Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, May 10, 2010

அமைச்சர்: நான் ஊழல் பண்ணி வங்கி கொடுத்த டம்மி துப்பாக்கிய வச்சே தீவிரவாதிகளை பிடிச்சுட்டேங்களே! சபாஸ்
டி.ஐ.ஜி. அது ஒண்ணுமில்லை, கமிஷன் கிடைக்குதேன்னு அதை அவுங்ககிட்ட வித்துட்டேன். பாவம் அதை நம்பி ஆடு திருட போனஇடத்தில அம்புட்டுகிட்டாங்க சாரே!





"திடீருன்னு நம்ம நாட்டோட விலைவாசி இப்படி குறைஞ்சிருச்சே!"
"அதுவா! நேத்திலயிருந்து தீவிரவாதிகயெல்லாம் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்றதா அறிவிச்சாங்கள அதான்"


"எங்க ஊர்ல தீவிரவாதிகளைப் பிடிக்க 300 கோடி ஒதிக்கி தீர்மானம் போட்டாங்களே! உங்க ஊர்ல எப்படி?"
"தீவிரவாதிகளை சரணடையச் சொல்ல மொபைலுக்கு மிஸ்ட் கால் கொடுத்து காத்துகிட்டுயிருக்கோம்"


{தீவிரவாதக் கூட தலைவனிடம் போனில்....}
தீ.வா.1: ஹலோ, நான் ஓரே குண்டுல ஒம்பது கோடி ரூபாயை நாட்டுக்கு நட்டம்மக்கிட்டு தப்பிச்சு வந்துகிட்டுயிருக்கேன். ஓவர்.
தீ.வா.2: ஹலோ,நான் தான் அந்த குண்டை வச்சேன்னு போய் சொல்லி சரணடைஞ்சு. எனக்கு பாதுகாப்பு, பரிவர்த்தனை, கோர்ட்டு, கேஸ், வாய்தா, கருணை மனுன்னு கஜானாவை ஒரு வழிப் பண்ணிக்கிட்டுயிருக்கேன். ஓவர்.


பாதுகாப்பு ஆலோசகர்:நீங்க பாதுக்காப்புக்காக ஏதோ செக்யூரிட்டி சர்வீஸ்க்கு போன் பண்ணதை தீவிரவாதிங்க ஒட்டுக் கேட்டுட்டாங்க!
அமைச்சர்: நல்லவேளை தப்பிச்சேன்! நான் பாதுகாப்பு கேட்டதே அவுங்ககிட்டதான்.


"பாஸ்! எல்லா வண்டி, லாரியையும் செக் பண்ணி அனுப்புறாங்க, என்னால ஊருக்குள்ள போகமுடியலை."
"கவலைப் படாத ஒரு ருபாய் அரிசிய கடத்திக்கிட்டு ஒரு லாரி வரும் அதில லிப்ட் கேட்டு வந்திரு."


"தீவிரவாதிகளுக்கு அரசு இலவச வீடு கட்டித் தரணும்னு ஏன் கேட்குறீங்க?"
"அந்த வீடுகளெல்லாம் சீக்கிரமா இடுஞ்சு போயிரும்ல அதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்"




ஹலோ தீவிரவாதி அங்கிள் என்னை வந்து கடத்திட்டுப் போங்க இந்த ஊர்ல குடிக்கக்கூட தண்ணியில்ல
அப்படியா! காண்ட்ராக்ட முடிய ஆறு மாசம் இருக்கும் அதுக்கப்புறமா பார்க்கலாம்.


"என்ன சார் பால் சொம்பு காணமுன்னு தீவிரவாதி மேல கேஸ் போட்டுருக்கீங்க?"
"என்னா பண்ணுறது பெரிய கேஸா போட்டா தீர்ப்பு வரக்குள்ளையும் எனக்கு வயசாகி பால் ஊத்திருவாங்களே"




ஆனா பாருங்க! தீவிரவாதிகளை வச்சு ஜோக்கடிக்களாமுனு நினைச்சா நம்மள வச்சுத் தான் காமெடியே நடக்குது
"தீவிரவாதிகள் சுட்டுக்
கொல்லப்படுகிறார்கள்
திரைப்படங்களில் மட்டும்"

வீடுக்கு ஆட்டோ அனுப்புபவர்கள் தொலைந்து போன மனித நேயத்தையும் சேர்த்து அனுப்புங்க சாமியோவ்

12 மறுமொழிகள்:

Unknown said...

அண்ணே சூப்பர், ஆனா எழுத்து பிழைகள் நிறைய இருக்கு....

Chitra said...

சிந்திக்க வைக்கும் சிரிப்பு பந்தல்.

நீச்சல்காரன் said...

@கே.ஆர்.பி.செந்தில் வழக்கு மொழியில் ஜோக்ஸ் எழுதியிருப்பதால் பிழைகளை திருத்த தவறியிருப்பேன். உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

jillthanni said...

\\"என்ன சார் பால் சொம்பு காணமுன்னு தீவிரவாதி மேல கேஸ் போட்டுருக்கீங்க?"
"என்னா பண்ணுறது பெரிய கேஸா போட்டா தீர்ப்பு வரக்குள்ளையும் எனக்கு வயசாகி பால் ஊத்திருவாங்களே"\\

இது தான் ரியல் டயம் காமெடியா!!
நல்லா இருக்கு:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா இருக்கு. ஏன் ரொம்ப நாளா எழுதலை?

நீச்சல்காரன் said...

வாங்க சித்ரா அக்கா, நன்றி
jillthanni, நீங்க ரசித்ததை பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே.
ரமேஷ், கருத்துக்கு நன்றி. சக்திக்கு தகுந்த மாதிரி மாதத்திற்கு நாலஞ்சு பதிவுதான் போடுகிறேன். உங்கள் அதரவுக்கு நன்றி

Jaleela Kamal said...

ஹா ஹா ரொம்ப காமடி

Anonymous said...

super ma

Anonymous said...

hahahaha good realtime jokes

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

superaa irunkunga.. :D

ella jokum nallaa irukku..!!

செல்வா said...

நீங்க எப்பவும் தண்ணில தான் இருப்பீங்களா...??
(உங்க பேர படிச்சு சொன்னேன் ...)

நீச்சல்காரன் said...

Jaleela,
Ananthi,
ப.செல்வக்குமார்
உங்கள் கருத்துக்கு வந்தனம் மற்றும் நன்றிகள்.