Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, July 19, 2010

எப்பவும் நோகாமல் நோம்புயிருப்பதில் உள்ள குஷியே தனி என்று வள்ளுவரின் பக்கத்து வீடுக்காரர் பாடி வைத்துப் போனது இன்னும் நம் கண் முன்னே ரம்யாமாக நிற்கிறது. அவர் மறைந்த போதும் சில ஹக்கர்களால் இன்னும் நினைவு படுத்தப்படுகிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. ஆகையால் புதிய ஹாக்கர்களே! நீங்களும் அடுத்தவர்கள் ஆரம்பித்துப் பயன்படுத்திவரும் மின்னஞ்சல் கணக்குகளை நோகாமல் அபேஸ் செய்ய தாராள ஐடியாக்கள் தருகிறேன். [ரகசியம்.. இது ரகசியம் ...]

நீங்கள் இந்த டிப்போவிலிருந்து எத்தனைக் கிலோ வேண்டுமானாலும் ஐடியாக்களை எடுக்கலாம் கட்டணமில்லை, வரி செலவுமில்லை ஆனால் எனது கணக்கை மட்டும் விட்டுவிடுங்கள் என்கிற ஸ்டேடஸ் மெஸேஜ்ஜை படித்துவிட்டு டிப்போவுக்குள் வாருங்கள். செய்யும் தொழிலே தெய்வம் அதனால் முதலில் செருப்பைக் கழட்டிவிட்டுப் படிங்கள் மேலே. இனி ஹாக்கிங் வேலையைப் பார்ப்போம்..
எந்த மெயில் கணக்கைகளை ஹாக் செய்ய வேண்டுமோ அந்த மெயில் கணக்குகளைப் பட்டியல் இடுங்கள்[எனது கணக்கை விட்டுவிடுங்கள்] யார் கணக்குகளை ஹாக் செய்ய வேண்டுமோ  அந்த வகையைச் சேர்ந்த உங்கள் முகவரியில் நுழைந்துக் கொள்ளுங்கள்[உ.தா.யாஹூ,ஜிமெயில்
உங்களுக்கு எளிதில் புரிய நான் எனது neechalkaran@yahoo.in.co யாஹூ கணக்கில் இருந்து neechalkaran@gmail.com ஜிமெயில் கணக்கினை ஹாக் செய்கிறேன்.
இப்போது  neechalkaran@yahoo.in.co கணக்கைத் திறந்து பின் வருமாறு செய்கிறேன்.



இந்த வரியை மின்னஞ்சல் தலைப்பில் இடவும். இதை கட்டாயம் மாற்றாதீர்கள். இந்த கோடிங் தான் அவர்களின் மெயில் சர்வரைக் குழப்பி பாஸ்வேர்டை சுருட்டும். அச்சு பிறழாமல் அப்படியே இதை பிரதிஎடுத்துப் போடுங்கள்.

கீழேக் கொடுத்துள்ள கோடிங்கை அப்படியே உங்கள் அஞ்சல் பகுதியில் இடவும் [சிவப்பு நிற பகுதிகளில் முறையே எனது யாஹூ முகவரியும் பாஸ்வேர்டும் அடுத்ததாக ஹக் செய்ய வேண்டிய முகவரியையும் கொடுத்துள்ளேன் நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் தகவல்களைப் போட்டுக் கொள்ளவும்].
usr=neechalkaran@yahoo.in.co&pwd=qwerty123
cgi-bin&aq=0&aqi=g10&aql=&oq=cgi-&gs_rfai=&fp=6f146f4f6152193c
#HACK:neechalkaran@gmail.com
#PING:pwd=?&AT:neechalkaran@yahoo.in.co
அவ்வளவு தான் அதற்கடுத்து எதுவும் எழுதாதீர்கள். இதற்கிடையில்,

"திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டிய உன் கணக்கு
திடீர்னு வந்தது லம்பாக எனக்கு
ஜொள்ளு விட்டு அனுப்ப உனக்கில்ல மெயிலு
ஜாலிய வந்திருச்சு வித்தவுட்ல ரயிலு"
என்று அன்னாருக்கும் அன்னார் குடுமபத்துக்கும் அனானி மெயில் அனுப்ப முன்னதாகவே அடித்து ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் பட்டால் இடையில் மானே தேனே என்றும் போட்டுக் கொள்ளலாம் செரியா!

தெரியாதவர்கள் இந்தப் படத்தில் உள்ளது போல தயாராக அடித்து வைத்துக் கொள்ளுங்கள். எழுத்துப் பிழைகளும் சந்திப் பிழைகளும் விட்டால் உங்களுக்கு சர்வர் விடை அளிக்காது ஆகவே கவனாமாக கையாளவும்.[எதையும் பிளான் பண்ணமான செய்யக்கூடாது]
இதற்கிடையில், ஹாக் செய்யப்போகிற சந்தோஷத்தைக் கொண்டாட ஏதாவது மொக்கைப் படத்துக்கு இவினிங் ஷோவுக்கு இரண்டு டிக்கெட்களை முன்னதாக புக் செய்து தயார்நிலையில் வைத்துக் கொள்ளவும்.[மொக்கைப் படங்கள் தான் ஹிடாகுது].  "ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே  ..." என்கிற பாட்டை எப்.எம்.மில் கேட்டு அவருக்காக டெடிக்கேட் செய்து பிராயச்சித்தம் பிறகு தேடிக்கொள்ளலாம்.

இந்த மெயிலை அனுப்பியப் பிறகு உங்களுக்கு பதில் மெயில், இந்த வடிவத்தில் வரும் அதில் உள்ள முகவரியையும் பாஸ்வேர்டையும் பிரிக்க பழகிக் கொள்ளுங்கள்.








X-TM-IMSS-Message-ID: <63a7ac380030ff60@KECGATE04.gmail.com>
Received: from mail201.messagelabs.com ([216.82.254.211]) by
 KECGATE04.gmail.com ([122.98.10.32]) with SMTP (TREND IMSS SMTP Service
Following error code KY-b0uqt3 occured
Try out after some time

என்று வரும் இதில் சிவப்பு நிற பகுதிதான் அந்த மெயிலின் பாஸ்வேர்ட். உடனே அந்த மெயிலைத் திறந்து பழைய பாஸ் வேர்டை மாற்றிக் கொள்ளவும் ஜாக்கிரதைஇறுதியாக எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றுச் சொல்கிறேன் இதைக் கவனமாகக் கையாளவும்.
 அனுப்புனர் முகவரியில் யாருடையை மெயிலைக் ஹாக் செய்ய முயல்கிறோமோ அவரின் முகவரியை இட்டு அனுப்பிவிடுங்கள். இனி பணமும், புகழும், அறிவும், அமைதியும் ஏன், நீங்கள் கழட்டிப் போட்ட செருப்புக்கூட இனி உங்களைத் தேடி யோகமுடன் வரும் 


disclaimer:அது டம்மி கோடிங். யாரை யார் ஹாக் செய்ய நினைச்சுருக்கானு கண்டுப்பிடிக்கலாம். தேவைப்பட்டால் பார்வேர்ட் அடுச்சுவிடுங்க மக்கா

13 மறுமொழிகள்:

அ.முத்து பிரகாஷ் said...

அய்யா ராசா நிசம்மா தான் சொல்றீங்களா ... நல்லா இருங்க நீங்க ...

Unknown said...

போட்டு தாக்குங்க..

ஜில்தண்ணி said...

தலைவரே இப்படி எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்த என்ன ஆகுறது ,சரி சரி நடத்துங்க :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு நீச்சல் தெரியனுமா?

நீச்சல்காரன் said...

//அய்யா ராசா நிசம்மா தான் சொல்றீங்களா ... நல்லா இருங்க நீங்க ...//

அட விடுங்க சார், உங்க மெயில் சர்வர் மட்டும் குழம்பாமல் இருக்க இந்த கோடிங்கை "#$%^SUMMA#%^&THAMASU$%^" உங்கள் டிரபிடில் சேமித்துக் கொள்ளுங்கள். உங்க எதிரி யாரவது இப்படி மெயிலை திருட முயன்றால் உங்கள் சர்வர் திரும்ப பதிலாளிக்காது.

cheena (சீனா) said...

அன்பின் நீச்சல்காரன்
உண்மையான தகவலா - அல்லது கும்மியா / மொக்கையா - தெரிய வில்லை - புரிய வில்லை
நல்லாருங்கப்பா
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

அ.முத்து பிரகாஷ் said...

சீனா சார் !
IIT பேராசிரியர் டாக்டர் விவேக் எழுதிய "எட்டு புள்ளி கோலம் போடுவது எப்படி " என்ற ஆய்வு நூலில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும் !
சரிதானே நீச்சல் தோழர் !

அ.முத்து பிரகாஷ் said...

நீச்சல் தோழர் !
நீங்கள் கூறிய கோடை டிராப்ட்டில் இணைத்து விட்டேன் .தொடர்ந்து கணினி பற்றிய தொழில்நுட்ப பதிவுகளை எழுதுமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்!மிக்க நன்றிகள்!

நீச்சல்காரன் said...

//அன்பின் நீச்சல்காரன்
உண்மையான தகவலா - அல்லது கும்மியா / மொக்கையா - தெரிய வில்லை - புரிய வில்லை
நல்லாருங்கப்பா
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//
ஐயா, எந்த கோடும் சர்வரைக் குழப்பாது திருடர்கள் அனுப்பும் மெயில் தானாக உங்கள் கணக்குத் தான் வரும். மிஞ்சிப் போனால் ஹாக்கரின் மெயிலை நீங்கள் பிடித்து சைபர் கிரைமுக்கு அனுப்பலாம்.

நீச்சல்காரன் said...

//போட்டு தாக்குங்க..//
தாக்குவோம். நன்றி.

//தலைவரே இப்படி எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்த என்ன ஆகுறது ,சரி சரி நடத்துங்க :)//
அட பொழப்புப் போறாங்க பொடிப் பசங்க

//இதுக்கு நீச்சல் தெரியனுமா?//
தெரிஞ்சு வச்சுக்கலாம் தப்பில்ல

Anonymous said...

உங்கள நம்பி இந்த மெயிலை ஒருத்தனுக்கு அனுப்பிட்டேன்.

நீங்க தான் சரியான டுபாக்கூர்

நீச்சல்காரன் said...

//உங்கள நம்பி இந்த மெயிலை ஒருத்தனுக்கு அனுப்பிட்டேன்.

நீங்க தான் சரியான டுபாக்கூர்//

நீங்க இன்னும் வளரனும் அனானி

நீச்சல்காரன் said...

//IIT பேராசிரியர் டாக்டர் விவேக் எழுதிய "எட்டு புள்ளி கோலம் போடுவது எப்படி " என்ற ஆய்வு நூலில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும் //
நீங்க ஒருத்தராவது பதிவை நால்லா புரிஞ்சுருக்கிட்டேங்கனு எனக்கு புரிஞ்சுருச்சு