வறுமையால் கல்லைக்கட்டி
விழுந்தப் பின் தெரிந்தது
கிணற்றுக்குள் தங்கக்கட்டி
ரேஷன் அரிசி விலை சரிவு
மூட்டைக் கடத்துபவர்கள்
வாழ்வு இனி உயர்வு.
வேற்றுமையில் ஒற்றுமை கொஞ்சம்
எங்கு சென்றாலும் இந்தியாவில்
புரிந்துகொள்ளும் ஒரே மொழி லஞ்சம்
சந்தோசமாக விலங்குகள் சரணாலயம்
பார்வையாளர்கள் குறைந்ததால்
வருத்தத்துடன் மனிதரின் முதியோராலயம்
எங்கள் சார்பாக அனுப்பினார்கள்
பதினேழு கோரிக்கைகள்.
எங்கள் சார்பாகவே அமுக்கினார்கள்.
பட்டுடுத்தும் அந்தக் குழுக்கள்
ஆடையைப் பிச்சை வாங்குமிடம்
அம்மண பட்டுப் புழுக்கள்
"மழைநீரை சேமிப்போம்"
மண்தரையை மாசாக்கி
இப்பதாகையை மட்டும் காமிப்போம்
குழந்தைகளுக்கு மூச்சு சிக்கும்
காரணம் எரிக்கப்படும்
பிளாஸ்டிக் விஷத்தை கக்கும்
இழக்கவில்லை எந்தவொரு சேதாரம்
மீனவர்களை எண்ணிப்பாருங்கள்
யாருமில்லை உயிருடன் ஆதாரம்.
உறங்கிக் கிடக்கும் மனித விழிகள்
திறக்கும் நேரத்தை தீர்மானிப்பது
அதிகாலை அலார ஒலிகள்
லிமரைக்கூ -ரெண்டு ரூல்ஸ்,
மொத்தம் மூன்று வரிகள்
முதல்வரியும் கடைசி வரியும் ரைமிங்காக முடியவேண்டும் இடையிடையே மோனையையும் பயன்படுத்தலாம்.
00 0 0 0 00 0 0 0 00 000 000 000000 00000 00000 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 00000000 000000000 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 00 0 0 00 0 00000000 0 0 0 0 0 0000 0 0000 0000 0
http://www.vaarppu.com/view/2382/ வார்ப்பிலும் வெளிவந்துள்ளது
I already read like this in writer sujatha books . . . You done Good job
ReplyDelete////////
ReplyDeleteவறுமையால் கல்லைக்கட்டி
விழுந்தப் பின் தெரிந்தது
கிணற்றுக்குள் தங்கக்கட்டி ///////
கண் கெட்டப்பின் சூரிய உதயம் என்பார்கள்..
அழகிய சிந்தனை...
ஒவ்வொன்றும் ஒரு உண்மையை சொல்கிறது...
ReplyDeleteஅசத்தலான துளிப்பாக்கள்...
தொடருங்கள்..
அன்புடன்
கவிதை வீதி சௌந்தர்..
தங்கள் தளத்தில் எல்லாவற்றிலும் வித்தியாசம் தெரிகிறது..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அசத்தலாயிருக்கூ லிமரைக்கூ :-)
ReplyDeleteஅருமை ... நானும் முயற்சிக்கிறேன்
ReplyDeleteஇன்று தான் இடுகையைக் கண்டேன்
ReplyDeleteஅழகான பாக்கள்
வாழ்த்துகள்
இன்னும் சில பாக்கள்
மிகவும் சிறப்பாக இருக்கிறது...எங்கள் சார்பாக அனுப்பினார்கள் பதினேழு கோரிக்கைகள். எங்கள் சார்பாகவே அமுக்கினார்கள். இப்படியேதான் நடக்கிறது... நடத்துகிறார்கள் நாடகத்தை...பாராட்டுகள்...
ReplyDelete