Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, January 24, 2010

கஷ்டப்பட்டு எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை எளிதாகக் குறைக்கூற நான்விரும்பவில்லை, ஈழத்தமிழர்களின் சோகத்தைப் பதிவு செய்வதாகக் கூறினாலும் அதில் காட்டப்படும் வன்முறையில் ஒப்பமில்லை. பிரம்மாண்ட தயாரிப்பும், பிரம்மாண்ட உழைப்பும் முடிவில் ஏமாற்றத்தைத்தான் விதைத்துவிட்டது. ஏதோ எனது கற்பனையில் சற்று மாற்றாக இந்த ஆயிரத்தியறுபதில் ஒருவன்.

2004 ஆண்டு வந்த சுனாமியின் பாதிப்புக்கள் பற்றிய அகழ்வாராய்ச்சிச் செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் யாருக்கும் தெரியாமல் அந்தமானிலிருந்து ராகிணி (காவல்துறை அதிகாரி),அலமேலு (காணாமல் போன தொல்பொருள் ஆய்வாளர் மகள்), குப்பன்(ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி), சுப்பனும் அவனது கூட்டாளிகளும்(தூத்துக்குடி ரவுடிகள்) சில தனியார் செக்கூரிட்டிஸ் என ஒரு பட்டாளம் வியட்நாம் அருகேயுள்ள தீவை நோக்கி பயணிக்கிறார்கள். இவர்களின் திட்டப்படி இவர்களின் பாதுகாப்பிற்கு 3 நாள் இடைவெளியில் மற்றொரு கள்ளக்கப்பலில் மேலும் பல ரவுடிவீரர்கள் இவர்களை பின்தொடர்வார்கள். இந்த பயணங்கள் எல்லாம் எந்த நாட்டுக்கும் தொரியாமல் ரகசியமாக நடைபெறுகிறது. சுப்பனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் இந்த பயணம் ஒரு புதையல் வேட்டையாகத்தான் எண்ணுகிறார்கள். அலமேலுவை பொறுத்தமட்டில் இந்த பயணம் தீவில் காணாமல் போன தந்தை தேடுவதற்காக தீவை நோக்கிப் பயணிக்கிறாள். குப்பனும் பாதுகாப்பாளர்களும் ராகிணிக்கு துணையாக தீவிற்குச் செல்கிறார்கள். ராகிணியோ புதையலுக்காகவும் தொல்பொருள் ஆய்வாளரை மீட்கச் செல்வதாகவும் கூறிச் செல்கிறாள். ஒவ்வொரு மணி நேரத்திலும் வெவ்வேறுப் பிரச்சனைகளை எதிர்கொண்டுக் குப்பனும் சுப்பனும் உதவ அலமேலுவின் தந்தையின் பழையக்குறிப்பின் படித் தீவைச்சென்றடைகிறார்கள்.


இங்கே தீவினுள், 13நூற்றாண்டில் சோழ-பாண்டிய போரில் தங்கள் இனத்தைக் காத்துக்கொள்ள சோழர்களின் சிறு குழு சோழ இளவரசனுடன் இங்கு வந்துள்ளது. மன்னரின் உத்தரவுபடி தூது வரும்வரை காத்திருக்க வேண்டுமென்பதும் அழைப்பு வராவிட்டால் பெரிய படைகளுடன் நாடுதிரும்புமாறும், அதுவரை அங்கேயேயிருந்து தமிழ்வளர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது. அதனால் சோழயினம் மின்சாரமும் உலக அரசியலும் தெரியாமல் அந்தத் தீவிலுள்ளேயே இன்றுவரை வாழ்ந்துள்ளனர். மின்னெந்திரங்கள் எட்டிப்பார்க்காதக்காலத்திலேயே தஞ்சை கோயிலைக் கட்டியமூத்தக்குடி சோழர்கள் இன்று எண்ணிப்பார்க்கமுடியாதளவு பூலோகத்திலும், வானசாஸ்திரத்திலும் தங்கள் அறிவை விசாலப்படுத்தியுள்ளனர் ஆனால் அண்டைநாட்டினர் பற்றிய தெளிவுகளில்லை. இன்னும் தமிழ் மரபுகாக்கப்படுகிறது, கலம்பகங்களும் உலாக்களும் மட்டுமன்றி புதியகோணங்களில் தமிழெழுத்துக்களும் ஆக்கம்பெறுகிறது. வயல்களும் தோப்புகளும் குறுகியநிலங்களுக்குள் மாசின்றி ஜிவனத்திற்கு வழிசெய்கிறது, கடல்மூழ்கிகளும் கடல்கப்பல்களும் கட்டுமானப்படுகிறது, சூரியனும் சந்திரனும் நாழிகளைக் கணிக்கிறது.

இப்படியொரு தமிழினம் வாழ்கிறதேயென தெரியாமல் சென்ற ராகிணிகுழுவினருக்கு ஒரு செய்தி தமிழகத்திலிருந்துக் கசிகிறது: "இந்தியவிற்குக் கிழக்கே சுமார் 400மைல் தொலைவில் பல கப்பல் நங்கூரங்கள் தமிழகம் நோக்கியவாறே கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்படுகிறது. அருகே உள்ள சுவடுகளை வைத்துப்பார்த்ததில் இவை சுமார் 88ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான போர்க்கப்பல்களின் நங்கூரங்கள் என கணிக்கப்படுகிறது. உலக கப்பல்களின் கட்டுமானத்திற்கு அப்பாற்பட்ட அளவுகளிலும் வடிவங்களிலும் காணப்படுகிறது."

அந்த தீவைச்சுற்றியுள்ள நாடுகளின் பார்வை பட்டதால் பல கதைகளும் புனைவுகளையும் மீறி இத்தீவை ஆய்வுசெய்ய ஜப்பானிலிருந்து ஒரு குழு தீவுக்குவருகிறது. சோழநாட்டிலிருந்து தூதுவருமென காத்திருந்த இந்த சோழர்களுக்கு ராகிணிக்குழுவில்வந்த சில குண்டர்கள் சிக்கிவிடுகிறார்கள். குண்டர்களுக்கும் சோழர்களுக்கும் காலமாற்றத்தால் தகவல்பரிமாற்றம் நடக்கவில்லை அங்கிருந்து குண்டர்கள் தப்பித்துவந்துக் குழுவில் நடந்ததைக் கூறுகிறார்கள். யாருமில்லாத தீவுயென எண்ணிய இவர்களுக்குக் காட்டுவாசிகள் இருப்பது அதிர்ச்சியைத்தருகிறது. ஆனால் அவர்களிடமிருந்த அத்திப்பூவாலும் புலிச்சின்னத்தாலும் சோழர்களை அடையாளம் காண்கிறார் ராகிணி. சோழர்கள் இறந்ததாகக் கருதிய ராகிணிக்கு இது துரதிர்ஷ்டமே. தான் பாண்டிய இனத்தவளென்றும் சோழர்கள் கடத்திவந்த பாண்டிய நாட்டு தங்கத்தையும், பாண்டிநாட்டு ரகசியத்தையும் மீட்கவே வந்ததாகவும் இதற்காக 800 ஆண்டுகளாக எங்கள் பரம்பரைக் காத்திருந்ததுயென்றும் உண்மையைக்கூறி ஒரு திட்டம் போடுகின்றனர்; புதையல் ரகசியத்திற்காகவும் தந்தையைக் கண்டுபிடிப்பதற்காகவும் சுப்பனும், அலமேலும்,குப்பனும் சோழதூதுவராக ராகிணியுடன் நடிக்கச் சம்மதிக்கின்றனர்.

சோழவேசம் போட்டு சென்ற இந்த நால்வரை ஜப்பானியக்குழுத் தீவுவாசிகளெனயெண்ணி பிடிக்கிறார்கள் ஆனால் இந்த நால்வரோ ஜப்பானியர்களை நவீன சோழர்களெனயெண்ணி தாக்கிக்கொன்றுவிடுகிறார்கள். அப்போழுது நால்வரும் உண்மையான சோழர்களிடம் சேர்கிறார்கள். சோழர்களது ரகசிய பாடலைப்பாடாததால் அனைவரையும் சந்தேகித்து சிறையிலடைகிறார்கள்.அங்கே அலமேலுவின் தந்தையை சந்திக்கின்றனர்; தூதாகயில்லாமல் வரும் அன்னியர்களை அடைத்துவைக்கின்றதாகவும், மேலும் 1060 பௌர்ணமிகளுக்கு(88 ஆண்டுகள்) முன் தமிழகம் அனுப்பிய இவர்களின் போர்க்கப்பல்கள் திரும்பிவராததாலும், 60பௌர்ணமிகளுக்கு(5 ஆண்டுகள்) முன் அனுப்பிய தூதுக்கப்பல்களும் திரும்பிவராததாலும், வரும் அம்மாவாசையன்று தமிழகம் நோக்கி சோழர்கள் படையெடுக்கப்போவதாகவும் கூறுகிறார். தமிழகம் நோக்கி படையெடுக்கப்போகும் சோழர்கள், பாண்டியர்களுடன் தான் போரிடப்போகிறார்களென மனம்குமுறி தங்களை 3 நாள் பின்தொடர்ந்துவந்தக் கப்பலுக்கு சோழரைத்தாக்க குப்பன் மூலமாக உத்தரவுயிடுகிறார் ராகிணி.

இதற்கிடையில் நாகப்பட்டினத்திற்கருகே 2004 சுனாமியால் சிதைக்கப்பட்ட மேலும் ஒரு கப்பல் அதே கட்டுமானத்துடன் கண்டுபிடிக்கப்படுகிறது இதனால் அன்னியனாட்டுப் போர்க்கப்பலாக இருக்குமென தமிழகத்தில் ஒரு அச்சம் நிலவுகிறது.சோழர்கள் இன்று வேளாண்மையில் புதுப்புது யுத்திகளை கையாழுகிறார்கள்; முன்காலத்து தலைமுறையினருக்கு மண்டபங்கள் வைத்துள்ளனர்; பாண்டிய தங்கங்களையும், மதுரைச்சுவடிகளையும் நேசிக்கிறார்கள்; அவர்களின் பிரியத்தில் கைதிகள்கூட ஆனந்தப்படுகிறார்கள்; லஞ்சங்களில்லை, மனதில் அழுக்காறில்லை, வணிகபுத்தியில்லை, வறுமையில்லை, குரோதமில்லை; சோழர்களின் வெகுளி மனம் சுப்பனையும், அலமேலுவையும் கவர்கிறது. நவீனக்கருவிகளுடன் வந்திறங்கிய ரவுடிகும்பலுக்கும் சோழர்களுக்கும் சண்டைமூழ்கிறது. சோழர்களின் (Bio-weapons)உயிரிஆயுதங்களால் ரவுடிகள் வீழ்கிறார்கள். ஜப்பானியர்களை தேட வந்த ஜப்பானியதனிப்படை சோழர்களின் போர்திறம் கண்டு மிரண்டு உலகையே அந்தத் தீவை நோக்கிப் பார்க்கச்செய்துவிட்டனர். இந்தியாவுள்ளிட்ட தமிழர்கள் வாழும் தேசங்களிலிருந்து தூதுப் பறக்கிறது; சோழரின் புகழ்கொடி சீறிப்பறக்கிறது; குப்பனும் அவரது ஓய்வுபெற்ற ராணுவதினர்களும் சோழர்களின் மகிமையறிந்து மாறுகின்றனர். 1060 பௌர்ணமிகளுக்கு முன் வரை இவர்களின் முன்னோர்கள் பாண்டியர்கள்மீது கோபமாய் படையெடுத்தது உண்மைதான் என்றும், சென்றவர்கள் திரும்பவில்லை ஆனால் இன்று இவர்களுக்குள் வெறுப்பில்லை, மக்கள் அஞ்சுவதுபோல தமிழகத்தையோ பாண்டியரையோ தாக்குவது நோக்கமல்ல 60 பௌர்ணமிகளுக்கு முன்(2004) உறவுபேச சென்ற சோழர்களின் கப்பலும் திரும்பிவராததால் தான் தமிழகத்திற்கு ஆப்பத்துயெனவஞ்சித்தான் கப்பல்களைத் தயார்படுத்தினோம் என்கிறார் சோழவரசு. ராகிணி மனம்மாறி திருந்துகிறார். 1060 பௌர்ணமிகள் கழித்து தாயகம் நோக்கி அறிவுப்பெட்டகத்துடன் சோழர் பாண்டியர்..சாதிகளற்ற தமிழன் என்ற ஒருவனாக வருகிறார்கள்.

5 மறுமொழிகள்:

ram said...

வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும் :)

Anonymous said...

தம்பி படத்துல காட்டுன சோழர்கள்தான் உண்மை. இப்படி கதைய அளந்து சோழன பெரியாள காட்டாதே

நீச்சல்காரன் said...

மோகன்ராம்,
உங்கள் கருத்துக்கு நன்றி
சோழர்கள் இன்று இருந்தால் நிச்சயம் திறமைசாலிதான் அண்ணே

Tirupurvalu said...

சோழர் சேரர் பாண்டியர் எல்லோரும் புத்திசாலிகள் அதன் பின் வந்த நாம மாடும் என்ன எப்படி இருகோம்

நீச்சல்காரன் said...

abiramii fashions,
தங்கள் கருத்துக்கு நன்றி ஆனால் மன்னிக்கவும் சரியாக புரியவில்லை