"ஏன்?"
"அப்புறம் என்னங்க! இங்க வந்தும் தெலுங்கு பட ஹீரோவோட டிவிட்டையே ரீமேக் பண்ணிக்கிட்டுயிருக்கிறாரு."
"நம்ம அரசரைப் பார்த்து சண்டைக்கு வா சண்டைக்கு வானு எதிரிகள் டிவிட்டரில் கூப்பிடுறாங்க, அரசர் சண்டைக்கு கிளம்பிட்டாரா?"
"இல்ல டிவிட்டரை தடை செஞ்சுட்டாரு"
****
அமைச்சர்: நம்ம மீனவர்கள் எல்லாம் கடலிருந்து காப்பாத்துங்கனு டிவிட் செய்றாங்க. இப்ப என்ன செய்யப் போறீங்க?பொறுப்புள்ள போலீஸ்: அந்த டிவிட்டை ரீடிவிட் செய்யப் போறேன்
****
"டேய் நாளைக்கு பரீட்சைய வச்சுக்கிட்டு டிவிட்டார்ல என்னப் பண்ணுற?"
"டிவிட்டார்ல வாத்தியாருக்கு ஐஸ் வச்சுகிட்டுயிருக்கிறேன்."
*****
"வக்கீல் சார், கடன்காரவுங்க எல்லாம் டிவிட்டர்ல என்னை டார்ச்சர் செய்றாங்க, இதுக்கு ஏதாவது சட்டப்படி செய்ய முடியுமா?"
"உங்க டிவிட்டர் ஐ.டி. சொல்லுங்க. போன வாட்டி வந்தப்ப நீங்க கன்சல்டன்ஷி பீஸ் கொடுக்கல."
"என்னங்க ஒரே டயலாக்கை ஒன்பது மாசமா டிவிட்டுறீங்க!"
"பொது இடத்தில எது பேசினாலும் எங்க தலைவருக்கும் அவர் குடும்பத்துக்கும் வணக்கம் சொல்லித்தான் ஆரம்பிப்பேன், பாழப்போன டிவிட்டார்ல எவனோ 140 எழுத்துக்கு மேல எழுதவிட மாட்டிக்கிறான் அதான் வணக்கம் சொல்லியே வீணாப்போச்சு."
****
அமைச்சரின் மனைவி: அத்தியாவசியப் பொருட்கள் பட்டியல்ல டிவிட்டரைப் போய் சேர்த்துயிருக்கீங்க!
அமைச்சர்: அப்பத்தான் அத்தியாவசியப் பொருட்கள் விலை கூடவில்லை அப்படின்னு அறிக்கைவிட முடியும்.
****
"மெகாசீரியல் டைரக்டர் டிவிட்டர்ல பண்ணுற அலம்பல் தாங்கமுடியல"
"ஏன்? முழுசா ஒரு டிவிட் செய்யக் கூட வருஷக் கணக்கா இழுக்குறாரா?"
"ச்சேச்சே இன்னும் எழுதுறதுக்குள்ளையும் விளம்பரமாக கொடுத்துக்கிட்டுயிருக்காரு"
****
"எப்படிங்க பரிச்சைப் பேப்பரை வச்சே இவரு டிவிட்டரா வருவாருன்னு சொல்றீங்க?"
"பக்கத்துல எழுதுரவனோட பேப்பர எடுத்து ரீஷேர் செய்றாங்க "
****
இளமை விகடனில் எழுதியவை இங்கு ரீஷேர்[மீள்] பதிவாக
7 மறுமொழிகள்:
hahaaaaa
கலக்கல் (t)wits!
நல்லாயிருக்கு தல!
ட்விட்டர் இத்தனை பிரபலமா?சிரிக்க வைத்தீர்கள்..
ஏன் நம்ம கூட கூட்டணி கிடையாதுன்னு அந்தக் கட்சியில அறிவிச்சுட்டாங்க...ட்விட்டர்ல போதுமான பலம் இல்லையாம்...இது எப்படி இருக்கு..உங்களோட ட்விட்டர் ஜோக் எல்லாம் ஏ கிளாஸ்.அன்புடன் ஆர்.வி.எஸ்.
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@Chitra
@வால்பையன்
@அப்பாதுரை
நன்றி நண்பர்களே
@RVS உங்கள் கற்பனையும் அற்புதம்
Post a Comment