Pages - Menu

Saturday, October 6, 2012

நகரமயம்


பதியம் போட்டுப் புதிப்பிக்க
வேண்டிய உறவுகள் நேரமின்றி
செல்போன் டவர்களின் வாயிலாக
ஹலோ சொல்லி முறிந்து கொள்கிறது.

புத்தனுக்காக போதிமரங்கள்
காத்திருந்த வேளையில்
சாலை விரிவாக்கத்திற்காக
வெட்டப்படுகிறது

நகரெல்லாம் தாகம் தணிக்க
வந்த ஆற்றின் மீது
நரகலுடன்
சாக்கடை கலக்கப்படுகிறது.

விதைகள் பிரசவிக்கப் பொறுத்திருந்த
நேரத்திலே பறந்து
வந்தன பிளாஸ்டிக் பைகள்
தூக்குக் கயிறுகள் வடிவிலே

மெட்டல் சாலை போடும் வரை
காத்திருந்து தோண்டப்பட்டன
சாலைகள்
மூடப்படும் தேதியில்லாமல்

கனவிலும் மின்சாரம் வரக்கூடாதென்று
இரவெல்லாம் மின்வெட்டு
வருங்கால எடிசன்களை
டார்ச் கொண்டு தேடுகிறார்கள்

கீற்று இணைய இதழிலும் படிக்கலாம்

5 comments:

  1. ந(ர)கர மயத்தை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள் நண்பா.

    ReplyDelete
  2. super Kavithai very good narayanan chormpet

    ReplyDelete
  3. கனவிலும் மின்சாரம் வரக்கூடாதென்று
    இரவெல்லாம் மின்வெட்டு
    வருங்கால எடிசன்களை
    டார்ச் கொண்டு தேடுகிறார்கள்

    ///

    Good

    ReplyDelete
  4. புத்தனுக்காக போதிமரங்கள்காத்திருந்த வேளையில்சாலை விரிவாக்கத்திற்காகவெட்டப்படுகிறது.
    கருத்துள்ள வரிகள்.

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...நன்றி...

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது