Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, May 21, 2010


டிக்காஷன் ஊற்றாத தேநீர் கோப்பையும் மணக்குது
கறுத்துப்போன காபிக் கொட்டைகளும் இனிக்குது
சர்க்கரை கட்டியே கொஞ்சம் என்னிடம் பேச்சு
சூப்பர் வைசர் வயிறு எரியட்டும்
அதில் பால் காய்ச்சுவோம்


வெண்டைக்காய் பச்சடியில் ஒழிந்திருக்கும் வெங்காயம் போல
சுண்டைக்காய் கிச்சடியில் கலந்திருக்கும் வெந்தயம் போல
வாழக்காய் பொறியலில் வெந்திருக்கும் கடலைப் போல
வாழ்வோம் சைடிஷ்ஷிக்கு நான் கேரண்டி

மைதாவின் வழுவழுப்பில்
அடுப்புக்கல்லின் கதகதப்பின்
ஆயிரம் பரோட்டாக்கள்
குருமாவுக்காக பிறந்திருக்கலாம்
ஆனால் இந்த ப்ரோட்ட மாஸ்டர்
உனக்காக பிறந்தவன்

அரிசி மாவில் கலந்த வெள்ளை உளுந்தே
சாம்பாரில் விழுந்த கொத்த மல்லிக் கொழுந்தே
எண்ணெய்யில் பொறிந்த துவரம் பருப்பே
என்னையும் பொறித்ததடி உந்தன் சிரிப்பே

பஞ்சாப் கோதுமையும்
பண்ரொட்டி நெய்யும்
சேர்ந்து செஞ்சது இந்த
மைசூர் பாக்கு ருசித்துப்பாரடி
என் பர்மா தேக்கு

அம்மி மிதித்து
அரிசி செத்து
வட்டவட்டமாய் இட்லிகள் கைவசம்
வாங்கிக்கோடி சட்டினி இலவசம்

காரச் சட்டினிக்கு கூட கண் கலங்காதவன்
என்னை உன் மௌனத்தால் கதரடிக்காதே!
புதினாச் சட்டினிக்கு கூட மூக்கடைக்காதவன்
என்னை உன் பிரிவால் பீளிங்க்ஸாக்காதே
பழையச் சட்டினிக்கு கூட பட்டினியிருக்காத
என்னை உன் அலசியத்தால் அல்சரக்காதே

கூடுடைந்த முட்டைப் போல
குழம்பியிருந்தேன்
கல்லாவில் விழுந்த துட்டைப் போல
கலையாய் சிரித்தேன்
ஆம்லைட் தின்னதற்கு பைசா கூட வேண்டாம்
ஆம் என்று லைட்டாக சொல்லிவிட்டுப் போ
கோழி போல அடை காக்கிறேன் உனக்காக

பி.கு.யார் கூறியது சாப்பாடுக்கடையில் ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் இல்லைஎன்று?
பி.கு.இந்த சாப்பாடுக்கடையில் தான் இப்படத்தின் கதாநாயகன் நடித்ததாக ஒரு செவி வழிச் செய்தியுண்டு

10 மறுமொழிகள்:

jillthanni said...

ஷேக்ஸ்பியரே ! வீட்டுச் சாப்பாடு இல்லயோ

\\ ஆம்லைட் தின்னதற்கு பைசா கூட வேண்டாம்
ஆம் என்று லைட்டாக சொல்லிவிட்டுப் போ\\

ஸ்டராங்கா சொன்னா கேக்க மாட்டீகளா என்ன
அருமையாக வந்திருக்கு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கவிதையும் போட்டோவும் super

Chitra said...

போட்டோவை பாராட்டவா - கவிதையை பாராட்டவா...... :-)

settaikkaran said...

ரோமியோ ஜூலியட் படிச்சா மாதிரியிருக்கு! :-)

அனு said...

கவித.. கவித..

ஷேக்ஸ்பியர் (சாப்)பாட்டுக்கடை அருமை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

good

Unknown said...

பாடி சுட்ட வடை ..

அண்ணே போட்ட டீ..

நல்ல சுவை.. நகைச்சுவை ...

நீச்சல்காரன் said...

//ஷேக்ஸ்பியரே ! வீட்டுச் சாப்பாடு இல்லயோ//
@jillthanni
நீங்க பெரிய விஞ்ஞானிண்ணே

//ரோமியோ ஜூலியட் படிச்சா மாதிரியிருக்கு! :-)//
@சேட்டைக்காரன்
சாப்பாட்டுக்கடை ஷேக்ஸ்பியர்கள் வாழ்க


//பாட்டி சுட்ட வடை ..
அண்ணே போட்ட டீ..//
@கே.ஆர்.பி.செந்தில்
நல்லா சாப்பிடுங்க

நீச்சல்காரன் said...

@நாய்க்குட்டி மனசு
@Chitra
@அனு
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அனைவருக்கும் மிக்க நன்றிகள்

DREAMER said...

ஃபோட்டோவும் கவிதையும் அருமை..!

-
DREAMER