ரயில் பயணிகள் கவனத்திற்கு
Info Post
ரயில் மறியல் செய்யவந்த
கூலிக்காரக்கூட்டம்
வேறவொரு மறியலில்
தவிக்கிறது
சூது கொண்டு பலர்
இருக்கை பிடிக்க
ரயிலில் முந்தினர்
கடைசியாக சங்கிலியுடன்
வெளியே வந்தான் கள்வன்
சண்டை போட்டு
புது மாநிலம்
வாங்கியபின்
ரயில்எல்லையில்
பலகை வைப்பார்
'அன்புடன் அழைக்கிறது'
அவரவர் வேலை அவரவருக்கு
எவரோ ஒருவரின் வேலையை
இவர் பெருக்குகிறார்
துப்புரவு தொழிலாளியாக
வெளியே குதித்த
பிளாஸ்டிக் குடுவையால்
எடை குறைந்து
மூச்சுவிட்டது ரயில்
மூச்சு முட்டியது பூமிக்குத்தானே
சாமி வேஷம் போட்டு
ரயிலில்பிச்சை எடுப்பவர்
சோறு ஊட்டப்படும்
குழந்தைக்கு பூச்சாண்டியாக
9 மறுமொழிகள்:
//சண்டை போட்டு
புது மாநிலம்
வாங்கியபின்
ரயில்எல்லையில்
பலகை வைப்பார்
'அன்புடன் அழைக்கிறது' //
நன்றாக இருக்கிறது இந்த வரிகள்
கவிதை ரொம்ப அருமை ...
ஒரு நல்ல கருத்தாளமிக்க கவிதை. கவித்துவத்துக்கும் குறைவில்லை.
அழகா இருக்கு
ஸ்வர்ணரேக்கா,
ரசித்தவற்றை பகிர்ந்தற்கு நன்றி
starjan ( ஸ்டார்ஜன் ),
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ,
அண்ணாமலையான்,
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்
Sirappu...
நன்றி உருப்புடாதவன் சார்
"சாமி வேஷம் போட்டு
ரயிலில்பிச்சை எடுப்பவர்
சோறு ஊட்டப்படும்
குழந்தைக்கு பூச்சாண்டியாக"
------மிக அருமையான வரிகள்
Post a Comment