Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, February 5, 2010




திருவிழாக்களும்
தேர்வுலாக்களும்
எனக்கு வசந்தகாலம்
சில்லறை அதிகம் சேர்வதால்

தெரு நாய்களும்
கொசுக்களும்
என் பங்காளிகள்
இரவில் எனக்கு துணையாக



நெருசலான சாலைகளும்
நெருடலான காலைகளும்
என் ரசிகர்கள்
அங்கெல்லாம் நான் காட்சிப்பொருளே

வியற்ற நெத்தியும்
வெந்த வயிறும்
என் உடன் பிறப்புக்கள்
வறுமையிலும் உடனிருப்பவை

மழை கதிரும்
வெயில் சாரலும்
என் குற்றாலம்
இலவசமா கிட்டுபவை

ஹோட்டல் கழிவும்
டீக்கடையின் கனிவும்
எனக்கு அறுசுவையே
அடிக்கடி பசியாத்துபவை

தந்திர மானுடமும்
எந்திர வாழ்க்கையும்
நான் பாவப்படுபவை
நிம்மதியை எங்கோ தேடுவதால்

Image supported by computercoop.com

2 மறுமொழிகள்:

ஸ்வர்ணரேக்கா said...

//நெருசலான சாலைகளும்
நெருடலான காலைகளும்//

நல்லாயிருக்கு.. எல்லா paragraphலும் கடைசி வரி இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நீச்சல்காரன் said...

மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் கருத்துக்கள் என்னை வளம்சேர்க்கும்