Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, December 3, 2009

எங்க ஏரிய உள்ள வராதே

ஈக்களின் நந்தவனத்தில் ஒரு
வியாபாரமற்றக் கடை
எல்லாரும் வாடிக்கையாளர்களே
சில வேடிக்கையாளர்கள்
போட்ட கல்லில் கடைஅடைக்கப்பட்டதால்
இப்போ போக்குவரத்து தடைப்பட்டு
கழிவுநீர் வீட்டுக்குள் நுழை போடும்
இந்த சாக்கடை சீராகும் வரை

கொஞ்சம் அனுசரணையோடு
பயன்படுத்தினால் ஊருக்குள்
ரயில்நிலையம் வந்தாலும் வரலாம்
ஆனால் இந்த கற்சாலை உண்மையில்
ரயில் பாதைக்குயிடப்பட்டதில்லையாம்
நம் வாகனத்திற்கான தார்சாலை
என்கிறார்கள் ஓட்டுக்கு பணம்கொடுத்தவர்கள்

சாலைக்குயிரு புறமும் சிரித்தமுகத்துடன்
வளமையான மரங்கள் காட்சிக்கு.
கோடைகாலத்தில் கொஞ்சம் பெயிண்டும்
மழைகாலத்தில் கொஞ்சம் தண்ணியும்
காட்டுவர் எப்போதாவது கட்சிக்கொடியை
இறக்கிவிட்டு வெட்டப்பட்டபசும் மரங்களுக்கு
துணையாக இந்த மரத்தையும் மாற்றுவர்

இலவச நீச்சல் தொட்டிகள் உண்டு
அதில் குளிக்க அதிக நீருமுண்டு
நல்ல மழை நேரத்தில் செழிப்பான
குதுகலமே எங்களுக்கு மிச்சம்
இரவுகளில் மட்டும் பரணிகளில்
ஒட்டிக்கொள்வோம் காரணம் வீடுகளை
பள்ளத்தில் கட்டிக்கொண்டதால்

எங்க ஏரிய உள்ள வராதே

கவிதை வார்ப்பு தளத்திலும் வெளிவந்துள்ளது http://www.vaarppu.com/view/1967/

4 மறுமொழிகள்:

ப்ரியமுடன் வசந்த் said...

//கொஞ்சம் அனுசரணையோடு
பயன்படுத்தினால் ஊருக்குள்
ரயில்நிலையம் வந்தாலும் வரலாம்//

இது பேராசை :)))

கமலேஷ் said...

நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு...

நீச்சல்காரன் said...

பிரியமுடன்...வசந்த்,
கமலேஷ்,
தங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள்

தேவன் மாயம் said...

போட்ட கல்லில் கடைஅடைக்கப்பட்டதால்
இப்போ போக்குவரத்து தடைப்பட்டு
கழிவுநீர் வீட்டுக்குள் நுழை போடும்
இந்த சாக்கடை சீராகும் வரை///


நீரோடை போல் உங்கள் நடை அழகு!