்
அவன் வீடும் அதே மழையில் நெளிந்துப் 
போனதை கொஞ்சம் மறந்துகொள்வோம்.

9 comments:

  1. விலைவாசி - எண்ணெய் பூச்சு

    அருமையான வெளிப்பாடு :)

    ReplyDelete
  2. பட்டாணி மடித்துக் கொண்டுவந்த
    பார்சல் தாளின் பத்தியொன்றில்
    துப்புரவுத் தொழிலாளியின் சம்பள
    உயர்வுச் செய்தி.
    கடைசியில் காகிதத்தை கசக்கி
    நடுரோட்டில் குப்பையாக்கிவிட்டு வந்தேன்.


    ..... எதார்த்தம்..... சராசரி மனிதனின் மன நிலையை வெளிப்படுத்தும் வரிகள்.

    ReplyDelete
  3. யோசிக்க வைத்த கவிதை!

    ReplyDelete
  4. னடுத்தரத்த பற்றி முதல் தரமா எழுதியிருக்கிங்க..... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நடுத்தரத்த பற்றி முதல் தரமா எழுதியிருக்கிங்க..... பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. @ஜில்தண்ணி - யோகேஷ்,
    @chitra,
    @வெறும்பய,
    @kolundhu,
    @சி. கருணாகரசு
    உங்கள் கருத்துகள் கொண்டு பக்கத்தை இன்னும் அலங்கரித்ததற்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. நல்லாருக்குங்க.. இயல்பான வார்த்தைகள்!

    ReplyDelete
  8. சலுகைகள் மற்றும் இலவசங்கள்
    சத்தம் மாறாமல் வழங்கப் படுகிறது///

    இலவசங்களில் விலை போய்விட்டோம் நாம்

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது