Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, January 27, 2011

இணையத்தின் ஒன்று விட்ட பெரியப்பா மகன்களான ஊடகங்கள் தற்போது இணையத்தில் ஒன்றிவிட்டது தெரியுமா? ஊடகங்கள் அச்சப்பட்டு எடுத்துவைக்காத சொச்ச செய்திகளை மக்கள் மிச்சமில்லாமல் படிப்பது இணையத்தில்தான். மாற்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் மாற்றமில்லாமல் ஊடகமாக இரண்டாண்டுகளுக்கு முன்பே தன்னை பிரகடனப்படுத்திவிட்டது. தீர விசாரிக்க வேண்டாதளவு கண்ணால் பார்த்துவிட்டீர்கள், காதால் கேட்டும் விட்டீர்கள் இனி தீர்வு எழுதிவிடுங்கள். உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் முன்வையுங்கள். ஏற்கனவே மாபெரும் கூட்டம் இணையத்தில் டிவிட்டரை விலைக்கு வாங்காத குறையாக கத்தத் தொடங்கிவிட்டது, அதன் எதிரொலிகள் வலைப்பூக்களிலும் உங்கள் எண்ணப்பூக்களிலும் மலரத்தொடங்கிவிட்டது; செவி கொடுத்த ஊடகங்களும் இப்போது செப்பத் தொடங்கிவிட்டது. இந்தக் கதறல்கள் மென்னணு புள்ளிகளாக சர்வரில் வீற்றிருந்தாலும் சாகாத வரமுடன் சந்ததியினருக்கு ஏதோவொன்றை விழிப்பூட்டிக் கொண்டுதான் உள்ளது. நான்வைத்த புலம்பல்கள்


எல்லை தாண்டிப் போனால் சிவப்புக் கம்பளம் கிடைக்க இங்கு யாரும் கிரிக்கெட் வீரருமில்லை வெள்ளித் திரை நடிகருமில்லை

"நாய்கள் ஜாக்கிரதை" போர்டை சீக்கிரம் கடல் எல்லையில் வையுங்கள்

#improudtosay இறால், நண்டு, திருக்கை, சீலா, கெண்டையுடன் உயிருள்ள தோட்டாக்களும் இந்தியா கடலில் தமிழனுக்கு கிடைக்கும்

சிலர் கண்டனம் தெரிவித்தார்கள்; சிலர் வருத்தம் தெரிவித்தார்கள் கேமிராவிடம்.ஆனால் சுடப்பட்டது கேமிரா என்று எந்த கேணையன் சொன்னது

எழுதிக்கொண்டு வந்ததை குடியரசுதின உரையாக படிப்பதைவிட எரிந்துக் கொண்டிருப்பது குடிமகன் என்று பட்டால் சரி.

இன்றாவது அரசியல் அமைப்பு சட்டம் part-2 article 5ஐப் படிக்கவும். சத்தியமா சுடப்படுவது இந்தியனே

ரயில் மறியல் செய்யப் போகும் தொண்டர்களே! முடிந்தால் இந்தியா கடல் எல்லையில் மறியல் செய்து பாருங்கள்.

இனி அரசியல்வாதிகள் ஒரு நாள் ஏழை வீட்டில் சாப்பிடுவதற்குப் பதில் ஒருநாள் கடலுக்குப் போயிட்டு வரலாம். வந்தா மழை போனா @#$%

தேசிய பறவை மயில், தேசிய மரம் ஆலமரம்........தேசிய இளிச்சவாயன் தமிழன்?

தூக்கு வாங்கியவர்கள் கூட சாப்பிட்டு தூங்கிக்கொண்டிருக்க, தூண்டில் போட்டவருக்கு மரணதண்டனையா? #kasab

காக்கா பிடித்தால் மந்திரி சீட்டு மீன் பிடித்தால் உயிருக்கே வேட்டு

இந்தியாவில் எரிபொருள் செலவு அதிகரித்தும் அதிகமாக வயிறெரிகிறது. துப்பாக்கிகள் தீமுட்டுவதால்

"மீனவர்களை நங்கள் சுடவில்லை என்று சொல்லவில்லை சுடாமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்கிறோம்". #srilanka navy #tnfisherman


மண்ணடி படும் நபர்களெல்லாம் விளையாட்டு வீரர்கள் என்றால் குண்டடி படும் மீனவர்கள் இனி வீரர்கள்தானே. #tnfisherman -மீனவவீரர்கள்

வரலாற்றில் பலவந்தமாக அழிக்கப்பட்ட மீனவர்களுக்காக பலமான வரலாறு படைக்க வேண்டும் join #tnfisherman

செங்கடலை உருவாக்க ரத்தம் சிந்த மீனவன் தான் கிடைத்தானா? அண்ணே, ஏற்கனவே அவன் ரத்தம் அரசியல்வாதிகளால் உறிஞ்சப்பட்டுவிட்டது.

தண்ணீரில் வாழ்பவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி, மலர் அஞ்சலி, அறிக்கை அஞ்சலி. முதல தண்ணியிலயிருந்து தூக்குங்கப்பா

ஜமுக்காளம் போட்டு உட்கார்ந்து தொகுதி பிரிப்பவர்களே! கவனிக்க! சிலர் துண்டு போட்டு உட்கார்ந்து குண்டை போடுகிறார்கள்.

"டிரையின் பிடிக்க வந்தா சுடுவோம்" 11/26 தீவிரவாதி. "மீன் பிடிக்க வந்தாலும் சுடுவோம்" #srilanka navy

அடுத்த தலை முறையில் கருப்பு பணமாக மீனவர்கள் பிறக்கட்டும். மிகவும் பத்திரப்படுத்தப்படுவார்கள்.

கிரிக்கெட் பந்தை தொலைச்சதுக்கே அழுகும் குழந்தைகள். #tnfisherman அப்பாவை தொலைச்சதுக்கு என்ன செய்யும்?

Do you know! #tnfisherman have tax exception as well life exception in india

whatever be a international marine law but #tnfisherman are assaulted as Archimedes floating law.

Beware #tnfisherman ! Indian coastal region has no parking area but barking area of navy dogs

#TNfisherman are not a fun for the #srilanka navy gun. please answer don't run.

We pray to stop #tnfisherman to become a prey for #srilanka navy

English dictionary needs to add new definition for #tnfisherman as victim of #Srilanka navy's genocide

source: @neechalkaran

Support #tnfisherman
தூரத்து தொடர்புடைய இடுகை: இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?

5 மறுமொழிகள்:

Chitra said...

வேதனையான நிலைதான்.... இரண்டாவது கார்ட்டூன் , எல்லாவற்றையும் சொல்கிறது.

மாணவன் said...

வலிகள் கலந்த வேதனையை உணர்வுகளுடன் சொல்லியிருக்கீங்க நண்பரே...

Anonymous said...

இப்படி ஒற்றுமையாக செய்தியை பரப்பினால் தன இந்த செவிட்டு மீடியா காரர்களுக்கு கேட்கும். இதை ஹிந்தி இல் சொல்லுவார்கள் " logon ko jagaane ke liye ek jordar dhamaake ki zaroorat hoti hai" It means "To awaken people u need an explosion"

Anonymous said...

எல்லாமே கலக்கலா இருக்கு அண்ணாச்சி..பதறடிப்போம்..ஒன்றினைவோம்....

rizwan said...

i love this website