Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Tuesday, December 8, 2009

"அடேய் புலிகேசி உன் தாத்தன்தான் என் பாட்டிப் பேச்சை கேட்காமல் நாட்டைஆண்டு தரிகெட்டுப்போனான். நீயாவது பிழைத்துக் கொள்ளட்டும் என அரசாங்கம் சிபாரிசில் கிடைத்த சாப்ட்வேர் வேலையை காப்பாற்றிக்கொள்ளடா"
"கவலை வேண்டாம் தாயே மாவீரர் பில் கேட்ஸ் போலவும் சாம்ராட் நாராயணமூர்த்தி போலவும் வளர்ந்து புகழ்பெறுவேன் தாயே!"
"இதற்கு மட்டும் குறைச்சலில்லை நேற்று கோடு எழுத வேண்டிய நேரத்தில் குரட்டைவிட்டு தூங்கினாயாமே"
"உங்களுக்கும் தகவல் வந்துவிட்டதா!"
"அடேய் இன்னும் இந்த மாளிகை யைவைத்து கொண்டு வீணாபோனவரையெல்லாம் அமைச்சர்கள் என்றுக்கூறி சுற்றித்திரிகிறாயே! உன்னை நம்பிதானடா இந்த ப்ராஜெட்டும் இந்த டீமும்வுள்ளது"
"எது திட்டுவதென்றாலும் மெயிலில் திட்டுங்கள். குமரிகள் குவிந்து கிடக்கும் இந்த அந்தப்புரத்தில் திட்டவேண்டிய நேரமாயிது. ம் கிளப்புங்கள்..."
அமைச்சர்:"மன்னா ஏற்கனவே அனைவரும் சம்பளம்தராததால் கிளம்பிவிட்டனர். அந்தப்புரத்தில் இப்போது கோழிப்பண்ணைதான் உள்ளது
-----------------------பின்னணி இசை-------------------
"இந்த அறிவு இந்த அப்லிகேஷனாக போகுது"
"அப்படியென்றால் மேஜிக்கா?"
"இல்லை லாஜிக்"
"புரியவில்லை மன்னா!"
"உனக்கு எதுதான் புரிந்தது. என் பெயர் இந்த அப்லிகேஷனில் இருந்தால் எப்படியிருக்கும்?"
"தாங்கள் தான் இந்த அப்லிகேஷனை கண்டுபிடித்த ஞானபலசாளி போல தெரிவீர்கள்"
"சபாஸ்! அப்படித்தான் என் பெயரை மைக்ரோசாப்ட் யென மாற்றிவிட்டால் 100 வருடங்களுக்கு பிறகு வரபோகும் மடையர்களுக்கு அதுயென தெரியவா போகிறது.
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!"
சேவகன்:"மன்னா! மன்னா! ஒரு மெயில் வந்திருக்கிறது மன்னா!"
"அப்படியா, மன்னர் முக்கியமான டிஸ்கஷனில் இருக்கிறேன்யென ரிப்லே செய் போ"
சேவகன்:"தங்களை வேலையை விட்டு தூக்கியதாக வந்துள்ளது மன்னா"
"வேலை போய்விட்டதா.........!"
அமைச்சர்:"உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை எல்லாம் மற்றவருக்கு ப்வார்வட் செய்யாதீர்கள் என சொல்லியும் செய்தீர்களே அந்த மின்னஞ்சலில் ஒருவன் உங்களை திட்டி அனுபியதையும் சேர்த்து உங்கள் மேலதிகரிக்கு அனுப்பிவிட்டீர்கள். இனியென்ன செய்வது மன்னா!"


-----------------------பின்னணி இசை-------------------


சேவகன்:"மன்னா நமது ஒற்றனிடமிருந்து ஒரு செய்திவந்துள்ளது"
"அப்படி என்ன அது! ஒற்றனை வரச்சொல்"
ஒற்றன்:"மைக்ரோசாப்ட் யென ஒரு கம்பெனியை பில் கேட் ஆரம்பிக்கபோறாராம் அதில் வேலை தேடலாம் மன்னா!"
"அடே ஒற்றா! அந்த கம்பெனியிலயிருந்துதாண்டா என்னைய வேலையவிட்டு தூக்கிட்டாங்க. நீ கொண்டு வந்த செய்திக்கு உன்னை மூன்று வாரத்துக்கு night shift தூங்காமல் செய் போ."


-----------------------பின்னணி இசை-------------------
சேவகன்:"மன்னா உங்களை பார்க்க ஒரு கன்சல்டண்ட் வந்திருக்கான். தங்களுக்கு வேலை தேடி தந்து பரிசில் பெறவந்திருக்கான்"
"வேலை தேடி தந்து தொலையும்"
கன்சல்டண்ட்:"மன்னா இந்த டெக்னாலஜியில் எது உங்களுக்கு தெரியுமென கூறுங்கள் flash player, Antivirus,Tomcat apache server, Query language, Netbeans, J2ee, Ms Paint"
"நிறுத்தடா மூடனே! மன்னரை பார்த்து ப்ளாஸ் விளையாடதெரியுமா யென்று கேட்கிறாய்"
க:"அப்படியில்லை மன்னா அது ஒரு அப்லிகேஷன்"
"அப்படியென்றால் ஆன்டி வைரசுக்கு பதில் அங்கில்வைரசில்தான் மன்னர் வேலை செய்வார்"
க:"மன்னா அப்படி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை"
"சரி அப்பாச்சி சர்வருக்கு பதிலாக அம்மாச்சி சர்வராவதுயுருக்கா"
க:"மன்னியுங்கள் மன்னா எனக்கு தெரியவில்லை"
"மன்னருக்கும் கொரிய மொழி தெரியாதே"
க:"அது கொரிய மொழியில்லை இதுதனி மொழி"
"ஆனால் மன்னருக்கு சோயாபீன்ஸ் என்றால் பிடிக்கும் அதாவது கிடைக்குமா?"
க:"மன்னா வருங்காலத்தில் வந்தால உங்களை கூப்பிடுவேன்"
"அது சரிமன்னரை பார்த்து ஈ அடிக்கத்தெரியுமாயென்றாயே!"
க:"அது ஜெ2ஈஈ மன்னா"
"அமைச்சரே! கடைசியாக ஏதோ சொன்னானே.. ஆ பெய்ண்ட் அடிக்க தெரியுமா யென்றுதானே கேட்டாய்"
க:"இல்லை மன்னா அதுஒரு மைக்ரோசாப்ட் அப்லிகேஷன்."
"அப்படியா! இருந்தும் என் மனம் ஏற்க மறுகிறதே! யாரடா அங்கே இந்த கன்சல்டண்டை தூக்கிகொண்டுபோய் தண்ணியில்லாத நீச்சல் தொட்டியில் தலைகுப்பர போடுங்கள்"
-----------------------பின்னணி இசை-------------------


புலிகேசிக்கு வேலை கிடைத்ததா?
பகுதி 2 http://neechalkaran.blogspot.com/2009/12/33-ii.html

3 மறுமொழிகள்:

Velmaheshk said...

good...

நீச்சல்காரன் said...

நன்றி *VELMAHESH* அவர்களே

Anonymous said...

super skit for me mr neechalkaran