Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Wednesday, March 17, 2010









தேசிய செய்திகள்

  • மத்திய தண்ணீர் சேமிப்புத் துறை அமைச்சர் குழாயைத் திறந்துவிட்டே கைகழுவியதாக சிறப்பு வீடியோ வெளிவந்து பரபரப்பு.
  • டெல்லிக்கு தண்ணீர் சப்ளை செய்ய வந்த தண்ணீர் லாரிகளைக் கடத்தமுயன்ற தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு.
  • பார்லிமெண்டில் நிலவிவரும்  கடும் வறட்சியால் இரு சபைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
  • கங்கையில் தண்ணிதர வேண்டுமென்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு முன் நடிகர் சங்கத்தினர் ஒரு நாள் நீர் உண்ணாவிரதமிருந்தனர்

மாநில செய்திகள் 



  • அரசின் இலவச மத்திய உணவுடன் வழங்கப்பட்ட இலவச தண்ணீர் கோப்பைகளை ரூம்போட்டு யோசித்து டேங்க் போட்டு கடத்தமுயன்ற இரண்டு வாலிபர்கள் கைது.
  • ஓட்டுக்கு இலவச தண்ணீர் பாக்கெட்டுகள் கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து தேர்தல் ஆணையம் கூடுதல் பாதுகாப்புக்கு ஆணையிட்டுள்ளது.
  • கச்சத் தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் தண்ணீர் பாட்டில்களை  இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளதால் முன்றாவது நாளாக இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை 

உலக செய்திகள் 

  • தெற்காசிய நாடுகளின் குழாயடி சண்டையை தீர்க்க ஐ.நா. சிறப்புக்குழு இன்று பார்வையிடுகிறது..
  • கடல் நீரை குடிநீராக மாற்றுவதாகக்  கூறி 3000 கோடி மோசடி

வர்த்தக செய்திகள்

  • மாயாண்டி தண்ணீர் சப்ளை&கோ , கடும் விழ்ச்சியிளிருந்த சென்செக்ஸ்சை  மீண்டும் அதிக புள்ளிகளுக்கு உயர்த்தி ஆசியா பங்குச்சந்தையை அசைத்துள்ளது.
  • நீரில்லாமல் குளிக்க புதுவகை சோப்புக்கள் சந்தைக்கு அறிமுகம் 
  • பாலில் தண்ணீர் கலப்பதில்லையென பால் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது

அறிவியல் செய்திகள் 

  • நீரில்லாமல் வளரும் புதியரக பி.டி.கத்திரிக்காய்கள் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் என இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

  • நேற்று நடந்த சர்வதேச கால்பந்து போட்டியில் சிறப்பாக ஆடிய வாட்டர் குமாருக்கு மினரல் தண்ணீர் டப்பாக்கள் பரிசாக வழங்கப்பட்டது.
  • நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான டேஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் பொது நீர் பற்றாக்குறையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

சற்றுமுன்  வந்த  செய்திகள்:

  • தேசிய சாலை மேம்பாட்டுக்காக சாலையோர மரங்களை அகற்ற 250 கோடி நிதி ஒதிக்கீடு
  • விலை நிலங்களைத்தவிர மற்ற  இடங்களில் பிளாஸ்டிக் ரோடுகளும் சிமென்ட் தரைகளுமாக மாற்ற பிளாஸ்டிக் சுரக்ஷா திட்டம் அறிமுகம் 
  • ஏரி குளங்களில் வீடுகட்ட நிதிச் சலுகை அறிவிப்பு

பொழுதுப்போக்கு செய்திகள்
வருகிற 2050 மார்ச் 22ம் நாளை தண்ணீர் தினமாக கொண்டாட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

இன்றைய செய்தி நாளைய வரலாறு
நாளைய செய்தி இன்றைய எச்சரிக்கை
                                          -நீச்சல்காரன்


15 மறுமொழிகள்:

settaikkaran said...

இந்த செய்திகள் உண்மையாகிடக் கூடாதேன்னு பயமாவும் இருக்கு! (விடுமுறை செய்தி தவிர!). ஆனா, இப்படி நடந்தாலும் நடக்குமோன்னு கலவரமாவே இருக்குதுண்ணே! அருமையான பதிவு!!

Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க.

நீச்சல்காரன் said...

சேட்டைக்காரரே ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்
சித்ரா அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றிகள்

ஸ்ரீராம். said...

இன்றைய செய்தி...நாளைய வரலாறு..! ஆகிடுமோ..?

நீச்சல்காரன் said...

ஸ்ரீராம் , வருக
அகாதவரைக்கும் முயலுவோம்

Anonymous said...

nice

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Starjan (ஸ்டார்ஜன்) said...

தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்..

சைவகொத்துப்பரோட்டா said...

தண்ணீர் விரயத்தின், பலனை நன்றாக சொல்லி விட்டீர்கள்.

நீச்சல்காரன் said...

starjan ( ஸ்டார்ஜன் ),உங்க கருத்துக்கு மிக்க நன்றி

சைவகொத்துப்பரோட்டா உங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி அடிக்கடி பரோட்டா போட்டுபோங்கோ

பிரியா உங்க ஊக்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்

karthik said...

பதிவுகள் அருமை நண்பரே

Jaleela Kamal said...

என்ன பச்சை செய்தியா?

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு பதிவு. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீஙக்

Kandumany Veluppillai Rudra said...

தலையங்கத்தை மாற்றுங்க,வறட்சி செய்தி ஆக்குங்க

நீச்சல்காரன் said...

நன்றி கார்த்திக்

கருத்துக்குநன்றி jaleela அக்கா

வாங்க உருத்திரா ஐயா, நீங்க சொல்றதும் சரிதான்

செய்தியிலதான் பச்சையில்லைன்னு பெயர்லைமட்டும் வச்சேன். {வஞ்சபுகழ்ச்சி}