Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, February 28, 2010


கண்ணே, மணியே யென்றான்
உன்னையல்ல என்னை
உனக்காக தூதுபோக

அரசமரப்பூக்கள் தலைகீழாய்
தவமிருக்குமென்பான்
அர்த்த ராத்திரியில்
பசிக்கிறதென்பான்
மொட்டை மாடியில்
நிலா வசிக்கிறதுயென்பான்



புரியாத கவிதைகளையெல்லாம்
புரிந்த மாதிரிச் சிரிக்கிறான்
தெரியாத தெருவுக்கெல்லாம்
சென்றுத் தவிக்கிறான்

அன்றொருநாள் நீ
மறந்துவிட்டுப் போன
கைக்குட்டையுடன்
மாதக்கணக்கில்
வாழ்ந்துவருகிறான்

திருமணத்திற்குப் போனால்
செருப்பைக் கழட்டிவிடாதே!
அதைக்கூட அபகரித்துவிடுவான்

நீ கிறுக்கிப்போட்ட காகிதத்தை
கிறுக்கனாய் தேடுகிறான்
கடைசியில் அதுதான்
கவிதையென்று அடம்பிடிக்கிறான்

முழுமதி உனக்காகப் பேசியதாம்
நீரோடை உனக்காக சிலிர்த்ததாம்

அம்மாவின் சமையலில்
குறைகள் கண்டுபிடிக்கிறான்
அதை நீ பரிமாறினால்
காதல் கத்திரிக்காய்கள்
கண்டுபிடிப்பான்

உன் வழியில் அவன் செல்ல
என்னைக் காவல் வைக்கிறான்
என் வழியே நீ செல்வதால்
என்னைப் பள்ளியில் இறக்கிவிட்டு
ஏவல் செய்கிறான்

என் அண்ணன் கவிஞன்தான்
கைபிடித்துப்பார் உனக்காக
காவியமே செய்வான்
இப்போதைக்கு இந்தக் கடிதத்தைப்
பிடி காதல் செய்வான்

கீற்று தளத்திலும் இந்தக்  கவிதையை படிக்கலாம் 
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4049

16 மறுமொழிகள்:

ராமலக்ஷ்மி said...

அருமை. ரசித்தேன்:)!

Chitra said...

முழுமதி உனக்காகப் பேசியதாம்
நீரோடை உனக்காக சிலிர்த்ததாம்


.........அழகாக விவரித்து உள்ளீர்கள். அருமை.

அன்புடன் நான் said...

இந்த கவிதை உண்மையிலேயே மிக வித்தியாசமாக இருக்கு..... நல்ல சிந்தனை நல்ல நடை... பாராட்டுக்கள்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என்று குழந்தைகள் மூலம் காதல் கடிதம் போவது நிற்கிறதோ அன்று தான் விடிவு காலம்.

settaikkaran said...

கவிதை அருமையா இருக்குங்க! ரசித்தேன்! பாராட்டுக்கள்!!

நீச்சல்காரன் said...

ராமலக்ஷ்மி அவர்களே,
சி. கருணாகரசு அவர்களே
chitra அவர்களே,
தங்கள் வரவுக்கு மிக்க நன்றி

நீச்சல்காரன் said...

சேட்டை, கருத்துக்கு நன்றி
@ நாய்க்குட்டி மனசு, குழந்தைகளால என்ன பிரச்சனை?

ப்ரியமுடன் வசந்த் said...

//அம்மாவின் சமையலில்
குறைகள் கண்டுபிடிக்கிறான்
அதை நீ பரிமாறினால்
காதல் கத்திரிக்காய்கள்
கண்டுபிடிப்பான்//

ஹா ஹா ஹா

ரசித்தேன் பாஸ்

ஸ்ரீராம். said...

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு என்னால் உடனடியாக பதிலுரைக்க முடியாததால் முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்//

நன்றி முன்னரே கிடைத்து விட்டதால் அருமை என்ற என் கருத்தை சொல்லாமல் போகிறேன்..

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ரொம்ப நல்லாருக்கு பாஸ்,,,,எப்படித்தான் இப்படி யோசிபிங்களோ !!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை; ரொம்ப நல்லாருக்கு.

நீச்சல்காரன் said...

boniface,
க.இராமசாமி ,
உங்கள் முதல் வருகை எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி

ஸ்ரீராம்.,
starjan ( ஸ்டார்ஜன் ),
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்

ஸ்வர்ணரேக்கா said...

//என் அண்ணன் கவிஞன்தான்
கைபிடித்துப்பார் உனக்காக
காவியமே செய்வான்
இப்போதைக்கு இந்தக் கடிதத்தைப்
பிடி காதல் செய்வான்//

excellent

நீச்சல்காரன் said...

ஸ்வர்ணரேக்கா,
உங்கள் பாராட்டை தக்கவைத்துக் கொள்ள முயலுகிறேன் மிக்க நன்றி

smart said...

நல்ல அண்ணன் நல்ல தம்பி

Selva said...

நல்ல கவிதை... மனசை இலகுவாக்கி ... சிரிப்பை வரவழைத்து அண்ணனின் காதல் அவஸ்தைகளை அவனோடு சேர்ந்து அனுபவிக்கும் தம்பியாக... நல்ல கற்பனை. வாழ்த்துக்கள் நீச்சல்காரா...