சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மையமாக வைத்து எழுதி, இசையோடு வெளிவந்த பாடல்.
பல்லவி:
வருடம் வருடம் வைகாசி
வெப்பம் கூடுது கால்வாசி
மரங்கள் நட்டவன் மகராசி
நாம் என்ன பண்ணோம் நீயோசி
அனுபல்லவி:
சூட்டை தனிக்க ஊட்டி எதற்கு
செலவழிச்சா இடிக்குது கணக்கு
வெயிலுக்கு பயந்து ஓடுவது எதற்கு
இயற்கையை மதித்தால் கோடை உனக்கு
சரணம்1:
ஏசி மீது மனிதனுக்காசை
மனிதன் மீது ஏசிக்காசை
பேனு மீது மனிதனுக்காசை
மனிதன் மீது பேனுக்காசை
பில்தான் கடைசியில் ஜெயிக்கிறது
பணம் கட்டும்போது மனது பதைக்கிறது
வீட்டைச் சுற்றிச் செடிகளை நட்டால்
அதுதான் உனக்கு ஏற்காடு
ஊரைச் சுற்றி விதைப்பந்துகள் இட்டால்
அது தான் உனக்கு வயநாடு
மரங்களை வெட்ட மறந்துவிடு
குளங்களை வெட்டி குவித்துவிட்டு
சரணம்2:
சாறு இருக்கு கூழும் இருக்கு
குளிர்பானங்கள் உடலுக்கு எதற்கு
பழமும் இருக்கு காயும் இருக்கு
நொறுக்கு தீனியைக் கொஞ்சம் ஒதுக்கு
பகுத்து உண்பது காக்கையடா
பகுத்து அறிவது வாழ்க்கையடா
பந்தல் போட்டு மோரு கொடுத்தால்
நகரவாசிகள் புசிப்பாங்க
கிண்ணம் போட்டு நீரு கொடுத்தால்
ஜீவராசிகள் பிழைப்பாங்க
உன்னைச் சுற்றிக் குளிரவிடு
உலகின் சிரிப்பில் குளிர்ந்துவிடு
பாடல்வரிகள்:நீச்சல்காரன்
இப்பாடலை செயற்கை நுண்ணறிவு கொண்டு இசைப்பாடலாகவும் கேட்கலாம்.
No comments:
Post a Comment
தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது