அரசியல் கட்சியைப் பொறுத்தமட்டில் இரண்டே இரண்டு நிலைப்பாடுதான். ஒன்று ஆளும் கட்சி அடுத்தது அதன் எதிர்க் கட்சி. அதிகாரம் மாறினாலும் நிலைப்பாடு மாறாது. அதன் தொலைக்காட்சி செய்திப்பிரிவும் ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா என்பதகேற்ப செய்திகளை அவரவர் கோணங்களில் வாசிக்கிறார்கள். ஒரே செய்தியை எப்படி அவர்களுக்குச் சாதகமாக வாசிக்கிறார்கள் என்பது தெரியாமல் மக்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக இதோ ஒரு ஒப்பீட்டு.
ஆளுங்கட்சி | எதிர்க்கட்சி |
---|
கட்சிப் பொறுப்பிலிருந்து அமைச்சர் விடுவிப்பு | அமைச்சரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது |
மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது | மின்கட்டணம் உயர்த்தப்பட்டது |
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் | கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர் |
துக்கத்தால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர் | கலவரத்தால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர் |
தாமாக முன்வந்து வெலைநிறுத்தம் செய்தனர் | வேலைநிறுத்தம் செய்ய கட்டாயப்படுத்தினர் |
பால் கொள்முதல் விலை உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி | பால் விலை உயர்ந்தது மக்கள் அவதி |
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு | பெட்ரோல் விலை அதிகரிப்பு |
ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது | ஜாமீன் வழங்க மறுப்பு கோரிய மனு தள்ளுபடி |
எதிர்க்கட்சியினர் சூழ்ச்சியில் ஈடுபட்டனர் | ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் |
சாலை மறியல் செய்தவர்களைக் காவல்துறை அப்புறப்படுத்தியது | மாணவர்கள் சாலை மறியல் செய்தனர் |
வழக்கம் போல பேருந்துகள் இயங்கின | பலபகுதிகளில் பேருந்து இயங்கவில்லை |
நகரெங்கும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டது | நகரெங்கும் விளம்பரத் தட்டிகள் வைத்து இடையூறு |
சாலையோர ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றம் | ஏழை மக்கள் விரட்டியடிப்பு |
விழாவில் நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார் | நலத்திட்ட விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார். |
மர்மக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டவருக்குத் தீவிர சிகிச்சை | டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அவசரப் பிரிவில் சேர்ப்பு |
மூன்றாண்டுச் சிறை, பத்துக் கோடி அபதாரம் விதித்து தீர்ப்பு | வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் |
2016 மார்ச் 26
தினமலர் இதழுக்காக எழுதியது
இது தொல்லைக்காட்சிகளுக்கு மட்டுமல்ல; அச்சு ஊடகங்களுக்கும் பொருந்தும்.
ReplyDeleteநான்காவது வரியில் சிறு பிழை. மாறினாலும் - மறினாலும்.
ReplyDeleteதங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நான்காவது வரியில் சிறு பிழை. மாறினாலும் - மறினாலும்.
ReplyDeleteதங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
The website presents assist in a variety of|quite so much of|a wide range 1xbet of} languages, including Polish and Italian. For your peace of thoughts, this on-line casino is approved by iTechLabs, which ensures truthful gaming classes above all. Slots.lv is famous for its impressive selection of video slots, but it’s high quality over amount kind of technique right here. But how wouldn't it turn into quantity one} on-line casino and not using a|with no} top-notch bonus? If you opt for crypto deposits – wait for it – you'll unlock 400% up to as} $4,000. You can use the additional funds you get on many of the video games at Super Slots.
ReplyDelete