Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, January 5, 2025

ஜனவரி 5 2025 இல் நடைபெற்ற அக்ரிசக்தியின் மரபு உணவுத் திருவிழாவிற்கு உருவான பாடல் வரிகள்

பல்லவி:

திருவிழாவாம் திருவிழாவாம்

அக்ரிசக்தி குழுவிலா

தித்திக்கும் நாவிலா

மரபுணவு திருவிழா


அனுபல்லவி:

நம்ம கிருஷ்ணகிரி மண்ணுங்க

வந்து ஆதரவு தாருங்க

வாங்கி  மெண்டுருசி பாருங்க

நஞ்சிலா சாப்பாடு தானுங்க


சரணம்1:

பாலீஷ் பண்ண அரிசி வேண்டாம் வேலாயி

உனக்கு கைக்குத்து அரிசி இருக்கு நாளாயி

சந்தையில கலர் கலரா விக்கிறாங்க மிட்டாயி 

அத எடுத்துகிட்டா வயிறு போகும் வீணாயி

கருப்பட்டியில சுட்டு தருது ஒரு அப்பாயி

வாங்கி உண்டா  வாழப் போகும் விவசாயி



சரணம்2:

புட்டியில் குளிர்பானத்த குடிக்கிறியே  குருவம்மா

தொப்ப போட்டு வயிறு வளரும்  தெரியுமா

கெட்டு போகாம இருக்க கலக்குறாங்க வினிகர்ம்மா

குடல் அழுகி போனா சரிபண்ண முடியுமா?

உள்ளூரு பழத்தைப் புளிஞ்சு குடிக்க பழகுமா

நம் உணவு நம் பெருமை வேறு என்னமா?





Next
This is the most recent post.
Older Post