Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, October 8, 2009

விழி தொடும் ஒளியை பிரித்து


சிதறல்களை அம்பலப்படுத்தினாய்(SCATTERING OF LIGHT)
சிதைவை நாடும் எச்சங்களின்
சரித்திரத்தை உலகேற்றினாய்(CARBON DATING)
சரணத்தை தேடும் கானங்களை
வளையத் தட்டில் பதிப்பித்தாய்(COMPACT DISK)
வடக்கே நகரும் கண்டங்களின்
பெயர்ச்சியை குறித்துவிட்டாய்(CONTINENTAL DRIFT)
பெயரில்லா கோள்களுக்கெல்லாம்
வசிப்பிட தரிசனங்கண்டாய்(COSMOLOGY)
வசனம் சேரும் வார்த்தையுடன்
மென்பொருள் மொழி படைத்தாய்(SOFTWARE)
மெல்லியக்கம் செய்யும் மின்சாரத்தால்
கனரகங்களை இயக்கிவிட்டாய்(ELECTICMOTORS)
கணினியுடன் கைகோர்த்து
விவசாயம் விதைக்கிறாய்(WEATHER SATELLITE)
விடியல் பிரிக்கும் காலத்திற்கு
தூங்காது பயணிக்கிறாய்(24/7SERVICE)
தூரங்கள் மறிக்கும் தேசங்களை
இணையத்தால் இணைத்துவிட்டாய்(WEB TECHNOLOGY)
இணைப்பை முறிக்கும் எல்லைகளை
தொலைத்தொடர்பால் தாண்டிவிட்டாய்(TELECOMMUNICATION)
தொழில்முனை வளர்ச்சியால்
இயற்கையை அழித்து ஏறுகிறாய்
இளைய தலைமுறைக்கு மாசை தேடிவைத்து(POLLUTION)
தேட நினைக்கிறாய் துளையாத ஒன்றை
துளைத்து நிற்கிறாய் கிடைக்காத ஒன்றை(NATURE)

0 மறுமொழிகள்: