Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, October 17, 2010

"ம்ம்ம்..என்னையா எந்திரனுக்குக் கூட்டிட்டுப்போ.. யம்..ஈ. கூட்டிட்டுப்போ" 
"இருடா அப்பா உன்னைய அடுத்தவாரம் கூட்டிட்டுப் போறேன்."
"ம்கும்.... படம் அப்ப முடிஞ்சிரும் என்னையா இப்பவேக் கூட்டிட்டுபோ......ஊஊஉ "
"இங்க பாரு அப்பாகிட்டதான் எந்திரன் ரஜினியோடத் துப்பாக்கியே இருக்கு. நீ அழுவக்கூடாது அப்புறம் இதை ரஜினிக் கிட்டக் கொடுக்கமாட்டேன். ஆமா"

****
தனது வீட்டிற்குள் காதில் இயர்-போனும் முகத்தில் கருப்பு நிற மாஸ்கும் அணிந்துக் கொண்டு தனது வீட்டு ஜன்னல் வழியே ஆள் நடமாட்டத்தை கண்டுகொண்டிருந்தாள் காமினி. "அவள் அப்படியொன்று அழகில்லை, அவள் அப்படியொன்று கலரில்லை.." என்கின்ற ஹலோ டியூன் ஒலிக்க மறுமுனையில் "இப்ப எல்லாம் ரெடி. சிவாகிட்ட ஒன்னு கொடுத்துவிடுறேன் வாங்கிக்கோ."என்று வினித் காமினியிடம் கூறினான்."சரி சரி பக்கத்து வீடுக்காரவுங்க உள்ள போனதும் நான் கிளம்பிவிடுவேன், பை" என்று மெதுவாகச் சொல்லி இணைப்பை முடித்துக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்கார டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். அவளுடன் ஒரு தோள்ப்பையும் ஒரு சிறிய பெட்டியுமிருந்தது, உள்புறமாக பூட்டப்பட்டதாக இவள் வீடுயிருந்தது.
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. "சொல்லு உண்மைய சொல்லு நீ எந்திரன் பார்க்கத்தான போற" என்று அதீதக் கோவத்தை பல்லில் மட்டும் காட்டிக் கேட்டான் சிவா. "இல்ல ...ம்... ஆமா வாரியா?" இது காமினி. "வேண்டாம் இந்த துப்பாக்கிய நம்ம ஹீரோ ரஜினிகிட்டக் கொடுத்துடு சரியா, நான் போயி சிடியில ரஜினிக் கிட்ட இந்தத் துப்பாக்கியிருக்கானு பாப்பேன்" என்று துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான் சிவா.தனது செல்லில் "காட் எஸ்கேப். ஸ்பீடிங் டு ஸ்டேஷன் " செய்தியொன்றை அனுப்பிவிட்டு சிவா கொடுத்தத் துப்பாக்கியைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். "கீப் எந்திரன் வெறி சேஃப்" என்று பதில் வந்தது. குழம்பியவள் வினித்திற்கே ஒரு அழைப்பைப் போட்டாள். "நான் உங்கள் பிளாட்டுக்கு வந்தால் யாராச்சும் பார்த்துருவாங்கனு உங்க அப்பார்ட்மென்ட் சின்னப் பையன் சிவா கிட்ட எந்திரன் சி.டி.யை கொடுத்திருக்கேன். இப்பவாது புரியுதா?" என்று வினித் முடிப்பதற்குள், 'ரகு நாத், எஸ்.ஐ' என்கிற போர்டுக்குப் பக்கத்திலுள்ள சிவா வீட்டு காலிங் பெல்லை அடிக்கிறாள் காமினி.
"சிவா கோ மில்னா ஹே"
"அட, நீங்க தமிழ்தானே!" என்று சிரித்த முகமுடன் கண்டுபிடித்தான் புனே வாழ் தமிழர் ரகு, சிவாவின் அப்பா..
"சாரி, நீங்க ஹிந்தினு நினைச்சேன். சிவாவைப் பார்க்கணும்" என்றாள்
"நீங்க உள்ள வாங்க!... சிவா! சிவா!... "என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே சென்றார் ரகு.
"சிவா உன்கிட்ட ஒரு அங்கிள் எந்திரன் சி.டி. கொடுத்தாரா?"
"ஆமா, ஆனா எல்லாம் தாடிக்கார டாடியா இருக்காங்க! ரஜினி அங்கிளவே காணோம் "
"ம்.. அது ஹிந்தி எந்திரன் கண்ணா! அதுல ரஜினி கிடையாது. நீ அத எடுத்துட்டு வந்து என்கிட்ட தாரீயா?"
"சரி.. தமிழ் எந்திரன் கிடைச்சா! எனக்கு தருவீங்களா? "
.சிவாவிடமிருந்து சிடியை வாங்கிக் கொண்டாள் காமினி.
"அக்கா! சிடியில தமிழ்ல எழுதியிருக்கு?"
"அதுவா, அக்காவுக்கு ஹிந்தி தெரியாதுல.. சரி சரி எனக்கு டிரைனுக்கு நேரமாச்சு கிளம்புறேன் "என்றுச் சொல்லிவிட்டு புனே ஸ்டேஷனை நோக்கி ஆட்டோவில் ஏறினாள்.

வீட்டுக்குளிருந்த ரகு "டேய் சிவா! அது என்னாடா புதுப்படம் மாதிரியிருக்கே!"
"ஆமாப்பா எந்திரன் ஹிந்தி பிரிண்டு போல ரஜினியவே காணோம். எல்லாம் உன் மாதிரி தாடிக்கார டாடியா இருக்காங்க"
"ம்... படத்தப் பார்த்துக்கிட்டே படிப்பில ஜீரோ வாங்கிறாத!" என்று சொல்லிக் கொண்டே வீட்டில் தனதுத் துப்பாக்கியைத் தேடிக்கொண்டிருந்தான் ரகு.
"டேய்! சிவா இங்கிருந்த துப்பாக்கியைப் பார்த்தியா?"
"மெட்ராஸ்பட்டணம் படத்தில் வர துப்பாக்கி மாதிரி இருக்குமே அதுவா?"
"சிவா! எங்க பார்த்தா?"
"அப்பா! அத ரஜினி அங்கிள் கிட்ட கொடுக்கச் சொல்லி காமினி அக்காகிட்டக் கொடுத்துயிருக்கேன்."
"போடா தரித்திரம் பிடிச்சவனே" என்று பளார் என்று ஒரு அறை விட்டான் சிவா மீது.

உள்புறம் பூட்டிய காமினியின் வீட்டுக்கு வந்து பார்த்தான். கடைசியில் அவர்களின் அப்பார்ட்மென்ட் வாசலில் இருக்கும் செக்யுரிட்டி பதிவேட்டில் காமினியின் தொலைப்பேசி நம்பரைக் கண்டுபிடித்தான்.
"ஹலோ! காமினி நான் சிவாயோட அப்பா ரகு பேசிறேன். நீங்க இப்ப எங்கயிருக்கீங்க?".
"இல்ல நான் புனேவை விட்டு வெளியூர் போறேன் திரும்பிவர ஒரு வாரம் ஆகும்"
"ஒ! அப்படியா, ஒரு சின்ன விஷயம் உங்கள கொஞ்சம் பாக்கணும். பிரச்சனையில்ல நீங்க எங்கயிருக்கீங்கனு சொன்னா அடுத்த பத்து நிமிஷத்துல வந்திருவேன். ப்ளீஸ்"
" அது... எதுக்கு?"
"விஷயம் கொஞ்சம் சீக்ரெட்டு போன்ல வேண்டாமே! எந்த ஊர்ப் போறீங்கனு சொல்லமுடியுமா?"
"நான் சென்னைக்குப் போறேன் உங்கனால வரமுடியாதே வந்துக்கப்புறமா பாத்துக்கலாமா?"
"பரவாயில்ல ஆறுமணி டிரைன் தானா?"
"இல்ல சீக்கிரம் வந்தாலும் கிளம்பிரும்."
"நீங்க கவலைப்படாதீங்க அது தான் எப்படியும் உங்கள சந்திச்சுருவேன். ப்ளீஸ் ரொம்ப முக்கியம்"
"...ம் சரி."

என்று சிறிய தொலைபேசி உரையாடல் முடிவுக்கு வந்ததும். காமினி திடுக்கிட்டு வினித்தை மீண்டும் தொடர்பு கொண்டாள்.
"ஹலோ வினித், பயமா இருக்கு. இந்த சிவாவோட அப்பா எனக்கு கால் பண்ணி என்னையா சந்திக்கனும்னு சொல்றாரு."
"எதுக்கு?"
"ஏதோ முக்கியமான விஷயமாம் எந்திரன் பத்தி இருக்குமோனு பயமாயிருக்கு. "
"அவரு எந்திரனைப் பார்த்தாரா?"
"தெரியல ஆனா சிவா பார்த்திருப்பான் ஏதாவது அவுங்க அப்பாகிட்ட சொல்லிருப்பானோ"
"டைமண்ட் பத்தி ஏதாவது வார்த்தை விட்டாரா?"
"அதெல்லாமில்லை முக்கியமான விஷயம்னு மட்டும் சொன்னார்."
"ரொம்ப சீரியஸ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன். சரி அப்ப ஒன்னு செய்யலாம் நான் இப்படியே சில வேலையெல்லாம் முடிச்சிட்டு சிஎஸ்டிஎம் சென்னை எக்ஸ்பிரஸ் டிரைன்லையே வாறேன். நீ அரக்கோணம் வழியப் போகிற நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ல ஏறிரு. பைன் கூட கட்டிக்கோ பரவாயில்லை, நாளைக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கு அரக்கோணத்தில இறங்கி எனக்காக காத்திரு என் டிரைன் மூன்னு மணிக்கு அங்க வந்திரும். தேவைப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்திக்கோ ஓக்கேவா!"
"தனியா போகவா?"
"வேற வழியில்ல என் டிரைணுல இருந்தா எப்படியும் உன்னை கண்டுபிடிச்சுருவாங்க ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணுடா!"
"சரி"
"அப்புறம் அவரு கால் பண்ணா சென்னை எக்ஸ்பிரஸ்னே சொல்லு வண்டி சீக்கிரம் கிளமிருச்சுனு சமாளி. நாகர்கோவில் டிரைன் நம்பர் தெரியுமல் 6351"
"ம்."
என்று உரையாடல் நிறைவு பெற்றது. சற்றும் எதிர்பாராத விதமாக பரந்தாமனுக்கு இந்த உரையாடல் கேட்டுவிட்டது. பரந்தாமனுக்கோ தேவையெல்லாம் ரகுவின் தொலைபேசி உரையாடல் மட்டுமே. ஆனால் எப்படியோ ரகு காமினி உரையாடல் மூலம் காமினி வினித் உரையாடலைக் கேட்டுவிட்டான். அடுத்த உரையாடல்களை தானியங்கியாக சேமிக்க ஆயுத்தப் படுத்திவிட்டு 6351 டிரைனை எந்த ஸ்டேஷனில் பிடிக்கலாம் என கணிக்கத் தொடங்கிவிட்டான். ஆம் பரந்தாமன் ஒரு பயிற்சிப் பெற்ற விஜிலன்ஸ் துறை அதிகாரி, பொதுவாக அரசித் துறை சார்ந்த தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பவன். எப்போதாவது இதுமாதிரி தனிநபர் உரையாடல்களிலும் மூக்கை மன்னிக்க காதை நுழைப்பவன். சமீபத்தில் வெளியான தமிழக மந்திரியின் தொலைபேசி உரையாடலை அம்பலப்படுத்தியதில் இவனுக்கும் பங்குண்டு. தனிநபர் சார்ந்த திரைத்துறையினரின் உரையாடல்கள் பல இவனால் பத்திரிக்கைகளுக்கு கசிந்ததுண்டு.


இந்த முறை ஏதோவொரு கிடா சிக்கியதாக உள்மனசு சொல்லியது பரந்தாமனுக்கு. தனது டூப்ளிகேட் நம்பரிலிருந்து தான் யாரன்று சொல்லாமலே அனானியாக ரகுவிற்கு ஒரு கால் போடுகிறான் பரந்தாமன்.
"ஹலோ! கோன் போல் ரஹே ஹோ ? "
"ஹலோ ரகு நலமா?"
"ஓ நீயா! இப்ப என்ன வேணும்"
"ஒண்ணுமில்லை காமினி என்றொரு காமிக்ஸ் படிச்சிருக்கியா?"
"அப்ப காமினி விஷயம் உனக்குத் தெரியுமா?"
"ஹி..ஹி.. ரகு, எந்திரன் அப்படிங்கிற எந்திர துப்பாக்கியத் தெரியும்னுச் சொல்லவா? இல்ல நீ எந்திரனுக்குள்ள வைரத்தை வச்சது தெரியும்னுச் சொல்லவா? இல்ல வைரத்தை எப்படி வாங்குனேன்னு சொல்லவா?"
"யூ பிளடி ****"
"ம்ம் இரு.. இரு.. அதெல்லாம் கவர்மெண்டுக்கிட்ட சொல்லவான்னு கேட்டேன். அப்புறம் உன் இஷ்டம். அதான் சொல்றேன் நமக்குள்ள சண்ட வேண்டாம். நீ ஸ்டேட் கவர்மென்ட் போலீஸ் நான் சென்ரல் கவர்மென்ட் போலீஸ் ரெண்டு பேரும் சம்மதிச்சா ரெண்டு பேரும் வாழலாம். "
"நீ யாரு மேன்? நீ எங்க இருக்க? "
"இரு இரு வாழலாமானு மட்டும் சொல்லு "
"சரி வாழலாம் இப்ப என்ன சொல்ற"
"ரைட்டு, மொத எந்திரத் துப்பாக்கி அதான் உன்னோட எந்திரனை காமினிக்கிட்ட இருந்து எடு"
"அதுக்குத் தான் ஸ்டேஷன்ல தேடிக்கிட்டு இருக்கேன் இன்னும் காமினி சிக்கல"
"ரகு, இப்ப காமினி ஸ்டேஷனைத் தாண்டியிருப்பா. ஆமா அவ போகிற டிரைன் நாகர் கோவில் எக்ஸ்பிரஸ்..............."
என்று தனக்கான பங்கையும், காமினியின் பயண பாதை, பெட்டி எண், இருவரும் சந்திக்கும் இடத்தையும் கூறிவிட்டு வெற்றிக் களிப்பில் ஒரு ராயல் சேலஞ்சை உடைத்தான்.

*****
மறுநாள் அதிகாலை ஒரு மணிக்கு ரகு காமினி இருக்கும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸை ராய்ச்சூரில் அடைந்தான். பரந்தாமன் கூறியபடி அதேப் பெட்டி முழுவதும் தேடுகிறான். இறுதியில் காமினி தோள்ப்பையைக் கண்டுப்பிடித்து அதிலிருக்கும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அதேப் போன்றொரு தனது துப்பாக்கியை வைக்கிறான் அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள் காமினி. முடிந்தது இவன் பிரச்சனை அடுத்து, முடிக்க வேண்டியது அந்த அனானியின் பிரச்சனை என பரந்தாமனை திட்டிக் கொண்டான். இவனுக்கு அந்த அனானியை சுத்தமாகப் பிடிக்கவில்லை எப்படியும் அவனை போலி கேசிலாவது சுட்டிவிட முடிவு செய்தான். அனானி பரந்தாமன் நம்பருக்கு ஒரு போன் போட்டு 'என்னால் ரயிலைப் பிடிக்கமுடியவில்லை நீங்க எந்த ஸ்டேஷன்லையாவது காமினியை மடக்க முடியுமா?' என பரந்தாமனிடம் கேட்க பரந்தாமனும் பறந்தான் திருப்பதிக்கு.

"எந்திரன் பத்திரம், எந்திரனைப் பாத்துக்கோ" என அடிக்கடி வினித் கூறுவதை ரகசியமாகக் கேட்டதில் எந்திரன் இன்னும் காமினியிடம்தான் உள்ளது என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டுச் சரியாக பகல் பனிரெண்டு மணிக்குத் திருப்பதியில் காமினி ரயிலைப் பிடித்தான் பரந்தாமன். காமினி யாரென்று தெரியாததால் காமினிக்கே போன் போட்டு "நான் வினித்தின் நண்பன்தான் உங்க ...." என பேச்சுக் கொடுத்துக் கொண்டே அந்தப் பெட்டி முழுவதையும் அலசி காமினியைக் கண்டுபிடித்துவிட்டான் கில்லாடி பரந்தாமன்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன். "டைமண்டா! " என அதிர்ச்சியானாள். "எஸ் நீ வச்சிருகிற ரீவால்வர்ல டைமண்ட் பதிக்கப்பட்டிருகிற விஷயம் எனக்கும் தெரியும்." என்றான் நமட்டுச் சிரிப்புடன். "ரீவர்ல்வர்ல டைமண்டா! நீங்க என்ன சொல்றீங்கனுப் புரியல" என்றாள் வெகுளியாக. "நடிக்காத காமினி நீயும் வினித்தும் பேசினதெல்லாம் கேட்டுவிட்டுத் தான் வாறேன். நீங்க எந்திரன் அப்படின்னு சொன்னா அது எந்திரத் துப்பாக்கின்னு கூடத் தெரியாத மாங்காவா இந்த பரந்தாமன்."என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொது ரயில் 'தடக் தடக்' என்று ஒரு பாலத்தில் போய்க்கொண்டிருந்தது.

திடீர் என்று...
"ஹான்ட்ஸ் அப்" என்று பரந்தாமனை நோக்கி பறந்து வந்தான் ரகு.
"ஐயோ ரகு!" என்கிறாள் காமினி. + "நீயா? " என்கிறான் பரந்தாமன். + "உஊய் .."என்று பக்கத்து கம்பார்ட்மென்ட் மக்கள் ஒரு சப்தம் கொடுக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் பரந்தாமன் ரகு மீது பாய்ந்து துப்பாக்கியைத் தட்டிவிட்டான். தவறிப் போய் அந்த பாலத்தின் கீழே விழுந்தது. "தடக்.. தடக்.." என்ற ரயில் சப்தம் மட்டும் பாலத்தில் கேட்க ரகு அப்படியே ஸ்தம்பித்தான்.
"ஏ ரகு ஏன் என்னப் போட்டுருலம்னு பார்க்கிறியா?"
"ப்ளீஸ், இப்ப அதுக்கு நேரமில்லை. நீங்க தட்டிவிட்டது தான் நம்மளோட எந்திரன். அது என்கையில இருக்கிரதாலத் தான் உங்கள குறிவச்சேன் அவரசப் பட்டுட்டேங்க"என்றான் ரகு உணர்வுப் பூர்வமாக.
"எந்திரனைப் போய் விட்டுட்டியே!" என்றான் பகிர் குரலில் பரந்தாமன்.
அப்போது வினித் காமினிக்கு போன் அடிக்கிறான். காமினியோ "எல்லாம் போச்சு ரெண்டு பேரு வந்து நம்ம எந்திரனை எடுத்துட்டாங்க இனி பேசிரதுக்கு ஒண்ணுமில்லை.."என்று அழுதவாரே வினித்திடம் கூறுகிறாள்.
"ஏம்பா, என்னப்பா ஆளாளுக்கு எந்திரன் எந்திரனு பிலீங்க்ஸ் காட்டுறீங்க வர தீபாவளிக்கு இந்திய தொலைக் காட்சிகளில் முதன் முறையா எந்திரனை போடுறாங்கப்பா போங்கப்பா போய் பொழப்ப பாருங்க" என்று வெட்டிநியாயம் பேச சில திடீர் நாட்டாமைகள் பக்கத்து கம்பார்ட்மெண்டிலிருந்து வந்துவிட்டனர். பந்தாமனும் ரகுவும் "சரி சாரி அழுகாத காமினி இதோ வந்திருறோம்" என்று நழுவி ரயில் கதவுப்பக்கம் வந்துவிட்டனர். எப்படியும் இனி அந்த துப்பாக்கியத் தேடுனால் தான் இது வரை செலவளிச்ச காசையாவது பாக்கமுடியும் வேறவழியில்ல அடுத்த புல் தரையோ ஆத்தோ இல்ல ஸ்டேஷனோ வந்த குதிக்க வேண்டும் என ரெடியாகிக் கொண்டிருந்தனர்.

****
அரக்கோணம் சந்திப்பில், காமினி வினித் சந்திப்பு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. "டேய் வினித் நாம போனில பேசினதெல்லாம் ஒராள் கேட்டுகிட்டு வந்து எந்திரனைக் கொடுன்னு சொன்னாரு, நான் கூட நம்ம சி.டி.யோனு பயந்துட்டேன். ஆனா அதுக உண்மையிலையே ஏதோவொரு டைமண்டை அந்தத் துப்பாக்கியில வச்சுகிட்டு அத எந்திரன் எந்திரனு சொல்லிக்கிட்டு இருந்திருக்குக. கடைசிவரைக்கும் நம்ம சிடிய பற்றித் தெரியாது."
"அப்படியா அப்புறம் எதுக்கு எந்திரனை எடுத்துட்டாங்கனு சொன்ன? இப்ப அந்தத் துப்பாக்கி எங்க?"
"துப்பாக்கியைத் தேடித்தான் அந்த சிவா அப்பா வந்திருந்திருக்காரு. கடைசியில அவருக்கும் கிடைக்காம ரயில் வரவழியில் ஒரு பாலத்துக்குக் கீழ விழுந்துருச்சு. நானும் உண்மையிலையே அந்த டைமண்டை இழந்தவள் போல அழுது அவர்களை நம்ம வைத்துவிட்டேன்............."

***"எது எப்படியோ எந்திரன் நம்மள காப்பாத்திருச்சு." என்று தான் கொண்டுவந்த எந்திரன் ஸ்டிக்கர் ஒட்டிய சிடியை ப்ளேயரில் போட்டான் வினித்.அதில் புனேயில நடந்த ஒரு டைமண்ட் கடத்தல் பற்றிய விடியோ ஓடிக்கொண்டிருந்தது. "ஒளிச்சு வச்சு எடுத்த வீடியோவாக இருந்தாலும் பிச்சர் நல்ல கிளாரிட்டியில" என்று தனது படப்பிடிப்புத் திறமையை பெருமைப்பட்டுக் கொண்டான். "டேய், வினித் அந்த தாடிக்காரர் பக்கத்தில இருக்கிறவர்தான் சிவாவின் அப்பா ரகு. அப்ப அந்தக் கடத்தல் காரவுங்க தான் என்னை ரயில பாலோ பண்ணது" என்று அந்த வீடியோவைக் காட்டிச் சொன்னாள் காமினி. காமினியில் பையிலிருந்த காமினியின் துப்பாக்கியையும், சிவா கொடுத்த துப்பாக்கியையும் எடுத்தான். துப்பாக்கியை எடுத்து திறந்தான் வினித். மின்னியது ஒரு வைரம். "அட அவன் துப்பாக்கியைக் கூட கண்டுபிடிக்கத் தெரியாதவீங்க நம்ம வீடியவையா கண்டுபிடிக்கப் போறாங்க? ஹி.. ஹி ரெண்டையும் போலீஸ்கிட்ட கொடுக்க வேண்டியதுதான்."என்று முடித்தான் வினித்

பி.கு.பரிசல் நடத்தும் சவால் சிறுகதை போட்டிக்கு அனுப்பிய சிறுகதை.

1 மறுமொழிகள்:

Chitra said...

ஆஹா.... ..... கலக்கிட்டீங்க....