Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, February 8, 2010

சில சமயம் ரெண்டுப் பக்க அறிவுரையை ரெண்டு வரியில் ரெண்டு அர்த்தத்தில் சொல்லும் வாசகங்களைக் கண்டதுண்டு. அதுபோல முயற்சித்ததில் சில கற்பனைகள்

பண்டிகைக்கு செலவழித்தபின்:
பொங்கலுக்கு மறுநாள் கடிச்ச கரும்பெல்லாம் சக்கை
தீபாவளிக்கு மறுநாள் வெடிச்ச வெடியெல்லாம் குப்பை

பேருந்து படிக்கட்டில்
படிகட்டில் பயணிப்பவர்களுக்காக
அவசர ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது

மாமூல் வாங்க வரும் காவல்துறை வண்டியில்
காவல்துறை உங்கள் நண்பன்
உங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும்

ஆர்.டி.ஒ. அலுவலகத்திற்கு முன் ஒரு சாமானியர்வண்டியில்
நாய்கள் ஜாக்கிரதை
லஞ்சத்தைத் தவிர்ப்போம்

சிகரெட் விற்கும் சிறு வியாபாரியின் கடையில்
costly சிகரெட் குடிச்சாலும்
Mostly  உயிரைக் கரைக்காமல் விடாது.

நியாயவிலைக்கடையில் (ரேஷன் கடை)
உங்கள் ரேஷன் கார்ட்டுகளுக்கு என்ட்ரி முற்றிலும் இலவசம்
இச்சலுகை ஸ்டாக் வரும் வரை மட்டுமே

தண்ணி லாரியில்
மழை நீரை சேமியுங்கள்
தவணை முறையில் தாகத்தைத் தீருங்கள்

கல்யாண மண்டபத்தின் மொய்யெழுதுமிடத்தில்
எங்க மனசு நிறைய, பந்திக்கு வாங்க
உங்க மனசு குளிர, மொய்யிட்டு போங்க

ஒரு ஹோட்டல் கடையில்
காசுயில்லாவிடிலும் மாவாட்டத்தெரிந்தவர்களுக்கு
இடயொதிக்கீடு வழங்கப்படும்

ஒரு ப்ளாக்கரின் பி.கு.பில்
இதைப் பார்த்து கோவப்படவே சாபமிடவோ கூடாது
மீறினால் சிரிப்புப் போலீஸ்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

8 மறுமொழிகள்:

Balakumar Vijayaraman said...

நல்லா இருக்கு. :)

Chitra said...

காவல்துறை உங்கள் நண்பன்
உங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும்


........ ha, ha, ha ..... very funny!

நீச்சல்காரன் said...

வி.பாலகுமார்,
chitra கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதைப் பார்த்து கோவப்படவே சாபமிடவோ கூடாது. மீறினால் சிரிப்புப் போலீஸ்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்//

யோவ் என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குற?

நீச்சல்காரன் said...

//யோவ் என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குற?//
சிரிப்பு போலீஸ் சார் சிரிட்டு போங்கசார் :)

Paleo God said...

’திருடர்கள் ஜாக்கிரதை’ மாதிரி ... :))

சித்திரவீதிக்காரன் said...

பேருந்தில், படியில் பயணம் விரைவில் மரணம்!படியில் பயணம் விரைவில் திருமணம்!பகிர்விற்கு நன்றி.

இமா க்றிஸ் said...

பண்டிகைச் செலவு, தண்ணீர் & சிகரெட் அருமை.