அதுவொரு மாலை நேரம், சிகிச்சை பெற்று வரும் நண்பரைக் காண நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு வழி தெரியாமல் தெருத் தெருவாக அலைந்துக்கொண்டிருந்த போது, கண்ணில் பட்டது இந்த சாப்பாட்டுக்கடை. சரி அட்ரஸ் கேட்கலாம் என்று போய் கேட்டோம். அங்கே ஒரு புண்ணியவான் உதவ மட மடவென பேசத் தொடங்கினார்; நினைவு தெரிந்து விழித்தால் தேடிக்கொண்டிருந்த அதே மருத்துவமனையில் பேஷண்டாக இருந்தோம். சபாஸ்! அப்படியென்ன அவர் சொன்னார்?.....
ஆஹா ஓஹோ பத்திரிக்கைக்கூட ஒருநாள் பட்டாணிக்கடைக்கு பார்சல் மடிக்கவந்தாகும்
ஸ்கூல் மாஸ்டர் போடும் முட்டையை விட புரோட்டா மாஸ்டர் போடும் முட்டைக்குத்தான் மார்க் அதிகம்.
இலவச வேஷ்டி இட்லித் துணியாக உள்ளது பணக்காரன் வீட்டில்; இட்லித் துணி மதிப்புள்ள வேஷ்டியாக உள்ளது ஏழை வீட்டில்
சர்க்கரை, சூடமாக ஆசைப்பட்டால் கரிதான் மிஞ்சும்
மரத்தில தேங்காய் காய்ச்சாலும், மண்ணுல கடலை முளைச்சாலும் சட்டினி என்கிற பேரில் சேர்த்து வைப்போம்
துட்டு ஆகாத பூந்திகள் லட்டு ஆகிவிடும் -ஸ்வீட்டு கடையில்
கலக்கி ஊத்துனா சாம்பாரு மூக்கை துளைக்கும்; கொதிக்காத சாம்பாரு வயித்தைக் கலக்கும்.
விலங்குகளைப் பிரிப்பது பரிணாமம்; ஆட்டையும் கோழியையும் இணைப்பது பிரியாணியென்ற திருநாமம்
கடலில் கப்பல்கள் கடுகு மாதிரி; ரசத்தில் கடுகுகள் கப்பல் மாதிரி.
பூனை கண்ணை மூடிக் கொண்டாலும் கருவாடான மீன்கள் கரை திரும்ப முடியாது
நசிந்தும் கசிந்தும் வந்த எண்ணெய் தான் கடுகுகளும் வெடிக்க வல்லமை தரும்.
அப்பளம் சுட அடுப்பு இருந்தாலும் போதும், பட் தோசை சுட கல்லும் வேண்டும்.
சங்கிலிப் போட்ட டம்ளர்களையும் திருடி அல்வா கொடுப்பவர்கள் அல்வா கிண்டியக் கரண்டியைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.
கண்ணாடி வீட்டில் குடியிருக்கும் கடலைமிட்டாயைவிட குச்சியில் குடியிருக்கும் பஞ்சுமிட்டாயை விலை அதிகம்.
இப்படியெல்லாம் வாழலாம் என்று உதவியவரும்கூட அப்படி வாழமுடிவதில்லை சந்தைக்கு வந்தபின். -முருங்கைக்காய்
ஊழல் சரக்கை மறைக்க மக்கள் காதில் சுற்று, அரிசி முறுக்கை பொரிக்க எண்ணெய் சட்டிக்குள் சுற்று
சச்சின் வீட்டு குக்கர்கூட சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடும்
விலைவாசி ஏறும் போது முறுக்குகள்கூட மெலிந்துவிடும் அதேவிலைக்கு
மருந்துக்கடைக்காரன் காலில் விழுவதைவிட சமையல்காரன் காலில் விழுந்துவிடலாம்.
இலவசமா எத்தனை கிரேண்டர் கொடுத்தாலும் அரைப்படி அரிசிய எல்லா கிரேண்டரும் அறைக்கப்போரதில்லை
********************
அறியப்படும் நீதி: ஓவர் தத்துவம் உடம்பிற்கு ஆகாது, சாப்பாட்டுக் கடையிலும் சாக்ரடீஸ்கள் உண்டு

தொடர்புடைய இடுகை: பக்கத்து சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியரும் வேலை பார்க்கிறாருங்கோ
5 மறுமொழிகள்:
பாதி படிச்சதுலயே தல சுத்திடுச்சு சகோ
கலக்கல்
super
"ஆஹா ஓஹோ பத்திரிக்கைக்கூட ஒருநாள் பட்டாணிக்கடைக்கு பார்சல் மடிக்கவந்தாகும்.கலக்கி ஊத்துனா சாம்பாரு மூக்கை துளைக்கும்; கொதிக்காத சாம்பாரு வயித்தைக் கலக்கும்"அற்புதமான தத்துவம்! பகிர்விற்கு நன்றி.
Great post! I really like the immage
கலக்கல் கலக்கல் சகோ.
Post a Comment