Pages - Menu

Thursday, September 19, 2013

தற்கொலையும் தமாஷும்


"வாழ்க்கையே வெறுத்துப் போச்சு மச்சி. வாழவே பிடிக்கல"
"கவலைப் படாதடா ஏதாவது வழியிருக்கும்"
"அதான் உன் சமையல சாப்பிட வந்தேன்"

"எலி மருந்து விளம்பரத்தில நடிக்கக் கூப்பிட்டதும் ஏன் எலி மருந்தைப்போய் குடிச்சார் அந்த நடிகர்?"
"எதையும் பயன்படுத்தாமல் சிபாரிசு செய்யமாட்டாராம்"

"நீங்க ஊழல் குறைவா செய்கிறவுங்களுக்கு ஓட்டு போடுவீங்களா? இல்ல பணம் குறைவா இருக்கிறவுங்களுக்கு ஓட்டு போடுவீங்களா?"
"ஆயுள் குறைவா இருக்கிறவுங்களுக்குத் தான் எங்க ஓட்டு"

"உங்கள கைது செய்த நேரம் கட்சித் தொண்டர் ஒருவர் தீக்குளிக்கப் போனபோது எப்படி தடுத்தீங்க?"
"வட்ட செயலாளரா பதவி கொடுத்தேன்."

"தற்கொலை செய்யப்போகும்போதும் நகையோட போகனுமா?"
"அப்ப தான் பத்திரிக்கையில படமா வந்தா அழகாயிருக்கும்."

நடிகர்:"எனது படத்தைத் தடை செய்ததற்காக யாரும் தூக்கு போட்டுக்கொள்ள வேண்டாம்"
காவல் அதிகாரி:"தடை செய்யச் சொல்லித்தான் இவரு தூக்குப் போட்டுருக்காரு சார்"

"தேசப்பற்றைக் காட்ட அந்த டாக்டர் என்ன செய்தார்?"
"குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு பேஷண்டுகளை விடுதலை செய்தாராம்."

"தற்கொலை செய்ய தூக்கு கயிறு வாங்க போனீயே என்னாச்சு?"
"ரெண்டா வாங்கினா ஒன்னு freeயாம். அதான் ஆள்தேடிகிட்டுயிருக்கேன்."

"அமைச்சர் தற்கொலைக்கப்புறம் சிட்டியில யாரும் தற்கொலை செய்யவேயில்லையே! ஆச்சரியாமயிருக்கு!"
"இடைத்தேர்தல் வருதுல!"

"தற்கொலை செய்வது எப்படின்னு படம் எடுத்ததையே என்னாச்சு?"
"படத்த ரிலீஸ் செய்றதுக்குள்ள ப்ரோடியூச்சர் தற்கொலை செஞ்சிட்டார்"

"ஹெல்மெட் போட்டுக்கிட்டு ஏன் தற்கொலை செய்யப்போறீங்க?"
"முகம் தெரியாட்டி இன்சுரன்ஸ் கிடைக்காதாம்"

தூதன்:"போரிடாமலே வெற்றிக் கொடியை ஏற்றிக்கொள்ள கயிறு பரிசளித்த உங்களுக்கு எங்கள் அரசர் நன்றி தெரிவித்தார்"
எதிரி அரசன்:"போர்களத்தில் புறமுதுகிட்ட உங்கள் அரசனுக்கு நான் கொடுத்த தூக்குக் கயிறுடா அது."

"வாங்குதல் என்பதற்கும் எடுத்தல் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியுமா?"
"எவ்வளோ?"
"ரயிலில் நாம் ஏறினால் டிக்கெட் எடுக்க வேண்டும்; ரயில் நம்மீது ஏறினால் டிக்கெட் வாங்க வேண்டும்."

Disclaimer: தற்கொலை செய்வது உடல் நலத்திற்குத் தீங்கானது.

1 comment:

  1. "ரயிலில் நாம் ஏறினால் டிக்கெட் எடுக்க வேண்டும்; ரயில் நம்மீது ஏறினால் டிக்கெட் வாங்க வேண்டும்."..... ரயிலுக்கு பதில் 'அரசுப் போக்குவரத்து பேருந்தில்' என்று மாற்றினாலும் பொருள் மாற மறுக்கிறதே! - இராய செல்லப்பா

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது