Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Saturday, February 20, 2010

அட ப்ரோடியூசர் சார், தமிழ்சினிமாவுக்கான ஃபார்முலாவோடு இப்ப கதையை ரீமேக் பண்ணியிருக்கேன் கதைய முழுசா கேளுங்க, 

 கதாநாயகி பாட்டி (வயது: பாட்டி வயது; தொழில்: வடை சுடுவது;) தனது சக நண்பிகளுடன் முதியோர் கல்வித்திட்டத்தில் catering collegeல் படிக்கிறார். கல்லூரிக்கு போகும் போது பாட்டிக்கு ஒரு இன்ரோ-சாங் (ஸ்டர்ட் மியூசிக்)


வடைக்கார பாட்டி நீ வடைக்கார பாட்டி
உளுந்த மாவ தட்டி நீ சுட்டதெல்லாம் ப்யூட்டி
வாழக்காய வெட்டி நீ சமைச்சதெல்லாம் டேஸ்டி
உனக்கு யாரு போட்டி நீ தான்யெங்கள் வாத்தி...

இந்த பாட்டிக்கு இன்னும் கல்யாணமே ஆகலை ஏன்னு கேட்கையில ஒரு


 ~~~~~Flash-back~~~~~~
அப்ப இந்த பாட்டி கைகுழந்தையாயிருக்கையில இவங்களோட பாட்டி சுட்ட வடைய ஒரு காக்கா கவ்வி கிட்டு போயிருச்சு, அன்னையிலயிருந்து காக்காவ பிடிக்காத ஒருத்தரத்தான் கல்யாணம் பண்ணுவேனு தேடித் தேடி இப்படி வயசாயிருச்சு
~~~~~~~~~Back to the story~~~~~~~~~~~
அப்ப பக்கத்திலயிருந்த முனியமா பாட்டி சொல்றாங்க "கவலை படாத உனக்குனு ஒருத்தர் பிறக்காமல போயிருவாரு"னு சொல்லையில தாத்தாவுக்கு என்ட்ரி கொடுக்குறோம். மதுரையில் {நோட் பண்ணிகோங்க} ஒரு கோயில் தெருல வடை சாப்பிடவருது ஒரு காக்கா {இங்க காக்கா-வடை,காக்கா-தாத்தா, தாத்தா-வடை ஒரு க்லோசப்} உடனே தண்ணிக் குழாய் பைப்ப பிடிங்கி காக்காமேல எறியுறாரு தாத்தா, வடை எடுக்க வந்த காக்கா சட்னியாயிருச்சு, வடையை தாத்தா சாப்பிட்றாரு. அங்க தாத்தா என்ட்ரி சாங்


இவன் தலையைப்பாரு ஒளிவட்டம்
இவன் கண்ணப்பாரு மின்னோட்டம்
இவன் நடையைப்பாரு புலிக்கூட்டம்
இவன் பாடினா hit பறந்தா height
பகைச்சா fight புடுச்சா quite ...-----

பாட்டு முடிஞ்சவுடனே, அந்த வடை காக்காவுக்குத்தான் படையல் வச்ச வடைனு சொல்லி வீட்டிலயிருக்கிறவுங்கயெல்லாம்(தம்பி குடும்பம்) சேர்ந்து தாத்தாவ( இவருக்கும் கல்யாணமாகலை) விரட்டிருறாங்க. 'வடை சாப்பிட்டதுக்கு விரட்றேங்களா! வடை சுட தெரிஞ்ச ஆள கல்யாணம் பண்ணி நிறைய வடை சாப்ட்டுகிறேன்' னு வீர வசனம் பேசிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்திருறாரு. சென்னையில ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ராரு.

இட்லி மாவும் தோசை மாவும் ஒன்னு
அத அறியாதவன் கண்ணுரெண்டும்   புண்ணு
கல்லாபொட்டிய காசஎடுத்து எண்ணு
அஞ்சு பூரி ஆறு பூரி வாங்கித்  தின்னு 

அப்படின்னு ஒரு ஜாலி பாட்டு. அந்த ஹோட்டலுக்கு நம்ம பாட்டி காலேஜ் மூலமா Industrial visitக்கு வாராங்க, அப்ப ஒரு காக்கா அவுங்க வந்த வண்டியில எச்சம் போட்டிருச்சு. அதை மூனாவது மாடியிலயிருந்து பார்த்த தாத்தா ஒரு தண்ணி பாட்டிலை தூக்கியெறிய, அது தெருவிளக்குல பட்டு மூடிகழண்டு காக்காமேல பட்டு தண்ணியெல்லாம் கீழகொட்டி(அது வண்டிய கழுவி விட்டிரும்) காக்கா பறக்க நினைக்கையில தண்ணி பாட்டில சிக்கி அதுபறந்து போயி தாத்தா காலவிழுந்து செத்துரும். இதைபார்த்த பாட்டிக்கு தாத்தாமேல ப்ரியம் வரும். ஹோட்டல்ல தாத்தா எல்லாருக்கும் லட்டு பரிமாறையில பாட்டிக்கு ஒரு ட்ரீம் சாங்-ரீமிக்ஸ் 

"கண்களிரண்டால்
உன் கண்களிரண்டால் ..
"
(அடுத்து தான் தெரியுமில லட்டை வைக்கையில மாத்தி மாத்தி வைப்பாங்கணு). இப்படியே ஒரு நட்பு இருவருக்கும் வருது. பாட்டி படிச்சு முடிச்சதும் தனியா ஒரு வடைக்கடை போட்டு, ரோம்ப நேரம் கஷ்டப்பட்டு முழுசா ஒரு வடையை சுட்டிருச்சு பாட்டி. அப்ப அந்தப்பக்கம் பசியோடு வந்த காக்கா ஒரு தண்ணி குட்டையப்பார்குது ஆனா தண்ணி வாய்க்கு எட்டல. வேற வழியில்லாம பாட்டி சுட்ட வடையை எடுக்க அந்த காக்கா வருது, பாட்டிக்கு ஒரே பயம் "காப்பாத்துங்க! காப்பாதுங்க!"னு பாட்டி கத்த, பக்கதிலையே நம்ம தாத்தாவும் வராரு,{வடை-தாத்தா-காக்கா ஒரு க்ளோசப்). அங்க ஒரு ட்விஸ்ட் காக்காவுக்கு பதில வடையை திருடிட்டு தாத்தா ஒடிருறாரு. இங்க பாட்டிக்கு ஒரு சோகப்பாட்டு,ஆட்டியெடுத்த மாவை
ஊத்தி பொருச்ச நெய்யில்
தட்டிதட்டி போட்டேன் காரமாக
தாத்தாவந்து எடுத்தாரே ஓரமாக

வடை போச்சே! வடை போச்சே!
பாட்டு முடிஞ்ச நேரத்தில தாத்தா கஷ்டப்பட்டு வடைய கடுச்சுப் பார்க்கிறாரு{ஏன்னா பல்லெல்லாம் வீக்} அவரால முடியலை, ஆசை ஆசைய திருடிட்டுவந்த வடைய  'சீ! சீ இந்த வடை கசக்குனு' காக்கா மேலயே   தூக்கிப் போடுறாரு, அந்த வடையை காக்கா எடுத்து அந்த தண்ணிக்  குட்டையில் போட்டு{கல்ல போட்டமாதிரி} தண்ணிய குடிச்சுட்டு  பறந்து போயிருச்சு. இதைப் பார்த்த பாட்டிக்கு  காக்காமேலயிருந்த கோபமெல்லாம் போயிருச்சு. தாத்தாக்கு பல்லு போனதால வடை ஆசையேபோயிருச்சு. பாட்டிக்கிட்ட 'நான் காக்காய விரட்டத்தான் வடை எடுத்துட்டு ஓடினேனு' ஒரு பொய்ய சொல்லி அறுவதாம் கல்யாணம் பண்ணிக்கிறார்.அப்படியே சுபம்னு போர்டு வைக்கிறோம்.

எப்படி சார் படம்
14 மறுமொழிகள்:

Chitra said...

நல்லா கதை விட்டு இருக்கீங்க. :-)

DREAMER said...

நீச்சல் சார்,
ஒரு உங்க படத்துக்கு குட்டி விமர்சனம்

கதையும் வடையும் பிரமாதம்... அதுவும் வடைக்கு சட்னி ஊற்றுவது போல் இடையிடையே வரும் பாடல்வரிகள் மெய்மறக்க செய்யுது... கதையிலும் வடையிலும் ஓட்டை இல்லாமல் சுட்டிருப்பது இப்படத்தின் தனித்தன்மை...

பாட்டி தாத்தா இருவருக்குமிடையே வடை கெமிஸ்ட்ரி நல்லா வர்கவுட் ஆகியிருக்கு...

Verdict :
"பாட்டி சுட்ட வடை" - பழைய எண்ணெயில் புதிய வடை

சூப்பர்ப்...

-
ட்ரீமர்

Starjan (ஸ்டார்ஜன்) said...

காக்கா பாட்டியிடம் மட்டும்தான் எடுக்கணுமா , வேற இடமே கிடைக்கலியா .. பாவம் பாட்டி ?...

:-)))

settaikkaran said...

கதை சுமாரா இருந்தாலும் பாட்டெல்லாம் இப்பவே சூப்பர் ஹிட்டாயிரும் போலிருக்கண்ணே! அதுலேயும் "இட்லிமாவும் தோசைமாவும் ஒண்ணு...," இருக்கே! ஸ்ஸ்ஸ்! தத்துவமண்ணே! செம்மொழி மாநாட்டுலே இதைப் பத்தி ஒரு சிறப்பு ஆய்வு நடத்தணுமுன்னு தந்தி அனுப்பப்போறேண்ணே!

குட்டிபிசாசு said...

படம் நல்லா இருக்கு. நானும் கொஞ்சம் இதே மேட்டர டீல் பண்ணி இருக்கேன். http://kuttipisasu.blogspot.com/2009/12/blog-post_21.html

நீச்சல்காரன் said...

//chitra said...
நல்லா கதை விட்டு இருக்கீங்க. :-)//
வாங்க ரசித்ததற்கு நன்றி சகோதரி

//starjan ( ஸ்டார்ஜன் ) said...
காக்கா பாட்டியிடம் மட்டும்தான் எடுக்கணுமா , வேற இடமே கிடைக்கலியா .. பாவம் பாட்டி ?...

:-)))//
வாங்க ஸ்டார்ஜன். இப்படி கேட்டுடேங்க, நாமஎடுக்கலைனா வேரயார்யெடுப்பா! எல்லாம் சும்மா ரசிக்கத்தான்

நீச்சல்காரன் said...

dreamer sir,
காமெடி பீஸ்லையும் கமர்ஷியல் விமர்சனம் கொடுக்குரேங்க நீங்க தான் உண்மையான விமர்சகர்

குட்டிபிசாசு,
ஆகா உங்கள் படைப்பு படுபிரமாதம், உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டியிருக்கு

சேட்டைக்காரன்,
உங்கள் விமர்சனமும் சரி, படைப்பும் சரி படிக்கையிலே ஒரு jolly feel இருக்கு. ஆதரவுக்கு நன்றி நண்பா

மதுரை சரவணன் said...

paadal varikal amarkalam. ungka kathai nooru naal thaan enna paattu super .

நீச்சல்காரன் said...

மிக்க நன்றி மதுரை சரவணன் அவர்களே

அண்ணாமலையான் said...

கலக்குங்க நீச்சல்...

Anonymous said...

பலே பலே நல்ல கற்பனை அண்ணா

நீச்சல்காரன் said...

அண்ணாமலையான், &
தியாவின் பேனா
ரொம்ப நன்றி

நீச்சல்காரன் said...

bogy.in உங்கள் முயற்சிக்கு நன்றி

google.com said...

நல்லா கதை
எப்படி சார் இப்படி

Roja