Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, October 15, 2010

"சிரிப்பதற்கு மட்டுமே! மட்டுமே! யுவர் ஆனார்."


மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்னு எப்படி சொல்றீங்க?
கல்யாணப் பத்திரிக்கையில என்னை அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிகள்னு ஒரு பதிவப் போட்டுருக்கார்ல.

அச்சச்சோ கழட்டிப் போட்ட செருப்பக் காணங்க
கவலைப்படாதீங்க நீங்க பிரபலம் ஆகிட்டீங்க அதன் உங்க செருப்ப திருடுறாங்க.

 {சாப்பாட்டு அறையில்:}
அவ்வளவுக் கூட்டத்தை எப்படி சமாளிச்சேங்க?
தொடர்பதிவு எழுதுறது போல தொடர்ந்து வந்து உட்காருங்கன்னே.

மத்தியானத்துக்கு என்ன ஸ்பெசல் மீள்ஸ்சா?
நேத்து சமைச்ச சாப்பாட்டையே ஒரு மீள்சாப்பாடா போட்டப்போறேன்

பொண்ணுக்கு நீங்க என்ன போடப்போறீங்க?
பதிவு போட்டா அம்பது கமெண்ட் போடுவேன்.

ஹலோ சார் சாப்பிட்டு மொய் வைக்காம போறீங்களே!
இருங்க அவசரத்தில பத்திரிக்கைய படிக்காம வந்துட்டேன் படிச்சுட்டு மெதுவா வச்சிட்டுப் போறேன்

வரவுங்களைஎல்லாம் செக் பண்ணி உள்ள விடுறாரே அவரு என்ன செக்யூரிட்டியா?
அவர் தான் அதிவேகப் பதிவர் ஏதாவது பதிவு போட கிடைக்குமான்னு பார்கிறாரு!

வாசல்ல யாரோ கவர் வச்சு வித்துகிட்டுயிருக்காங்களே அதுஎன்னது?
அதுவா! அதுதான் டெம்பிளைட் ஸ்மைலிகள் மணமக்களுக்குக் கொடுக்குரவுங்க வாங்குவாங்க

பொண்ணோட தாய் மாமாவக் காணோம்?
அவர் இன்னைக்கு ரிலீஸ் ஆகப்போற புதுப் படத்தப் பார்க்கப் போயிருக்காரு. ராத்திரி விமர்சனம் எழுத வேண்டாமா?

{மொய் எழுதும் இடத்தில்:}
காசு கொடுக்காம மொய் நூத்தியொன்னு எழுதச் சொல்லுறீங்க!
அட! பக்கத்தில புனைவுன்னு போட்டுக்கோங்க சரியா போச்சா!

"குறுகிய நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் துட்டு கொடுத்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
"மீ தி லட்சத்தி ஒன்னு சீக்கிரம் எழுதுங்க"

மண்டப சுவத்தில எல்லாம் நோட்டீஸ் ஓட்டாதே அச்சு பதிக்காதேனு ஏன் போட்டுருக்கீங்க?
அங்க பாருங்க இப்படி செஞ்சும் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறத!
"உங்க கல்யாணம் நல்லாயிருக்கு, உங்க கல்யாணத்தை தரகு.காமில் பதிவு செய்யுங்கள். நிறைய பேர் கல்யாணத்துக்கு வந்தால் உங்களுக்கு அடுத்த எலக்ஷனில் ஒரு சீட்டு அன்பளிப்பாக வழங்கப்படும்.
நன்றி
தரகு குழுமம்
http://www.tharaku.com"


கல்யாணம் பிடித்திருந்தால் ஓட்டுப் போட்டு CM ஆக்கிவிடுங்கள்.

21 மறுமொழிகள்:

Balakumar Vijayaraman said...

நல்ல கற்பனை. :)

//காசு கொடுக்காம மொய் நூத்தியொன்னு எழுதச் சொல்லுறீங்க!
அட! பக்கத்தில புனைவுன்னு போட்டுக்கோங்க சரியா போச்சா!//

இது டாப்.

Chitra said...

பொண்ணுக்கு நீங்க என்ன போடப்போறீங்க?
பதிவு போட்டா அம்பது கமெண்ட் போடுவேன்.

....This is the best!
எல்லாமே சூப்பரா வந்து இருக்குதுங்க.... சிரிச்சு முடியல. ஹா,ஹா,ஹா,ஹா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செம comedy

மாதேவி said...

கலக்கல்:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாமே நல்லா இருக்கு.. அந்த சுவர் விளம்பரம் செம..தரகு.காம்..:)))

Thamiz Priyan said...

நல்ல நகைச்சுவை..:)
\\{மொய் எழுதும் இடத்தில்:}
காசு கொடுக்காம மொய் நூத்தியொன்னு எழுதச் சொல்லுறீங்க!
அட! பக்கத்தில புனைவுன்னு போட்டுக்கோங்க சரியா போச்சா!\\\
நல்லா சிரிச்சேன்..

நீச்சல்காரன் said...

@வி.பாலகுமார்
நன்றி
@chitra
நன்றி
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நன்றி
@மாதேவி
நன்றி
@முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி
@தமிழ் பிரியன்
நன்றி நண்பரே

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல கற்பனை தல ! ரசனை!

நாமக்கல் சிபி said...

சூப்பர்!

சாந்தி மாரியப்பன் said...

கலக்கலான கற்பனை.தரகு.காம்... :-))))))))

நீச்சல்காரன் said...

@ப்ரியமுடன் வசந்த்
@என்.ஆர்.சிபி
@அமைதிச்சாரல்
வாங்க வாங்க கருத்துரைக்கு மிக்க நன்றிகள்.

Admin said...

அனைத்தும் அருமை.. மனம் விட்டு சிரித்தேன்..

சாதாரணமானவள் said...

ஹஹ்ஹஹ்ஹா உக்காந்து யோசிப்பீங்களோ...

நீச்சல்காரன் said...

@ Abdul Basith ,
@ சாதாரணமானவள்
தரமான ஊக்கக் கருத்துக்கு தாமதமாக மிக்க நன்றி

ரிஷபன்Meena said...

பிரமாதம். அருமையான நகைச்சுவை. டெம்ளேட் அல்ல , உண்மையிலேயே நன்றாக இருக்கு.

ஒரு கேள்வி.
போட்டோ ஷாப்-ல் தமிழ் எ-கலப்பையில் முன்பு டைப் செய்திருக்கிறேன். இப்போ யுனிகோட் -ல் டைப் செய்தால் வருவதில்லை. இதை எப்படி சரி செய்வது ?

அமுதா கிருஷ்ணா said...

super..

Arun Ambie said...

மீள் சாப்பாடா? ஒக்காந்து யோசிப்பாய்ங்கயளோ???

Unknown said...

ஆஹா, ஒவ்வொண்ணையும் ஒக்காந்து யோசிச்ச பாத்தீங்களா? நல்லா இருக்குங்க!!

//காசு கொடுக்காம மொய் = புனைவு// இது டாப்.

//"உங்க கல்யாணம் நல்லாயிருக்கு, உங்க கல்யாணத்தை தரகு.காமில் பதிவு செய்யுங்கள். நிறைய பேர் கல்யாணத்துக்கு வந்தால்// இதுவும் சூப்பர்.

என்ன, ""உங்க கல்யாணம் நல்லாயிருக்கு, உங்க கல்யாணத்தை தரகு.காமில் பதிவு செய்யுங்கள். நிறைய பேர் கல்யாணத்துக்கு வந்தால் உங்களுக்கு அடுத்த தமிழ்மணம் தேர்தலில் ஒரு வாக்கு அன்பளிப்பாக வழங்கப்படும்.
நன்றி
தரகு குழுமம்
http://www.tharaku.com" என்று கூட இருந்திருக்கலாம். இல்லை இன்ட்லியில் 10 லைக்குக்கள் வழங்கப்படும்...னும் இருந்திருக்கலாம்.

இராஜராஜேஸ்வரி said...

All are interested.

ராஜி said...

பொண்ணோட தாய் மாமாவக் காணோம்?
அவர் இன்னைக்கு ரிலீஸ் ஆகப்போற புதுப் படத்தப் பார்க்கப் போயிருக்காரு. ராத்திரி விமர்சனம் எழுத வேண்டாமா?
>>>
இது சிபி சார் பத்தி இல்லியே?!

Anonymous said...

பொண்ணுக்கு நீங்க என்ன போடப்போறீங்க?
பதிவு போட்டா அம்பது கமெண்ட் போடுவேன்.