மொட்டை மாடிக்கவிதை
Info Post
ஆயிரம் பார்வை
அரைநிமிட சிமிட்டல்
அளவான புன்னகை
அதிசயிக்கும் வண்ணம்
என் வானத்தில் மட்டும்.
என் கற்பனை வானத்து
ஒப்பனைச் சூரியன்
மறையாத அந்திவானத்தை
அடையாளப்படுத்தும்
இருள் கசியும் என் இரவு!
காதை உரசும் இளங்காற்று
மட்டுமல்ல,
எதிர்வீட்டு ஜன்னலும்
கூடதான் எனக்கு
வார்த்தைகளை பிணைக்கிறது.
தொடுவானத்தின்
இரவல்களை
உவமையாக்கி
நடுவானத்தின்
கொடையால்
கோர்க்கப்பட்டது!
அசையாத இலைகளில்
சிக்கிக்கொண்ட
அடுத்தவரிகள்,
மெல்லிய மேகத்தினூடே
கண்டெடுக்கப்படுகிறது.
கட்டெறும்புகளால்
கரைந்த
ஒற்றுப்புள்ளிகள்,
எனக்கு திருஷ்டிகழிக்கும்
கொசுக்களால்
முற்றுபெறும்.
கவிதை நிலவுக்கு
ஒரு முத்தமிட்டு
இரவின் மடியில்
பள்ளி கொள்ள
விடியும் வரை
மொட்டை மாடிமட்டும்
துணையாக
சென்றமாதம் கவிதையை வெளியிட்ட கீற்று தளத்திற்கு நன்றிகள்
http://www.keetru.com
5 மறுமொழிகள்:
அணைத்து வரிகளும் மிக அழகாக செதுக்கப்பட்ருக்கிறது...மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது...
வாழ்த்துக்கள்...
//காதை உரசும் இளங்காற்று
மட்டுமல்ல,
எதிர்வீட்டு ஜன்னலும்
கூடதான் எனக்கு
வார்த்தைகளை பிணைக்கிறது.//
நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..
கவிதை நிலவுக்கு
ஒரு முத்தமிட்டு
இரவின் மடியில்
பள்ளி கொள்ள
விடியும் வரை
மொட்டை மாடிமட்டும்
துணையாக
amazing friend keep going..
கமலேஷ்,
பலா பட்டறை,
Balavasakan,ஆக்கபூர்வ கருத்துகளுக்கு நன்றிகள்
நீச்சல் காரரே உங்க கவிதையில் பொருள் குற்றம் உள்ளது. போகட்டும் விட்டுவிடுகிறேன்.
என்ன இருந்தாலும் என்னோட மொட்டை மாடி கவுஜை ரேன்சுக்கு இல்லயே தலைவரே...:))
Post a Comment