பண்டிகைக்கு செலவழித்தபின்:  | 
| பொங்கலுக்கு மறுநாள் கடிச்ச கரும்பெல்லாம் சக்கை தீபாவளிக்கு மறுநாள் வெடிச்ச வெடியெல்லாம் குப்பை  | 
| பேருந்து படிக்கட்டில் | 
| படிகட்டில் பயணிப்பவர்களுக்காக அவசர ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது  | 
| மாமூல் வாங்க வரும் காவல்துறை வண்டியில் | 
| காவல்துறை உங்கள் நண்பன் உங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும்  | 
| ஆர்.டி.ஒ. அலுவலகத்திற்கு முன் ஒரு சாமானியர்வண்டியில் | 
| நாய்கள் ஜாக்கிரதை லஞ்சத்தைத் தவிர்ப்போம்  | 
| சிகரெட் விற்கும் சிறு வியாபாரியின் கடையில் | 
| costly சிகரெட் குடிச்சாலும் Mostly உயிரைக் கரைக்காமல் விடாது.  | 
| நியாயவிலைக்கடையில் (ரேஷன் கடை) | 
| உங்கள் ரேஷன் கார்ட்டுகளுக்கு என்ட்ரி முற்றிலும் இலவசம் இச்சலுகை ஸ்டாக் வரும் வரை மட்டுமே  | 
| தண்ணி லாரியில் | 
| மழை நீரை சேமியுங்கள் தவணை முறையில் தாகத்தைத் தீருங்கள்  | 
| கல்யாண மண்டபத்தின் மொய்யெழுதுமிடத்தில் | 
| எங்க மனசு நிறைய, பந்திக்கு வாங்க உங்க மனசு குளிர, மொய்யிட்டு போங்க  | 
| ஒரு ஹோட்டல் கடையில் | 
| காசுயில்லாவிடிலும் மாவாட்டத்தெரிந்தவர்களுக்கு இடயொதிக்கீடு வழங்கப்படும்  | 
| ஒரு ப்ளாக்கரின் பி.கு.பில் | 
| இதைப் பார்த்து கோவப்படவே சாபமிடவோ கூடாது மீறினால் சிரிப்புப் போலீஸ்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்  | 
வால்முளைத்த வாசகங்கள்
Info Post
சில சமயம் ரெண்டுப் பக்க அறிவுரையை ரெண்டு வரியில் ரெண்டு அர்த்தத்தில் சொல்லும் வாசகங்களைக் கண்டதுண்டு. அதுபோல முயற்சித்ததில் சில கற்பனைகள்
8 மறுமொழிகள்:
நல்லா இருக்கு. :)
காவல்துறை உங்கள் நண்பன்
உங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும்
........ ha, ha, ha ..... very funny!
வி.பாலகுமார்,
chitra கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
//இதைப் பார்த்து கோவப்படவே சாபமிடவோ கூடாது. மீறினால் சிரிப்புப் போலீஸ்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்//
யோவ் என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குற?
//யோவ் என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குற?//
சிரிப்பு போலீஸ் சார் சிரிட்டு போங்கசார் :)
’திருடர்கள் ஜாக்கிரதை’ மாதிரி ... :))
பேருந்தில், படியில் பயணம் விரைவில் மரணம்!படியில் பயணம் விரைவில் திருமணம்!பகிர்விற்கு நன்றி.
பண்டிகைச் செலவு, தண்ணீர் & சிகரெட் அருமை.
Post a Comment