Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, September 26, 2024

 மதுரையில் செப்டம்பர் 28 2024ல் நடைபெறும் டிஜிட் ஆல் நிகழ்விற்காக எழுதிய வரவேற்புப் பாடல் வரிகள்.


[பல்லவி]

கூடல் மண்ணே இது டிஜிட் ஆல் சங்கமம்

கூடி வருதே இனி எல்லாம் எண்ணியம்


[அனுபல்லவி]

கூடல் மண்ணே இது டிஜிட் ஆல் சங்கமம்

கூடி வருதே இனி எல்லாம் எண்ணியம்

உலகம் போகுது விரைவாக; அதில்

நாமும் போகலாம் முறையாக;

இணையம் கடந்து,

முனைவோம் வெகுண்டு,

வெல்வோம் இணைந்து.


[சரணம்1]

ஏட்டில் எழுதி கணக்கு போட்டால் செலவுபோகுது கூலி 

டிஜிட்டல் செயலி கணக்கு போட்டால் மிச்சமாகுது நாழி

கூட்டிக்கழிச்சு சரக்கை எடுத்தால் போனியாகல பாதி

வாங்கும் திறனைப் பார்த்து கொடுத்தால் வித்துபோகுது மீதி


நுட்பம் அதை அறியணும்

முனைப்பை விதை

லாபம் அது பெருகணும்

யுபிஐ துணை


தொழில் வளருவதும் வளம் பெருக்குவதும்

டிஜிட் ஆல் சங்கமம் தான்

அதில் கலந்து கொண்டு கற்று கொண்டு

தொடர்வோம் புது அத்தியாயம் தான்



[சரணம்2]

வாடிக்கையாளர் வருவதில்லையே தானாகக் கேட்டு

வணிக வாய்ப்புகள் வந்து குவியுது இன்ஸ்டாவைப் பார்த்து

காகிதத்தோடு விளம்பரம் தந்தோம் சுவருமேலே ஒட்டி

இப்ப மார்கெட்டே வந்து விளம்பரம் தருது போனுக்குள்ளே நீட்டி


நுட்பம் அதை அறியணும்

முனைப்பை விதை

லாபம் அது பெருகணும்

யுபிஐ துணை


தொழில் வளருவதும் வளம் பெருக்குவதும்

டிஜிட் ஆல் சங்கமம் தான்

அதில் கலந்து கொண்டு கற்று கொண்டு

தொடர்வோம் புது அத்தியாயம் தான்


வரிகள்: நீச்சல்காரன்

செ.நு இசையுடன் கேட்டும் மகிழலாம்



Next
This is the most recent post.
Older Post

1 மறுமொழிகள்: