Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, January 6, 2012

சில நூற்றாண்டுகள் அரசியலில் பின்னோக்கி தமிழகம் இருந்திருந்தால் மற்றும் நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்காமலிருந்தால் எப்படியிருக்கும் என்ற சமகால அரசியலுடன் சைடுபார்வை.........

மன்னர் ஏன் காரில் வராமல் லாரியில் வருகிறார்?
மன்னரின் கிரீடம் தட்டுகிறதாம்

இரவில், கரண்ட் போனபிறகு தான் கருப்புக் கொடி காட்டுவேன் என மன்னர் ஏன் அடம் பிடிக்கிறார்?
அவசரத்தில் கருப்புக் கொடியை எடுத்துவரவில்லையாம்

மன்னா! தங்களைப் புகழ்ந்து பாடியதற்காக அந்த புலவருக்கு இவ்வளவு பணத்தை தரவேண்டுமா?
அமைச்சரே, அந்தப் புலவன் அரசு பேருந்தில் வீட்டுக்கு போகப்போகிறான். பணம் திரும்ப நம்மிடமே வந்துவிடும் கவலைப் படாதீர்கள்.

அமைச்சரே! நமது இலவச கிரைண்டரை ஸ்வீட்டுக் கடையில் ஏன் வச்சுருக்காங்க?
அது மைசூர் பாக்கை உடைச்சு சாப்பிட.

மன்னனரின் பேச்சு, மிக்ஸி போல உள்ளது என்றீர்களே! அப்படியென்றால்?
சரியான பிளேடு என்றேன்.

பக்கத்து நாட்டில மக்களுக்கு இரும்பு தட்டு இலவசமாக தாராங்களாம். வேடிக்கையாயிருக்குல!
அட அது லேப்டாப் மன்னா!

இலவசாமாக ஆடு தருவதாக அறிவித்தோமே, மக்கள் எதை விரும்புவார்கள் வெள்ளை ஆடா? கருப்பு ஆடா?
எதாயிருந்தாலும் பரவாயில்லையாம். ஆனால் உரிச்சு சமைச்சு தரணுமாம்.

பிரிட்டிஷ்காரங்க மன்னருக்கு இலவசமாக ஒரு மின் விசிறி கொடுத்தாங்களே அது இப்ப எங்க?
அதோ அதுலதான் மன்னர் பட்டம் விட்டுக்கொண்டுயிருக்கிறார்.

மன்னா! நாட்டாமை தேர்தல்ல சில வேட்பாளார்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். தாங்கள் தான் ஜனநாயகத்தை காக்க வேண்டும்.
சரி, இனி அந்தப் பணத்திற்கு வரி விதித்து விடுகிறேன்.

விவசாய கடனை எப்படி மன்னா தள்ளுபடி செய்தீர்கள்?
எல்லாம் பக்கத்து நாட்டில் கடன் வாங்கித்தான்


உங்க நாட்டு மன்னர் இலவசமாக பஸ் பாஸ் கொடுத்திருக்காராமே.
எங்க ஊரு பஸ்ல ஏறிப் போகமுடியாது தள்ளிகிட்டே தான் போகணும்.

பத்து கிலோ புளி மூட்டை இலவசம் என்று தேர்தல்ல வென்ற புளியங்குளம் நாட்டாமை இப்ப என்ன செய்கிறாரு?
புளியங்கொட்டை கடத்தல் வழக்கில் சிக்கி களி தின்று கொண்டிருக்கிறார் மன்னா!

போருக்கு போன மன்னர் ஏன் நாடு திரும்பவில்லை?
அந்நாட்டில் மலிவு விலையில் மதுபானங்கள் இலவசம் என்றதும் மன்னர் மட்டையாகிவிட்டார்.

மன்னர் மாறுவேடத்தில் என்ன கண்டுபிடிக்க இப்படி போறாரு?
தமிழக மீனவர்களை சுடும் போது கத்துறாங்களானு கண்டுபிடிக்கப் போறாரு.

பிரிடிஷ்க்கு கப்பம் கட்ட மாட்டேன் என்று மன்னர் தினமும் மூன்று மணி நேரம் உண்ணா விரதம் இருக்கிறாராமே! எங்கே?
அதுவா ஜெயிலில்.


* முத்துகமலம் இணைய இதழிலும் படிக்கலாம்.

3 மறுமொழிகள்:

சி.பி.செந்தில்குமார் said...

//மன்னா! தங்களைப் புகழ்ந்து பாடியதற்காக அந்த புலவருக்கு இவ்வளவு பணத்தை தரவேண்டுமா?அமைச்சரே, அந்தப் புலவன் அரசு பேருந்தில் வீட்டுக்கு போகப்போகிறான். பணம் திரும்ப நம்மிடமே வந்துவிடும் கவலைப் படாதீர்கள்//சரியான டைமிங் காமெடி...

Unknown said...

காமடி கலக்கல்கள் ஹஹா!

rekha said...

nice