சாக்கடை என்பது என்ன?
விதவிதமான பதில்கள்...............
*இந்த ஒரு கேள்விக்குரிய வேறு சுவாரசிய பதில்களையும் கருத்திட்டும் சொல்லலாம்.
விதவிதமான பதில்கள்...............
- அசுத்த நீரைக் கொண்டிருக்கும் அருவருப்பான இடம்
- இந்திய அரசியல்
- நம்முடைய அசுத்தத்தைக் கொண்டு செல்லும் ஒரு இடம்
- கழிவு நீரைக் கடத்தும் வழிப்பாதை
- அசுத்தமாகப் பட்ட புனித நதிகள்
- மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரைக் கடத்திச் செல்லும் தண்ணீர் லாரி
- கழிப்பறைகளின் சீதனம்
- ஆறுகளை நாறடிக்க மனிதன் கண்டுபிடித்த நூதன திட்டம்
- பக்கத்து வீட்டுடன் சண்டை போட கிடைக்கும் சான்ஸ்
- தண்ணீர் பஞ்சத்தை தீர்மாணிக்கும் சிமிண்டு தொட்டி
- சிலருக்கு வாழ்க்கைக் கொடுக்கும் ஆலயம்
- பதவியிருக்கையில் டெண்டர் விட கிடைத்தவொரு வாய்ப்பு
- ஊழல் நடக்கும் எல்லா இடமும்
- மழைக்காலத்தில் தூங்கவிடாமல் வீட்டுக்குள் வரும் வேண்டா விருந்தாளி
- பேப்பர் கப்பல் விடும் இடம்
- உயிர் பல்வகைமை கொண்ட உள்நாட்டு நீர் ஆதாரம்
- சீ ச் சீ தள்ளி நில்லுங்க
- பெருச்சாளிகளின் கூடாரம்
- அந்த மூடி போட்டு மூடியிருக்கும் பள்ளம்
- சுகாதாரம் காக்க, நீராதாரம் கடத்த உருவாக்கப்பட்ட சாலை
- கடலில் கலக்கும் தற்கால கால்வாய்கள்
- பணம் படைத்தவர்கள் பார்த்திடாத இடம்
- சென்ட் அடித்தவர்கள் மூக்கை மூடிச்செல்லும் இடம்
- பன்றிகளின் பரிணாமத் தொட்டில்
- நகரத்து அஃறிணைகளின் குடிநீர் குளங்கள்
- நீர் சதுரங்கள்
- தலைவர் வயிறு
- மழை நீர் சேமிக்காத மடையர்களின் வடிகால்
- சிந்து நாகரீகத்தில் சிந்திக்கவைத்த நீர்மேலாண்மை
- புவியீர்ப்பில் புரளும் தண்ணீர் ஜடம்
- பராமரிக்கப்படாத உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து
- வைகை
- சாயப்பட்டறையின் புதலவர்
- கொசுக்களின் கோடை மாளிகை
- மனிதர்களை விழுங்கும் புதைக்குழி
- குடிகாரர்களின் மாமியார் வீடு
- மின்சாரம் தேவைப்பாடாத பெரிய நெட்வொர்க்
- தேர்தல் முடிந்தப்பின் வாக்குறுதிகள் செல்லுமிடம்
*இந்த ஒரு கேள்விக்குரிய வேறு சுவாரசிய பதில்களையும் கருத்திட்டும் சொல்லலாம்.
அசத்தல் நண்பரே !
ReplyDeleteசுகாதாரமான நாட்டினையும் அல்லாத நாட்டினையும் ஒன்று சேர்க்கும் இடம்.கூடி வாழ முடிவெடுத்த மனித இனத்தின் அடையாளம்மனிதனுக்கு வியாதி வந்ததற்கான முதல் காரணிமனித இனம் உயிரோடிருப்பதற்கான சாட்சி
ReplyDelete