வாசல்
கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர்
நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம்
வீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க
நிலமகளுக்கு நடந்தது அலங்காரம்
திசைகளுக்கு ஒரு பின்பமென எட்டும்
நிறத்திற்கு ஒரு முகமென ஏழும்
புள்ளிகளுக்குள் ஒளிந்து கொண்டது.
வளைவுகளும் வளையங்களும் மையத்தில் கூடி
சித்திரமொன்றைச் சிறைபடுத்தியது வாசல்
தாய்
அண்டங்கள் தாண்டி
ஆகாயத்தில் உலாவும்
மீன்களில் ஏதோ
இன்று என்கைகளில்
கலை மான் என்பேனா!
சத்திய மான என் சக்தி இது
சிஷ்டியில் விளைந்த
மூல சொத்து அது
பாலில் ஊறி
வளர்ந்த மலர்
பாரில் சாதிக்க
வந்த சிலை
கண்ணசைவில் காவியம்
முட்டி தட்டி தடுமாறும்
உதட்டசைவில் ஒவியங்கள்
நலிந்து மெலிந்து சிதையும்
நவசைவில் நாதங்கள்
பிறண்டு வரண்டு வாடும்
பூமிக்குப் புது வரவாக
பூவுக்குப் புது இனமாக
நாளைக்கு ஒரு தாயாக
இன்றைக்கு என் மகளாக
தமிழோவியம் தளத்தில் வெளிவந்தவை
http://www.tamiloviam.com/site/?p=2656
http://www.tamiloviam.com/site/?p=210
படவுதவி:கோலசுரபி
அருமை...
ReplyDeleteஇரணடாவது கவிதை சிறப்பு...