Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Tuesday, January 28, 2014

என்னங்க கல்யாணப் பொண்ணே பாட்டு பாடுது?
கல்யாணத்தின் முதல்பாதி போர், இரண்டாம் பாதி அதவிட போர் என்று யாரோ பதிவில விமர்சனம் எழுதிவிட்டாங்களாம்.

என்னங்க போன பந்தியில தான சாப்பிட்டேங்க அதுக்குள்ளையும் இன்னொரு பந்தியா?
யோவ் இலையின் நீளம் கருதி போன பந்தியில சாப்பிட்டது பார்ட் ஒன் மட்டும் தான்

ஏன் கல்யாணத்தில எல்லார் மொபைலையும் சுட்சு ஆப் செய்ய சொன்னாங்க?
டவரில்லதா ஊர்ல தான் மண்டபம் கிடைச்சதானு யாரும் கேட்கக் கூடாதாம்

அவர் ஏன் முகம் காட்டி பேசமாட்டேன் என்கிறாரு?
இது போட்டோ கமெண்டு போட்டுருவாங்களாம்

பந்தியில சாப்பிட்ட இலையை எண்ணிக்காட்டச் சொன்னாராமே ஏன்?
எத்தனையாவது இலைனு மறுமொழி போடனுமாம்

அந்தப் பொண்ணுகிட்ட போய் அந்தப் பதிவர் ஏன் அடிவாங்குனாரு?
மாப்பிள்ளை ஜாலியான டைப்பு பிடிச்சிருந்தா நண்பர்களுடன் பகிர்ந்துக்கோங்கனு சொலிட்டுப்போறாரு

சமையல்காரர்: ஏங்க சாம்பார்ல உப்பு எல்லாம் போதுமா?
ப்ளாக்'காரர்: ம்ம்.. சாப்பிட்டுப் பார்த்து பதிவு போடுறேன், படிச்சுப் பார்த்து கருத்து போடுங்க!

அவரு அவர்கிட்ட பொய் ஏன் ஆடித் தள்ளுபடி கேட்டேங்க?
ஒரு கமெண்ட் போட்ட ஒரு கமெண்ட் இலவசமுனு போடு போட்டு இருக்காருல அதான்

பதிவுலகில் மீண்டும் சர்ச்சையா?
அட நீங்கதானே சர்ச்சையில்லாத பதிவர்னு ஒருத்தரை இழுத்து விட்டீங்க அவர எல்லாரும் விமர்சிச்சு சர்ச்சை ஆயிருச்சு

மாமா! உங்க பொண்ணு சரியில்லை, சாப்பாடு வேண்ணுமுனு கமெண்ட் போட்டத் தான் சமைக்கவே ஆரம்பிக்குறா
அதுசரி மாப்பிள்ளை போன வாரம் நான் போட்டப் பதிவுக்கு நீங்க ஏன் ஓட்டுப் போடலா?

எதுக்கு அந்த இயக்குநருக்கு நன்றி சொல்லி நோட்டீஸ் எழுதிருக்காங்க?
அவர் படத்தில வந்த கல்யாணத்தைக் காப்பி அடிச்சுட்டதா யாரோ சொல்லிட்டாங்க

மொய் எழுதுற இடத்தில பகுப்பாசிரியர் தேவைன்னு ஏன் போர்டு வச்சுருக்காங்க?
தொகுப்பாசிரியர்னா எல்லாரும் பயப்பிடுறாங்க அதான் பகுப்பசிரியர்னு எழுத்திட்டோம்.

மண்டப உரிமையாளர்: நாளைக்குத் தான பதிவர் வீட்டுக் கல்யாணம். இது வேற கல்யாணம்
பிளாக்கர்: பரவாயில்லை இந்த மாப்பிள்ளையை ஒரு ப்ளாக் தொடங்கச் சொல்லுங்க
மண்டப உரிமையாளர்:!!!!

மேல்கண்டவை நகைச்சுவைக்காக மட்டுமே.
இதே மண்டபத்தில் நடந்த பிற பிளாக்கர் கல்யாணங்கள் 2011 2010

6 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... ஹா...

ராஜி said...

அந்தப் பொண்ணுகிட்ட போய் அந்தப் பதிவர் ஏன் அடிவாங்குனாரு?
மாப்பிள்ளை ஜாலியான டைப்பு பிடிச்சிருந்தா நண்பர்களுடன் பகிர்ந்துக்கோங்கனு சொலிட்டுப்போறாரு
>>>
இதான் டாப்

Venu G said...

haha good one.. :)

Chellappa Yagyaswamy said...

புதுக்கோட்டையில் 2015 அக்டோபர் 11 இல் நடைபெறவிருக்கும் பதிவர் மாநாட்டைக் கருத்தில்கொண்டு தீர்க்கதரிசனமாக எழுதிய துணுக்கோ இது?
******
மண்டப உரிமையாளர்: நாளைக்குத் தான பதிவர் வீட்டுக் கல்யாணம். இது வேற கல்யாணம்
பிளாக்கர்: பரவாயில்லை இந்த மாப்பிள்ளையை ஒரு ப்ளாக் தொடங்கச் சொல்லுங்க
மண்டப உரிமையாளர்:!!!!

Oliver Jones said...


Hey! I know this is kinda off topic however I'd figured I'd ask. Would you be interested in trading links or maybe guest authoring a blog post or vice-versa? My site goes over a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an email. I look forward to hearing from you! Terrific blog by the way! gmail sign in

Patricia Howell said...


Hey are using Wordpress for your site platform? I'm new to the blog world but I'm trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated! paypal credit login