Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, November 20, 2009

நவம்பர் 20 2109,

மழை என்பது பல நீர்த்துளிகள் கொண்ட தொடர் அணிவகுப்பாக வானிலிருந்து பூமியை நோக்கி விழும் ஒரு அதிசய நிகழ்வு. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்வரை நாம் வாழும் பூமிக்கு கிடைத்த வரப்பிரச்சாதம் மழை. மழையின் சப்தம் ஆயிரம் குழாய்தண்ணீர் விழுவதைப் போன்றுயிருக்கும், மழை பார்ப்பதற்கு மிக ரம்பமாகயிருக்கும், மழை மண்ணில் விழுந்தவுடன் ஒரு வாசனை பரப்பும் அதற்கு பெயர் மண் வாசனை. நாம் வெயிலுக்காக பிடிக்கும் குடையை அந்த காலத்து மக்கள் மழைக்காக பிடித்திருப்பார்கள் என்கிறது தற்காலத்து ஆய்வுகள். மழைத்தண்ணீர் நாம் குடிக்கும் மினரல் தண்ணீரை விட சுவையானது மிகவும் சுத்தமானதாகவும் இருந்துள்ளது. அந்த காலத்து தேடு எந்திரமான கூகிளில் பல அரிய வகை மழைக்காட்சிப் படங்களை இன்றும் காணலாம்.



கி.பி. 2000 ஆண்டுவாக்கில் வெளிவந்த படங்கள் மூலம் மழை எப்படி பெய்ந்தது என்று அறியலாம் மேலும் அதே படங்கள் மூலம் மழையை எப்படி சேமிக்காமல் வீணாக்கலாம் என்பதையும் அறியலாம். இப்போது கடல் நீரை குடிநீராக மாற்றசெலவிடுவதைவிட அன்றே நம் முன்னோர்களால் மழை நீர் சேமிக்கப்பட்டிருந்தால் இந்தபிரச்சனையே வந்திருக்காது. இன்று மல்டிப்லெக்ஸும் ஸாப்பிங் மாலும் உள்ள இடங்களில் அன்று கண்மாய்கள் எனப்படும் சிறு குளங்களிருந்ததாகவும் அதில் மழைநீரை சேமித்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கோவில்களில் உள்ள விளையாட்டு மைத்தானங்கள் உண்மையில் தெப்பக்குளங்களாக நீரை தேக்கிவைத்தாம் இன்று நீரின்றி விளையாட்டு மைதானங்களாக முழுதும் மாறிவிட்டது. நம் நாட்டுக்காக மிகவும் தொலைநோக்குப்பார்வையில் சீர்திருத்தங்கள் செய்த தலைவர்களுக்கு ஊருக்குள் சிலை வைக்க இடமில்லாததால் பெரிய பெரிய மலைத்தொடர்களில் அவர்களுக்கு சிலை செதுக்கப்பட்டு அழகாக மரியாதை செழுத்தப்படுகிறது மேலும் அது சுற்றுலாத்தளமாகவும் குல்ப் விளையாட்டு தளமாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியே. மொட்டைப் பாறைகளாகயிருந்தாலும் இன்று வானிலிருந்து போகும் டவுன் பிளைட்டுகளிலும் சிட்டி பிளைட்டுகளிலும் அந்த மலைகளைக்கண்டால் அந்த தலைவர்களை நேரில் பார்த்ததைப்போல தோன்றும் ஆனால் உண்மையில் இந்த இடங்கள் கி.பி.1990களில் பெரிய நீர்வீழ்ச்சிகளாகயிருந்த இடங்கள் இன்று நீரற்று போய்யுள்ளது என தெரியவருகையில் நம் கண்களில் நீர் ஊறுவது திண்ணம்.

அக்காலத்துமக்கள் இன்று நாம் அணியும் யு.வி. சட்டைகளை அணியவில்லை காரணம் ஓசுன் என்ற வாயு மண்டலம் பூமியை சூழ்ந்திருந்ததாகவும், யு.வி. கதிர்களை தடுத்ததாகவும் வரலாறு சொல்லுகிறது. அதற்கு கீழே மேகம் என்று அழைக்கப்பட்ட ஒரு மாபெரும் ஆவி மண்டலம் இருந்திருந்ததாம் அதுதான் மழையை உற்பத்தி செய்ததாம். அந்த மேகம் ஒரேயிடத்தில் நிற்கும் மண்டலமல்ல நகர்ந்த வண்ணமே திரியுமாம், அதில் வேடிக்கையென்னவென்றால் மழை வரும் என்று ஆய்வாளர்கள் கூறினால் மழை பொழியாதாம். மழையை கண்ணில் பார்த்த மூத்தகுடிமக்களை வைத்து ஆய்வுகள் நடந்தவண்ணமுள்ளது. மழைக்காலம் என்று ஒரு காலமேயிருந்த்தாம் அதில் மழை தினமும் பொழியுமாம். கப்பல் போக்குவரத்திற்காக பயன்படும் கடல்கள்கூட இந்தமாதிரியான மழையால் உருவானவையே. இன்று எறிமலைகளுக்கான தடுப்புச்சுவர்களாகயிருக்கும் மாபெரும் சுவர்களெல்லாம் ஒரு காலத்தில் அணைக்கட்டுகளாகயிருந்தவை அவை பல நூறு அடிகள் வரை மழை நீரை சேமித்துவைக்கும் திறன் கொண்டவை. அந்த அணைகள் பார்ப்பதற்கு குட்டி கடலைப்போலயிருக்கும். நாம் கழிவு நீரை வெளியேற்றும் வாய்க்கால்கள் அன்றைய காலத்தில் ஆறுகள் என்றபெயரில் நல்ல நீரை கடலுக்கு கொண்டு சென்றவையாம் காலப்போக்கில் மணல்கள் அள்ளப்பட்டு பள்ளமாகி போனதாம்.

அந்த மழை நீரால் மண்ணரிக்க முடியாமல் பலமரங்கள் தங்கள் வேர்களால் பாதுகாத்தனவாம் அதை அந்த காலத்து வியாபாரிகள் போட்டிபோட்டு வெட்டி பணமாக மாற்றி பாதுகாத்தனராம். எஞ்சியிருந்த மாபெரும் மரங்களை காட்டுத்தீ பரவி அழித்ததாம். மழை இல்லாததால் ஈரப்பதமில்லாமல் போனதாலும் இந்த தீ எளிதில் பரவி காடுகளை அழித்ததாம். அந்த இடங்களில் தான் இன்று இராட்சச ஆன்டனாக்களும் ராடர்களும் பொருத்தப்பட்டு நிலவில் உள்ள நீரை பற்றி ஆராய்கிறோம். தற்போது நீர் அதிகம் எடுக்காத மறபணு மாற்றப்பட்ட மரங்களால் குறைந்த வெப்பநிலைக்கே தாங்கமுடியாமல் ஆங்காங்கே சாலையோரங்களில் ஒடிந்துவிழுகிறது ஆனால் அக்காலத்தில் பல்லநூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படும் மரங்களை இன்று இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கிறது. கி.பி. 2000 வாக்கில் இமயமலையில் மக்கள் குடியேராமல்யிருந்தனர் ஆனால் இப்போது பனிக்கட்டிகள் இல்லாததால் அங்கும் விவசாயம் செய்ய மக்கள் குடியேற்றப்படுகிறார்கள் இதற்கிடையில் சீனா மக்களும் அங்கு குடியேறி சொந்தம் கொண்டாடுவது பனியால் வந்த சனி எனலாம்.

புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் குறிப்பின்படி அந்தகாலத்தில் பூமிக்கடியில் 10அடியில் நீர் கிடைத்ததாம் அதை எளியரக பம்புகள் கொண்டும் கிணறு எனப்படும் பெருங்குழியாக தோண்டியும் நீரை பெற்றனராம்.பெருமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறைகூட விட்டனராம் சில சமயம் வெள்ளம் என்று கூறிக்கொண்டு ஒரு ஊரைக்கூட நீரில் மூழ்கடிக்குமாம் அந்த நேரத்தில் ஊரே ஸ்தம்பித்து போய்விடுமாம். தற்கால மக்கள் கண்டிடாத மழையைப்பற்றி 'மழைப்பார்க்' என்ற படம் எடுக்கப்பட்டுவருகிறது, ஜூராசிக் பார்க் பார்ட் 10 எடுத்த இயக்குனர் இயக்கத்தில் வெளிவருகிறது அந்தப்படதின் மூலம் பல அறியவகை விசயங்களை நாம் அறியலாம். அந்த காலத்துமக்களின் மூலம் கிடைத்தப்பாடத்தை வைத்து இனியாவது இயற்கையை பாதுகாப்போம் எஞ்சியிருக்கும் கடலையாவது கடனுக்காவது மாசுபடுத்தாமல் காப்போம்.

2 மறுமொழிகள்:

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

நீச்சல்காரன் said...

mix
நன்றிகள்