எடுக்க எத்தனை ரீங்காரங்கள்
ஊமையாய் உவமையில்லாமல்
முட்டை உடைந்த
குஞ்சுகள் வழியாக
பகுப்பதங்களுக்குள்ளே அழகிய
பகாப்பதங்களும் பேசும்
காக்கைக் கூட்டில்
பிறந்தாலும் குயிலினங்கள்
சந்திப்பிழையின்றிக் கத்தும்
சலனம் செரித்த சாயங்கால
வேளையில் இன்னிசையளபெடுக்கும்
குருவிகளின் குரல் கேட்டு
எட்டிக் குதித்தோடும் நிசப்தம்.
பனிச் சறுக்கலில் சரியும்
பசுக்கள் 'ம'கரத்தில்
கதறுமாம்
பணி முடித்தப்பின் அரிமாக்கள்
'க'கரத்தில் கர்ஜிக்குமாம்
உற்று நோக்கினால்
முல்லை விரியும் சப்தத்தில்
மெல்லினங்கள் மலரக்கூடும்
ஒற்றைக் கிளைகளில்
இலவம்பஞ்சு தெறிக்கையில்
வல்லினங்கள் வெடிக்கக்கூடும்.
புவியீர்ப்பு கவர்ச்சியில்
மீன்கள் உருளும் அந்த நீரில்
இடையினங்கள் மீட்கக்கூடும்.
சேகரித்ததுண்டா? சேகரியுங்கள்
அதுவும் நம் செம்மொழியே!
படஉதவி: தினமணி |
உற்று நோக்கினால்
ReplyDeleteமுல்லை விரியும் சப்தத்தில்
மெல்லினங்கள் மலரக்கூடும்
.....அழகு.
//பசுக்கள் 'ம'கரத்தில் கதறுமாம்////சேகரித்ததுண்டா?? //
ReplyDelete-- அட டா.. இதுநாள் வரை இப்படி நினைத்ததில்லையே..சிந்தனைக்கான நல்லதோர் கவிதை..
//காக்கைக் கூட்டில்
ReplyDeleteபிறந்தாலும் குயிலினங்கள்
சந்திப்பிழையின்றிக் கத்தும்//
நச்
@Chitra,
ReplyDelete@ஸ்வர்ணரேக்கா,
@அன்பரசன்,
[im]http://4.bp.blogspot.com/_e_TNZOEzeAo/TPna9WCLeBI/AAAAAAAAAbM/eM9TaJqiBmA/s1600/thanks.jpg[/im]
அன்புள்ள தோழருக்கு வணக்கம்,
ReplyDeleteதங்களின் வலைப்பதிவின் எழுத்து தரம், படைப்புத் திறன் ஆகியவற்றை பரிசீலித்து தங்களின் வலைப்பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளோம். இந்த இணைப்பில் ஆட்சேபனை இருந்தால் எமக்கு தெரிவிக்கவும், இணைப்பினை விரும்பினால் தவறாமல் எமது இணையப்பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றிகள்,
வலைச்சரம் நிர்வாகம்
http://www.valaicharam.com/
//காக்கைக் கூட்டில்
ReplyDeleteபிறந்தாலும் குயிலினங்கள்
சந்திப்பிழையின்றிக் கத்தும்//
அடாடா.... அருமை...
தண்ணீர் அலையடித்து ஜலதரங்கம் வாசிக்கும்... (நீச்சலுக்கான ஸ்பெஷல்!!)
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள். ;-)
@RVS
ReplyDeleteநன்றி நன்றி
இயற்கையின் மொழிகள்
ReplyDeleteஎண்ணிப் பார்த்தால்
எல்லாம் நம்மொழிகள்!
எந்தப் பக்கம்
வாய்திறந் தாலும்
இனிக்கும் செம்மொழிகள்!
பஞ்சபூ தங்கள்
பண்ணும் ஒலிகள்
பார்த்தால் கீதங்கள்!
பண்ணைத் திறக்கும்
பாதைகள் எல்லாம்
பைந்தமிழ் நாதங்கள்!
மலர்கள் சிந்தும்
மகரந்தங்கள்
மணத்தின் சந்தங்கள்!
உலகில் கேட்கும்
ஒலிகள் யாவும்
தமிழின் சொந்தங்கள்!
வாழ்க உங்கள் கவித் திறம் !
கவிஞர் கங்கை மணிமாறன்
செல்:9443408824