Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, April 9, 2010



டாக்டர் : நீதிபதி சார், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தவுடனே பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு போகாம கூகுள்ல நல்ல ஆஸ்பத்திரிய தேடுனதாலதான் அவரு இறந்துட்டார்.
இறந்தவரின் மகன் : நீதிபதி சார், அதுகூட பரவாயில்ல... வந்தவுடனே டாக்டர் மருந்த தராம நல்ல மருந்த கூகுள்ல தேடிகிட்டு இருந்தாரு அதான் அவரு இறந்துட்டார்.
நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கூகிளில் தேடி தீர்ப்பு அடுத்த வருடம் தரப்படும்.
*
"எங்கவூர் அரசியல்வாதிகளெல்லாம் கூகுள்ல தேடித்தான் பெஸ்ட் ரோடு போடுவாங்க."



"எங்கவூர் அரசியல்வாதிகளெல்லாம் கூகுள்ல தேடித்தான் பவர்-கட்டை சமாளிப்பாங்க."
"எங்கவூர் அரசியல்வாதிகளெல்லாம் கூகுள்ல தேடித்தான் அவுங்க தொகுதியையே கண்டுபிடிப்பாங்க."

*
"தலைவரு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராகி என்ன செய்யப் போறார்?"
"சாதிவாரியா இடஒதுக்கீடு கொடுத்து கூகிள் தேடனுமுனு அறிக்கை விடப் போறருலே."
*
"நியூஸ் பேப்பர்ல பொண்ணு தேடி கல்யாணம் பண்ணது தப்பா போச்சு."
"ஏன்?"
"நியூஸ் பேப்பர்ல பார்க்கிற புதுப்புது டிசைன் சேலை எல்லாம் வேணுமுன்னு அடம்பிடிக்கிறாள்."
"நீயாவது உள்ளூர் பேப்பர், நான் கூகுள்ல தேடி கல்யாணம் பண்ணிகிட்டு ரொம்ப அவஸ்த்தைப்படுறேன்."
*
"நம்ம தலைவர் ஏன் அடிக்கடி பேர மாத்துறாரு?"

"எதையாவது சொல்லிட்டா உடனே பலபேரு இன்டர்நெட்ல திட்டி எழுதிருறாங்க. அதான் பேர மாத்திட்டா கூகுள்லகூட கண்டுபிடிக்க முடியாதுலே"
*
கமிஷனர் : அந்தத் திருடன் கூகுள்ல தேடிப் பார்த்து விலையுயர்ந்த காரை திருடுறானாம், அதுக்கு நீங்க என்ன செய்யப் போறேங்க?
போலீஸ் : சார், நாமளும் அப்படி கார பிடிச்சோம்னா மாமுல் அதிகம் கிடைக்குமுனு நினைக்கிறேன்.
*
"இணைய தமிழ் மாநாட்டுக்கு ஆக்கப்பூர்வமா ஏதாவது யோசனை சொன்னாரா தலைவர்?"
"கூகிள் பெயர் பலகையை தமிழ்ல வைக்கணுமுன்னு யோசனை கொடுத்துருக்காரு."
*
"வேலையில்லாம தியேட்டரில சுத்திகிட்டிருந்த பசங்களுக்கு கூகுள்ல எப்படி வேலை தேடுறதுன்னு சொல்லி கொடுத்தேங்களே"
"இப்ப என்ன செய்யறாங்க?"
"கூகுளுக்கு ஒரு ரசிகர் மன்றம் வச்சு அதுக்கு விழா எடுக்குற வேலையா சுத்திகிட்டுயிருக்கிறாங்க."
*
"ஏப்ரல் மொதநாள் ரொம்ப பேர ஏமாத்தியதா கூகிள் சொல்லுதே உண்மையா?"
இணையவாசி: "அட போங்கப்பா நாங்கெல்லாம் ஏமாந்த மாதிரி கூகிளா ஏமாத்திட்டோம்ல."





கவலைக்கும் ஆப்படிக்கலாம் கூகிளா வச்சும் ஜோக்ஸ் அடிக்கலாம்

16 மறுமொழிகள்:

சைவகொத்துப்பரோட்டா said...

கூகுள் ஜோக்ஸ் குதுகூலமாத்தான்
இருக்கு :))

Kumar said...

worst

settaikkaran said...

கூகிள்ளே போய் தேடாம நேரடியாவே சொந்தமாப் பின்னூட்டம் போட்டிருக்கேன். நல்லாயிருக்கு! :-)))

Paleo God said...

கலக்குங்க..:))
(போற போக்கப்பார்த்தா இது உண்மையாயிடும்போல!)

Chitra said...

நான் இன்னும் என்ன பின்னூட்டம் போடுறதுன்னு கூகிள் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

ஸ்ரீராம். said...

நல்ல ஜோக்..

அவனி அரவிந்தன் said...
This comment has been removed by the author.
அவனி அரவிந்தன் said...

நல்ல கற்பனை. கூடிய சீக்கிரம் நிஜமாக சாத்தியக்கூறுகள் அதிகம் :)

senthil said...

waste jokes

நாடோடித்தோழன் said...

நன்றாக இருந்தது...

பனித்துளி சங்கர் said...

அட்டகாசம்
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

நீச்சல்காரன் said...

சைவகொத்துப்பரோட்டா
சேட்டைக்காரன்
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
chitra
ஸ்ரீராம்.
அவனி அரவிந்தன்
நாடோடித்தோழன்
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
முத்துலெட்சுமி/muthuletchumi
உற்சாகமான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

நீச்சல்காரன் said...

Kumar & Senthil,
உங்கள் கருத்துக்களையும் ஏற்கிறேன் நன்றிகள்

ஆர்வா said...

கூகுளை வைத்து ஜோக் எழுதி இருந்தது புதுமையாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே

mani said...

என்ன கொடும சார் இது