ஆகாய வீதியில் மேகங்கள்
விபத்துள்ளாகி கண்ணாடிகள்
உடைந்து தெறித்தோடியது
காக்கைகள் குளித்துக்
கொண்டிருக்க
கள்ளப்பார்வை
நீட்டியது அந்த நிலா
ஜன்னல்களுக்கு மேலே
வடிந்துக் கொண்டிருந்தவொன்று
வாசலில் படுத்துக் கொண்டது
எலக்ட்ரான்கள் வெடித்து
இறங்கிச் சென்ற
மின்சாரத்தைத் திருடியது
இடிதாங்கி
கனியாகிக் கொண்டிருந்த
காய்களின் பதவியேற்பு
விழாவில் மலர்தூவி வாழ்த்தியது
வானம்
குருவிகள் போட்டச்
சித்திரங்களை மழித்து
கழுவிக் கொண்டன கற்சிலைகள்
குடைக்குள் ஒளிந்துக்
கொண்டு மின்மினிகளுடன்
ஒரு கண்ணாம்பூச்சி
சக்கரம் கடித்தவுடன்
வானத்தை நோக்கி
காறித் துப்பியது
சாலையோரக் குழி
இருட்டின் முடிவில்
சொப்பனங்கள் சிதறிக் கொள்ளும்
நேரமாதலால் விடை பெற்றது
மழைக் கால நினைவுகள்
இதை விகடனிலும் படிக்கலாம்
7 மறுமொழிகள்:
எலக்ட்ரான்கள் வெடித்து
இறங்கிச் சென்ற
மின்சாரத்தைத் திருடியது
இடிதாங்கி//
சூப்பர்... புதுமை வரிகள்
சக்கரம் கடித்தவுடன்
வானத்தை நோக்கி
காறித் துப்பியது
சாலையோரக் குழி//
இப்ப்டியும் சிந்தனை... வாவ்.. சூப்பரா இருக்கு நண்பரே!
இந்த கவிதையை பத்திரிக்கை அனுப்பிருக்கலாம் நண்பரே.... ரொம்ப நல்லாருக்கு
//இருட்டின் முடிவில்சொப்பனங்கள் சிதறிக் கொள்ளும் நேரமாதலால் விடை பெற்றதுமழைக் கால நினைவுகள்//கடைசி வரி கலக்கல் நண்பரேஅருமையான கவிதை.நன்றி நல்லதோர் பகிர்விற்க்குநட்புடன்சம்பத்குமார்
அருமையான கவிதை
இன்று என் வலையில்
நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?
டெக்னிகல் போஸ்ட் போடறதோட நின்னுடாம அப்போ அப்போ இது போல மனநிறைவான கவிதைகளும் எழுதுங்க வெங்கி.
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Post a Comment