அண்மையில் நடைபெற்ற சாஸ் தொழில்முனைவோர் சந்திப்பிற்கு உருவான பாடல் வரிகள்
பல்லவி:
மாற்றுத் தொழில் ஆரம்பிச்சு மாசியில நாள் குறிச்சு
நடக்குது சாஸ் கனெக்ட் தான்
கோவையில் நடக்குது சாஸ் கனெக்ட் தான்
சர்வீஸ் தொழில் பண்றவரும் ஏஐ தொழில் முன்னவரும்
சந்திக்க வைப்பதும் சாஸ் கனெக்ட் தான்
ஸ்டார்நெட்டின் சாஸ் கனெக்ட் தான்
சரணம் 1:
சொத்து மேல சொத்து வித்து
சாப்ட்வேர் வாங்க வேண்டாம்
வாடகைக்கு வாங்கி வந்து
வர்த்தகத்தை முன்னேற்று
கொட்டிக் கிடக்கு தேவைகள்
தொழில் பெருகும் பாதைகள்
பொருளாக விற்காதே
சேவையாக்கி வெற்றிகொள்
கற்றுக்கொள்ள ஆயிரம் உண்டு
கத்துக்குட்டி நாங்கள் இன்று
வளர்ந்து விட தடையில்லை தமிழ் நாடு
எட்டிவிட தூரமில்லை சாஸ் நாடு
சரணம் 2:
சந்தை மதிப்பு ஏறிப் போச்சு
விற்பனை எல்லாம் நொடிஞ்சு போச்சு
சாஸ் முறை மட்டும் தானே
வேலை வாய்ப்பை அள்ளி போடும்
டிரில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
வெற்றிபெற தேவை வணிகநோக்கு
ஏஜென்டிக் ஏஐ இருக்கு
வணிகத்தை சாஸ் முறை ஆக்கு
சின்ன நகரமானாலும் இளக்காரமில்ல
படித்த இளைஞர் படை இருக்குது உள்ள
உருவாகுமே பல யூனிகார்ன்கள் மெல்ல
ஏஐ எக்கானமிக்கு எல்லைகள் இல்ல
0 மறுமொழிகள்:
Post a Comment