டாக்டர் : நீதிபதி சார், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தவுடனே பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு போகாம கூகுள்ல நல்ல ஆஸ்பத்திரிய தேடுனதாலதான் அவரு இறந்துட்டார்.
இறந்தவரின் மகன் : நீதிபதி சார், அதுகூட பரவாயில்ல... வந்தவுடனே டாக்டர் மருந்த தராம நல்ல மருந்த கூகுள்ல தேடிகிட்டு இருந்தாரு அதான் அவரு இறந்துட்டார்.
நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கூகிளில் தேடி தீர்ப்பு அடுத்த வருடம் தரப்படும்.
*
"எங்கவூர் அரசியல்வாதிகளெல்லாம் கூகுள்ல தேடித்தான் பெஸ்ட் ரோடு போடுவாங்க."
"எங்கவூர் அரசியல்வாதிகளெல்லாம் கூகுள்ல தேடித்தான் பவர்-கட்டை சமாளிப்பாங்க."
"எங்கவூர் அரசியல்வாதிகளெல்லாம் கூகுள்ல தேடித்தான் அவுங்க தொகுதியையே கண்டுபிடிப்பாங்க."
*
"தலைவரு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராகி என்ன செய்யப் போறார்?"
"சாதிவாரியா இடஒதுக்கீடு கொடுத்து கூகிள் தேடனுமுனு அறிக்கை விடப் போறருலே."
*
"நியூஸ் பேப்பர்ல பொண்ணு தேடி கல்யாணம் பண்ணது தப்பா போச்சு."
"ஏன்?"
"நியூஸ் பேப்பர்ல பார்க்கிற புதுப்புது டிசைன் சேலை எல்லாம் வேணுமுன்னு அடம்பிடிக்கிறாள்."
"நீயாவது உள்ளூர் பேப்பர், நான் கூகுள்ல தேடி கல்யாணம் பண்ணிகிட்டு ரொம்ப அவஸ்த்தைப்படுறேன்."
*
"நம்ம தலைவர் ஏன் அடிக்கடி பேர மாத்துறாரு?"
"எதையாவது சொல்லிட்டா உடனே பலபேரு இன்டர்நெட்ல திட்டி எழுதிருறாங்க. அதான் பேர மாத்திட்டா கூகுள்லகூட கண்டுபிடிக்க முடியாதுலே"
*
கமிஷனர் : அந்தத் திருடன் கூகுள்ல தேடிப் பார்த்து விலையுயர்ந்த காரை திருடுறானாம், அதுக்கு நீங்க என்ன செய்யப் போறேங்க?
போலீஸ் : சார், நாமளும் அப்படி கார பிடிச்சோம்னா மாமுல் அதிகம் கிடைக்குமுனு நினைக்கிறேன்.
*
"இணைய தமிழ் மாநாட்டுக்கு ஆக்கப்பூர்வமா ஏதாவது யோசனை சொன்னாரா தலைவர்?"
"கூகிள் பெயர் பலகையை தமிழ்ல வைக்கணுமுன்னு யோசனை கொடுத்துருக்காரு."
*
"வேலையில்லாம தியேட்டரில சுத்திகிட்டிருந்த பசங்களுக்கு கூகுள்ல எப்படி வேலை தேடுறதுன்னு சொல்லி கொடுத்தேங்களே"
"இப்ப என்ன செய்யறாங்க?"
"கூகுளுக்கு ஒரு ரசிகர் மன்றம் வச்சு அதுக்கு விழா எடுக்குற வேலையா சுத்திகிட்டுயிருக்கிறாங்க."
*
"ஏப்ரல் மொதநாள் ரொம்ப பேர ஏமாத்தியதா கூகிள் சொல்லுதே உண்மையா?"
இணையவாசி: "அட போங்கப்பா நாங்கெல்லாம் ஏமாந்த மாதிரி கூகிளா ஏமாத்திட்டோம்ல."
கவலைக்கும் ஆப்படிக்கலாம் கூகிளா வச்சும் ஜோக்ஸ் அடிக்கலாம் |
16 மறுமொழிகள்:
கூகுள் ஜோக்ஸ் குதுகூலமாத்தான்
இருக்கு :))
worst
கூகிள்ளே போய் தேடாம நேரடியாவே சொந்தமாப் பின்னூட்டம் போட்டிருக்கேன். நல்லாயிருக்கு! :-)))
கலக்குங்க..:))
(போற போக்கப்பார்த்தா இது உண்மையாயிடும்போல!)
நான் இன்னும் என்ன பின்னூட்டம் போடுறதுன்னு கூகிள் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
நல்ல ஜோக்..
நல்ல கற்பனை. கூடிய சீக்கிரம் நிஜமாக சாத்தியக்கூறுகள் அதிகம் :)
waste jokes
நன்றாக இருந்தது...
அட்டகாசம்
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்.
:)
சைவகொத்துப்பரோட்டா
சேட்டைக்காரன்
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
chitra
ஸ்ரீராம்.
அவனி அரவிந்தன்
நாடோடித்தோழன்
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
முத்துலெட்சுமி/muthuletchumi
உற்சாகமான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
Kumar & Senthil,
உங்கள் கருத்துக்களையும் ஏற்கிறேன் நன்றிகள்
கூகுளை வைத்து ஜோக் எழுதி இருந்தது புதுமையாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே
என்ன கொடும சார் இது
Post a Comment