Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, March 28, 2010



தள்ளி விட்டுப்போன
நாட்களில் விதைகொண்ட
கிழட்டு மரம் கிளை
யறுந்து நிர்மூலமாகி
ரத்தம் சுண்டி
சுவாசம் காய்ந்து
நரம்புகள் உடைந்து
பிணைப்புகள் வெந்து
சுடுகாட்டுக்குழியில்
கட்டை சாம்பலாகி
சித்திரச்சுவடாய் சுவரில்
கண்ணாடிக்கூண்டாய்
மூன்றாம் நாள்
காரியத்துக்கு அஸ்தி
கரைக்கப்பட்டு காத்திருக்க



முதல் நாளிலேயே
தலைவாழை விரித்து
தன் மனையாளை
பணயம் நீட்டி
பாகப்பிரிவிணைக்கு
அடிக்கல் நாட்டி
வியர்க்கவிறுவிறுக்க
படையலிட்டு சொத்துக்கு
வேண்டிக்கொள்கிற
மாப்பிள்ளையே!

வாருங்கள் டீ சாப்பிடலாம்
ரெண்டு ரூபாதான்
நானும் பிச்சைதான்

8 மறுமொழிகள்:

ப்ரியமுடன் வசந்த் said...

வாருங்கள் டீ சாப்பிடலாம்
ரெண்டு ரூபாதான்
நானும் பிச்சைதான்//

நச்...

Chitra said...

வாருங்கள் டீ சாப்பிடலாம்
ரெண்டு ரூபாதான்
நானும் பிச்சைதான்

.......இது உள் குத்து இல்ல. நேரா மூக்கு மேலேயே, செம......

Dr. Srjith. said...

நல்ல முயற்சி நண்பரே

ராமலக்ஷ்மி said...

அருமை.

ஸ்ரீராம். said...

Good

பனித்துளி சங்கர் said...

////கிழட்டு மரம் கிளையறுந்து நிர்மூலமாகி
ரத்தம் சுண்டிசுவாசம் காய்ந்து
நரம்புகள் உடைந்துபிணைப்புகள் வெந்து
சுடுகாட்டுக்குழியில்கட்டை சாம்பலாகி
சித்திரச்சுவடாய் சுவரில்கண்ணாடிக்கூண்டாய்
மூன்றாம் நாள்காரியத்துக்கு அஸ்தி
கரைக்கப்பட்டு காத்திருக்க/////


{{{{வாருங்கள் டீ சாப்பிடலாம் ரெண்டு ரூபாதான்நானும் பிச்சைதான்}}}}}

நெத்தியடி நண்பரே !! வலிமையான வரிகள் இன்னும் எழுதுங்கள்,,,,

Ahamed irshad said...

Nice One

நீச்சல்காரன் said...

பிரியமுடன்...வசந்த்
chitra
dr. srjith.
ராமலக்ஷ்மி
ஸ்ரீராம்.
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
அஹமது இர்ஷாத்

வாருங்கள் டீ சாப்பிடலாம்
ஒரு நன்றி சொல்லத்தான்
நானும் மகிழ்வேன்