அனு தினமும் கடப்பேன் அந்த சாலையில்
ஒரு தினமும், கண்டேன் அவளை மாலையில்
விழைந்தேன் அவள் பார்வைதொட, என்னை
பயந்தேன் பக்கத்திலே, அவள் அன்னை
வெட்கப்பட்டாலோ? என்னவோ, உண்மையில்
வந்துநின்றாள் என் அருகாமையில்
பொங்கிய தாகத்தை வார்த்தையாக குழைத்து
மிஞ்சிய ஏக்கத்தால், "ஹலோ" என்றழைத்தேன்
அவள் என்னை அறிந்து திரும்பி பார்த்ததும்
நான் தன்னை மறந்து சிந்தித்து பார்த்தேன்
இலவச போலியோவுக்கு வாயைகாட்டி
வசமிருந்த கண்ணீரை வடித்துகாட்டிய ஞாபகம்
நாக்கு சிவக்க சௌவுமிட்டாய் வாங்கிவந்து
சினிமா கொட்டாயில் தூங்கிவந்த ஞாபகம்
வகுப்பறை வாசலில் சாபீஸ் பொறுக்கி
அறைகுறை சுவரில் கவிதை கிறுக்கிய ஞாபகம்
சகதியிலும் விரல்பிடித்து நடைபயின்ற சாலையில்
நிற்கதியாய் அடம்பிடித்து பள்ளி சென்றுவந்த ஞாபகம்
நானும் உன்னை போல் குட்டியே, ஐந்துவயதில்
நீயும் என்னை போல் சுட்டியே, இந்தவயதில்
அவளும் நோக்கினாள்
Info Post
0 மறுமொழிகள்:
Post a Comment