Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Wednesday, October 14, 2009

எனது வலைப்பூக்களில் முதன்முறையாக திரைக்கு வராத நடிகர்களின் புத்தம்புதிய கவிதைகள்.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சினு நடிகர்களை பேட்டியெடுக்கிறது. ஆனால் இங்க திரைக்கு வராத நடிகர்களின் கவிதை திரத்தை போட்டிகாண்போம் (ஆமாம் கவிதை போட்டிதான்)

ஏவ்டெல் சூப்பர் கவிஞர்



முதலில் நகைச்சுவை நடிகர் ரிவேக் தமிழக பேருந்தைப்பற்றி ஒரு கவிதை எழுதினால் இதோ ரிவேக் கவிதை

நகரும் பெட்டிக்குள்
நாட்டியமிடும் நட்டுக்கள்
தகர வண்டிக்குள்
தாளமிடும் தட்டுக்கள்
கார்ப்ரேஷன் டேங்குக்குள்
கரிபிடுச்ச கைபிடிகள்
அது பேருதான் சிட்டி பஸ்


அடுத்ததாக மும்பை நடிகை வம்பா தமது தமிழில் ஒரு கவிதைபாடவருகிறார் இதோ வம்பா கவிதை

கொஞ்சம் கொஞ்சம் தண்ணி ஊத்தி
கொஞ்சம் கொஞ்சம் பால் ஊத்தி
கொஞ்சம் கொஞ்சம் குளிப்பாட்டி
கொஞ்ச நாள் வளர்த்த பப்பி
என்னை கொஞ்சாமல் ஓடியது தப்பி

**claps from audience**

பெரிய நடிகர் ஒரு சின்னக்கவிதை கூற வருகிறார் இதோ பிவபு கவிதை

அவள் பேச்சு என்னை உரசிப்பார்க்கிறது
அவள் செவி செய்கூலி கேட்கிறது
அவள் விழி என்னை சேதாரமாக்கியது
மொத்தத்தில் 21 கேரட் கோல்ட்
இவ்வளோ கம்மி வயதிலா


அடிக்கடி ஹோட்டலில் மாட்டி திருட்டு முழிமுழிக்கும் திரு பாண்டியவாஜ் தனது கவிதையை படைக்கிறார் இதோ

சுத்தி பார்த்தேன் மலைக்கோட்ட
ஹொட்டலுக்கு போனே FULL கட்ட
முன்னாடி பார்த்தேன் பாக்கெட் ஓட்ட
பின்னாடி போனே மாவு ஆட்ட


ஆச்சியெனப்படும் திரு மனோவம்மா தனது சென்னை தமிழில் தொழில் முனையோருக்காக ஒரு கவிதையை எடுத்து வைக்கிறார் இதோ

நஷ்டம்னா வூட்டாண்ட வந்து
வட்டிக்கு காசவாங்கி
எண்ணு
கஸ்டம்னா பீச்சாண்ட குந்து
தேங்காவச்ச சுண்டல்வாங்கி
துண்ணு


அதிகமாக ரோமான்ஸ் செய்யும் நடிகர் காவ்த்திக் தனது தொப்பியை சரிசெய்தவாறே ஒரு கவிதை, இதோ

இவ அம்மா எனக்கு ஆன்டி
அதனால செய்வே லூட்டி
கிழட்டு நாய காட்டி
நா சொன்னே இதாவுங்க பாட்டி


தனது கணமான குரலில் வரதட்சணையைப்பற்றி ஒரு கவிதை கூறுகிறார் மேஜர் சுந்தவ்ராஜன் இதோ

இவர் தன் மாமனாரு
he is your uncle
கேட்கலாம் AC MARUTI காரு
can ask ac maruthi car
ஓசியா அழைப்பு வரும் பாரு
offering will come
உங்க மாமியார்வீடுனு பேரு
that is our police car

**blast from audience**

இப்பொழுது இளம்நடிகர் திரு ரிஜய் ஒரு அழகான தெலுங்கு கவிதையை ரீமேக் செய்து படிக்கவருகிறார் இதோ ரிஜய் கவிதை

சைவக்கொக்குண்ணா
வேட்டையாடப்போச்சா
விடியவிடிய காத்திருந்து
கோட்டையவிட்டு வந்துச்சா
தப்பிச்ச மீனெல்லாம்
அடுத்தநாள் குழம்பிலதுள்ளுச்சா

**shrill from audience**

ரொம்பநாள சிக்காமயிருந்த நடிகர் கருண்டமணி ஒரு கவிதையாய் கடிக்கிறார்

அதுவே பல்லு போன தாத்தா
அதுக்கு முறுக்குவிக்கிறயே ப்யூட்டி
இந்த பசங்கலெல்லாம் டேட்டி
ஐயாம் பிரம் ஊட்டி
பாக்கெட் யென்ன விலை ஸ்வீடி

**applaud from audience**



கடைசியாக வரும் நடிகர் திரு. அஜீத் குமாவ், கடைசியல்ல தலதான்யென ஒரு மரபுக்கவிதையை பாடுகிறார் இதோ

அது யெனப்படுவது
யதெனில்
அது அதுவாக
அறியும் வரை
அது அதுதான்

**whistle from audience**

உங்களுக்கு பிடிச்ச சூப்பர் கவிஞர் யாருனு உடனே *54321 நம்பருக்கெல்லாம் மெசேஜ் அனுப்ப வேண்டாம் கீழேவுள்ள பெட்டியிலே பிடிச்ச கவிஞர தேர்ந்தெடுஙக



பி.கு. ர'கரம் வ'கரமாகவும் வ'கரம் ர'கரமாகவும் திரியவில்லையென உறுதிபடுத்திக்கொள்கிறேன்
பி.கு.யாரையும் காயப்படுத்தயெழுதவில்லை ரசிப்பதற்காக மட்டுமே

5 மறுமொழிகள்:

நையாண்டி நைனா said...

எல்லாம் டாப்பு...

Prathap Kumar S. said...

எல்லாமே கலக்கல், அதிலும் மேஜர் சுந்தர்ராஜன் படுஜோர்... கலக்கு தலைவா...

karthikn7 said...

I don't know when you people stop hurting others in the name of freedom of speech and write.
You can can never make all people to laugh by hurting others.

நீச்சல்காரன் said...

மக்களால் ரசிக்கப்படுமாயென தயங்கி எழுதிய புது முயற்சிக்கு பலன்கிட்டியுள்ளது போலுள்ளது
நன்றி நையாண்டி நைனா & நாஞ்சில் பிரதாப்

நீச்சல்காரன் said...

karthikn7,
I would like to offer my due apologies for inconvenience happen to you. This is not to peeve anybody but I tried to express some different views of expression. I will make sure to shun in upcoming posts.
thanks