Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, December 24, 2010


உனது நிழல்படத்திலேயே
ஒரு கோடி YOUTUBE
குறும்படங்கள் கண்டுவிட்டேன்
நிஜத்தில் வந்தால் OSCAR உனக்குத்தான்

தாக்கப்பட்ட வைரஸ்கள்
தகர்க்கப்பட்டது எப்படி
உன்மேல் கொண்ட பாசத்தாலா?
இல்லை உன்
பெயர் PASWORDல் இருப்பதாலா?

WIKIPEDIAவே காதல்பீடியா
ஆகிவிட்டது டொனேஷனாக
உன் பெயரை 400 முறையெழுதி
அனுப்பிவிட்டேன் எனக்கென்னத்
தரப்போகிறாய் !

ORKUTக்குள் வந்துவிடாதே
உலக ஷேர் மார்க்கெட்கள்
விலைபேச வந்துவிடும்
பிழைத்துக் கொள்ளட்டும் டாட்டா பிர்லாக்கள்

YAHOOவே வெட்கப்பட்டது
உண்மைதான் அனால் சத்தியமாக
நான் முத்தமிட்டது நீ
அனுப்பிய மெயிலுக்குத்தான்

உன்னுடன் CHAT செய்தே
ENTER KEYகள் தேய்ந்துவிட்டது
எனக்குள் ENTERஆகிவிடு
KEY BOARDகள் தேய்வதற்குள்

உறங்கும் போதும் உன் நினைவுகள்
நீங்காமல் DOWNLOADடாகி
OVERLOADடாகிவிட்டது இதயம்
உன் சிரிப்பொலியை மின்னஞ்சல்
செய் REFRESH கொள்கிறேன்

wikileaksம் காணாத வண்ண
சோப்புகளை வைத்திருக்கிறாயோ!
உன்னை ஹாக் செய்ய நினைத்தால்
மீட்புகளின்றி மயங்கிப் போகிறேன்.

உன் FLYING-KISSயை சேகரிப்பதில்
கூகுளையே மிஞ்சிவிட்டேன்
என்வாழ்க்கைக்குள் LOGIN செய்
காதல் MAPப்புகள் காட்டுகிறேன்.

5 மறுமொழிகள்:

அரபுத்தமிழன் said...

கீ போர்டில் உங்கள் பெயர் மட்டும் தெரிவதால்
உங்கள் பேச்சு கா,

இவண் நீங்கள் காதலிப்பதாய்க் கூறும்
கணி(ணி)மொழி :-)

காதல் கடலில் நீச்சல் அடிப்பவரே
கவிதை சூப்பர்.

மாணவன் said...

அருமை நண்பரே

இண்டர்நெட் காதல் கவிதை சூப்பர் வரிகள் ஒவ்வொன்றும் அழகு

தொடரட்டும் உங்களின் இந்த கவிப் பயணம்....

பகிர்வுக்கு நன்றி

நீச்சல்காரன் said...

@அரபுத்தமிழன்,
நன்றி நன்றி அட அது ரிப்பேரான கீ போடுங்க.
@மாணவன்,
நன்றி நன்றி

Unknown said...

போட்டுத் தாக்குங்க!

Sudheer G N said...

அருமையாக ரசித்து எழுதியுள்ளீர் போலும். ஏக்கம் தெரிகிறது.