சூரியக் கதிர்கள் கிழக்கு நாடுகள் நோக்கி படர்ந்திருந்த ரம்ய நேரம் எனநினைக்கிறேன். சரியாக இரவு மணி 12 இருக்கும், வட்டமான தோட்டமரங்களில்லாமல் செவ்வகமான செங்கற்களால் கட்டப்பட்ட சதுரமான கட்டடமாகயிருக்கும் நான் தங்கியிருந்த வீடு. வழக்கத்திற்கு மாறாக இரவில் மின்சாரம்யிருந்தது. "விஷ்ணு தீப்பெட்டியிருக்கா?" னு கேட்டது தான் இந்த பிறந்த நாளில நான் பண்ண முதல் தப்பு. கேக்கு மெழுகுவர்த்தியெல்லாம் நல்லா வாங்கிவந்தேன் அப்படியே ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி வாங்கிருக்கலாம். இதோ கேஸ் லைட்டரை வைச்சு கொளுத்துறாரே இந்த ஜீனியஸ் தான் விஷ்ணு. இவர் என்னைவிட மூன்று வயசு மூத்தவர் என் அண்ணனோட செட். இந்த மதுரை மாநகரில் உள்ள எல்லா தியேட்டரிலும் இவருக்கு தோஸ்துகள் உண்டு வேற எதுக்கு ப்ளாக்கில டிக்கெட் விக்கத்தான். "சரி சரி விடுங்க விஷ்ணு கேக்கை வெட்டுறேன் மெழுகுவர்த்தி வேண்டாம்" என்றேன் இவர் கொளுத்துறத்துக்குள்ளையும் அடுத்த பிறந்த நாளே வந்துரும்ள. "ஓகே சிரஞ்சீவி, ஆரம்பியுங்கள் ஹப்பி பெர்த்திடே டூ யூ... " பாடிக்கொண்டே மெழுகுவர்த்தியை டேபிள் டிராவில் எடுத்துப் போட்டுக் கொண்டார். இருவரும் கேக்கை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டோம். ஸ்டோர் ரூமிருந்து ஒரு கவரை எடுத்து வந்து நீட்டினார். அட ஸ்டோர் ரூம்னா பீரோனு அர்த்தம். அந்த வீட்டுல நிறைய ரூம் இருக்கு ஆனா தடுப்பு சுவரில்லாமல் ஒரு ரூம் போல தெரியும். அந்த கவர் எனக்கு பிறந்த நாள் பரிசாம், உடனே "பிரித்து பாரு சிரஞ்சீவி" என்றார். ரோலக்ஸ் வாட்ச் போன்ற ஒரு சாதாரண வாட்ச் இருந்தது ஆனால் புதிசுயில்லை. ரொம்ப நேரம் அடக்கி வச்சிருந்த கேள்வியை அப்போதே கேட்டேன் "அந்த மெழுகுவர்த்தியை என்ன செய்வீங்க?". "ஹி ஹி உங்களோட அடுத்தப் பிறந்த நாளைக்கு யூஸ் பண்ணிக்குவோம்" என்றார் புருவங்களை உயர்த்தி. " அப்பவும் கேஸ் லைட்டர்தானா! சீக்கிரம் காலேஜ் படிப்பை முடிச்சுட்டு இந்த வீட்டை காலி செய்வதே எனது இந்த பிறந்த நாள் சபதமாக ஆக்கிக்கொண்டே உறங்கிப் போனேன்.
'அடச்சீ மெழுகுவர்த்தி கனவா வருதே' என்று காலையில் தூக்கம் கலைந்தேன். கையில் கிடந்த 'அந்த' ரோலக்ஸைப் பார்த்தேன் மணி 9:45 காட்டியது.ரூமில் யாருமில்லை விஷ்ணு கிளம்பிவிட்டார் போல, எந்த தியேட்டரில் எந்தப் படம் எங்கு டிக்கெட் கிடைக்கும் என அத்தனை விபரமும் அத்துப்படி. இந்த வக்கீலுக்கு கிளைண்ட் இருப்பாங்கள அதுபோல இவருக்கும் உண்டாம், இவர்தான் இன்பார்மராம். எப்படியும் வாரத்துக்கு எட்டு தியேட்டராவது நானும் இவருடன் போவேன் சும்மா படம் பார்க்கவாவது. ஆனால் இந்த வாரம் எல்லாம் கொஞ்சம் அடக்கியிருக்கேன் காரணம் நான் ஆடிவிட்டா என் அப்பாவும் ஆடிருவாரு நேற்றும் இன்றும் மத்தியானம் ரெண்டு மணிக்கு எனக்கு பரிட்ச்சை, முதல் அரியர். ஆனாவொரு விஷயம் பாருங்க நம்ம விஷ்ணு நம்ம அரியர் பிரண்டு தான் -நாலு வருஷ அரியர். ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம் என நினைச்சிருந்தோம் இதோ அவரு ஓடிட்டாரு யாருக்கு என்ன அவசரமோ... என்று நானும் கிளம்பினேன்.
இன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. காலேஜ் லீவு விடும் அளவிற்கு மேகமில்லை. நீங்கள் இன்னும் வளரனும் தம்பி என்று மேகத்திடம் சொல்லிவிட்டு மொகஞ்சதாரோ குளியலறையில் குளித்துவிட்டு ரூம் உள்ளே நுழைந்தேன். ஓர் அதிர்ச்சி, ரோலக்ஸ் கட்டிப் பார்த்தால் அதே 9:45 தான் காட்டியது; சுவரிலிருந்த தொங்கிக் கொண்டிருந்த டேபிள் ஆமாம் டேபிள் கடிகாரம்தான் அதைப் பார்த்தால் 1:45 என்று இருந்தது. அடப்பாவி ஓடாத வாட்ச்சை ஓவர் நைட்ல கொடுத்துட்டானே என்று திட்டிக்கொண்டே கைக்கு கிடைத்த விஷ்ணு டிரஸை போட்டுக் கொண்டு விரைந்தேன் காலேஜ்க்கு. புண்ணியவான், பஸ் டிரைவர் நம்மை பார்த்து வண்டியை ஸ்லோ செய்ய ஏறிவிட்டேன். நாம்தான் பஸ்க்கு குறுக்கே ஓடுனோமே. "அண்ணே இன்னைக்காவது சில்லறை இருக்கா" என்று நேரம் ஆக்கிக் கொண்டிருந்த கடுப்பைத் தூரத்திலிந்த கண்டக்டரிடம் காட்டினேன். 2:10 வரை ஹாலுக்கு விடுவார்கள் அதற்குள் அடைந்துவிடலாம் என மனக்கணக்குயிடும் போது அந்த கோகுல் என்னைப் பார்த்து மொக்கையான லுக்விட்டபடி பல்சரில் பறந்துகொண்டிருந்தான். கருப்பு கண்ணாடியை தலை மேல் போட்டுக் கொண்டு கடுக்கனைக் காதுக்குக் கீழ் போட்டுக் கொண்டு, கிழிந்த[ஐ மீன் ஸ்டைலான] பேண்டுடன் "Made in califrnia" என வாசகம் பின்புறம் பொறித்த சட்டையும் போட்டு சென்று கொண்டிருந்தான். பக்கிக்கு california" ஸ்பெல்லிங் மட்டும் தெரியாது எனத் தெரிந்தது. வண்டி எண் சிறிதாகவும் S.P.கோகுல் என்பது பெரிதாகவும் நம்பர் போர்ட்யிருந்தது.
சொல்ல மறந்து விட்டேன், கோகுலும் எங்க காலேஜ் தான், டிகிரி இன்னும் முடிக்கல. நம்ம ஏரியா கவுன்சிலர் பார்வதியோட பையன் தான் கோகுல். அவன் அப்பா சுப்பிரமணி போல இவனும் வீட்டு ப்ரோக்கர்தான். அனேகமாக நாங்கள் இருக்கும் வீட்டையும் இவன்தான் காட்டினான் என நினைக்கிறேன் கமிஷன் இல்லாமல். ஆமாம் இவரும் நம்ம விஷ்ணுவோட கிளைண்ட்டுதான், அடிக்கடி ரெண்டு பேரும் சேர்ந்து சின்ன சின்ன பிசினசும் செய்வாங்க. ஆனால் ஒவ்வொரு முறையும் விஷ்ணுவை நல்லா ஏமாத்துவான். தீப்பெட்டி வாங்க கஞ்சப்படும் விஷ்ணுவுக்கு கேஸ்ஸும் கேஸ் லைட்டரும் தந்தது யாரென்று தெரியுமா? கவுன்சிலர் பார்வதி, நம்ம கோகுலோட ரெகமன்ட் தான். ஆகமொத்தத்தில் கோகுல் என்கிற ஜல்லி வீட்டில் ஓளிந்து கொள்ளும் பல்லி தான் விஷ்ணு.
"தம்பி டயம் என்ன?" என்று பேருந்தில் இருந்த ஒரு தாய்க்குலம் கேட்க, கட்டியிருந்ததோ 'அந்த' ரோலக்ஸ் என்பதால் இது சிங்கப்பூர் டயம் மேடம் இன்னும் டயம் செட் செய்யவில்லை என்று சமாளித்துக் கொண்டே டிக்கெட்டைவாங்கிக் கொண்டு வெளியே குதித்தேன். ஓடுனேன் ஓடுனேன் HOD ரூம் அருகேவரை ஓடினேன். அங்கே டவர் கிடைக்காமல் வெளியே "ஹலோ ஹலோ" என்று கத்திக் கொண்டிருந்த டிபார்ட்மென்ட் டைப்பிஸ்ட் வினித் என்னைக் கவனித்து அழைத்தார். "சார் எக்சாமுக்கு நேரமாச்சு அப்புறமா வரட்டா?" என்றேன். "அட வாங்க தம்பி நீங்கதானே விஷ்ணுவோட ரூம்ல தங்கியிருப்பது" என்றார் கண்ணாடியை துடைத்துக் கொண்டு."ஆமாம் சார்.." என்று அவர் டேபிள் அருகே சென்றால், நேற்று குப்பைப் பெட்டியில் நாங்கள் கிழித்துப் போட்ட அந்த காகித குறிப்புகள் அச்சு அடிக்கப்பட்ட இரண்டு காகித சீட்டுகளிருந்தது. மனிஷன் அதை எடுத்து ஒன்னு சேர்த்து பிரின்ட் செய்திருக்காரு.'அஹா பிறந்த நாள் பம்ஸா' எண்ணிக்கொண்டே "சார் எக்ஸாமுக்கு நேரமாச்சு" என்றேன். "எக்ஸாமா? உனக்கு அரியர் இருக்கா?" என்ற ரகசியத்தை சத்தமாகக் கேட்டு உற்றுப் பார்த்தார். அட மூளைகெட்ட மூடனே "உங்களுக்கு ஏன்னா சார் வேணும்" என்றேன்."இல்ல, விஷ்ணு நம்பரை டிரை பண்ணுறேன் கிடைக்கல? இந்த SWH26F என்றால் என்ன?"என்றார். விழுங்களுடன் "அது.. அது வீட்டு நம்பர் சார்" என்றேன்.
"வீட்டு நம்பர் இப்படியிருக்காதே?"
"அதான் தவறானது என்று அடுத்த சீட்டில் இருக்குதே" என்று கொண்டுருக்கும் போதே விஷ்ணு இன்பார்மர் என்ற பெயரில் அவர் போன் ஒலித்தது. இந்த வினித்தும் விஷ்ணுவோட கிரகம் பிடித்த கிளைண்ட்டாம்.
"விஷ்ணு எங்கயிருக்கேங்க?"
"காலேஜ்க்கு தான் வந்துகிட்டுயிருக்கேன் சார்"
"நான் சொல்லல அந்த நாலு டிக்கெட் கிடைச்சிரும்ல?"
"கவலைப் படாதீங்க சார் ரெண்டு பெரியவுங்க ரெண்டு சின்னபசங்க தானே செந்தில்னு நம்ம தோழர் இருப்பாரு அவர்கிட்ட 2P 2S விஷ்ணு சொல்லுங்க அவருக்கு புரியும்"
"அப்புறம் SW 6H 2P எந்தப் படத்துக்கான பாஸ்வேர்டு? ஒரு பேப்பர்ல எழுதி இருந்துச்சு.. நல்ல படமா?"
"ஹலோ ஹலோ சரியா கேட்கல வந்து பேசுவோம் சார்" என இணைப்பைத் துண்டித்தார் விஷ்ணு.
நல்லவேளை எப்படியோ வெளியே வந்துட்டேன் பார்த்தால் வெளியேதான் விஷ்ணு கடலை போட்டுக் கொண்டிருந்தார். "என்ன கோகுல் சீக்கரமாவே அரியருக்கு வந்துட்ட?" "விஷ்ணு நீங்க என்ன சொல்றீங்க நானே 1:45 தான் வீட்டை விட்டு கிளம்பினேன் இன்னும் பரிட்சை ஆரம்பிக்கலையா?" என்று அசடுவழிந்தேன். "1:45 ஆ! மணி இப்பதானே 1:45 ஆகுது நீங்கள் வால் கிளாக்கை பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். உங்க கிட்டயும் வாட்ச் இருக்கு என்கிட்டையும் இருக்குனு அந்த கிளாக்கை நிறுத்திவிட்டேன். உங்க வாட்சை நீங்க பார்த்திருக்கணும் சிரஞ்சீவி!" என்றார் சிரிக்காமல். கையை அவரிடம் நீட்டி "எனக்கு நேரமே சரியில்ல விஷ்ணு" என்றேன். "அட டா! இந்த கோகுல் என்னை ஏமாத்திட்டானே. நேத்து வாட்சை கழட்டி தரும் போதே ஒரு டவுட் இருந்துச்சு சரி இன்னைக்கு அவனை பார்த்துகிறேன்."என்று சொல்லி தேர்வு அறைக்குள் நுழைந்துவிட்டார். கட்டியிருந்த வாட்ச்சை கழட்டி பேண்டில் வைக்கும் போது சிக்கியது விஷ்ணுவின் இரண்டு காகித சீட்டுகள் ஒன்று கோகுல் விஷ்ணுவுக்கு எழுதியது மற்றொன்று நான் விஷ்ணுவுக்கு எழுதியது.
Mr.விஷ்ணு,
சல்ஃப்யூரிக் ஆசிட், ஹைட்ரோஃப்லோரிக் ஆசிட், டங்ஸ்டன் வினையின் சமன்பாட்டுக் குறியீடு சொல்லவும்
H2SO4 + 6HF + W --> ?
சன்மானம் வழங்கப்படும்
-S.P. கோகுல்
Mr.கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு. கவனிப்புகள் வரவேற்கப்படுகிறது.
-விஷ்ணு
Vis,
Gok க்கு உதவுறீங்களா? அவன் மோசமானவன்
-சிரஞ்சீவி
Sir,
எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்
- விஷ்ணு
என்று கோர்வையாக நினைத்துக் கொண்டே கிழித்துப் போட நினைத்தேன் உடனே அந்த வினித் நியாபகத்திற்கு வர சாக்கடையில் போட்டு தண்ணியை ஊற்றிவிட்டேன்.
மணியடித்தது; மங்கையொருவர் அன்ன நடையிட்டு வந்து தேர்வு தாள் எல்லாம் கொடுத்துவிட்டு கிளாசுக்கு மூன்று log புக்கை வைத்துவிட்டு அடுத்த வடை காபிக்காக வாசலை நோக்கி உட்கார்ந்தார். சில நபர்கள் பயன்படுத்திவிட்டு வந்த அந்த லாக் புக்கை திறந்தான் விஷ்ணு....
Mr.விஷ்ணு,
நிலையான ஐசோடோப்ஸ்களுக்கு உதாரண சமன்பாட்டு குறியீடு தரவும்.சன்மானம் வழங்கப்படும்
-S.P.கோகுல்
-நட்புக்காக[போட்டிக்கல்ல] எழுதிய சவால் சிறுகதை 2011
கஞ்சத்தின் தலைவா! [சவால் சிறுகதை 2011]
Info Post
4 மறுமொழிகள்:
கதை அருமை
இன்று என் வலையில்
சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி
கதை கலக்கலா சொல்லிருக்கீங்க நண்பா! வெற்றிபேற வாழ்த்துக்கள் நண்பா
வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க
அசத்தும் ஆல்ரவுண்டர்கள்
Post a Comment