சிதறிப் போனவையையும்
கீறல் விழுந்தவையும்
மீண்டும் காகிதமாக
தன்னைக் கிழித்துக் கொள்பவன்
பணத்தில் பாகப்பிரிவினை
நடக்காமலிருக்க கண்ணாடி
ரோடுபோடும் காண்ராக்டர்
அஞ்சல் தலைப் பொட்டிட்ட
காகிதப் பொட்டிகளைப்
பூட்டிக் கொண்டு
தபால்காரருடன் ஊர்சுற்றுவான்
உடைந்த பொம்மை
இணைக்கப்பட்டது
இவனை உடைத்து
அறிக்கையை கவ்விக் கொண்டு
தகவல் உரைக்கும் பலகையில்
படுத்துக்கொள்வான்
முறுக்கை வயிற்றில் கட்டிய
பாலித்தீன் பையின் வாயைக்
கட்டும் வித்தகன்
ஸ்டேபிளர் பின்களின்
கடியிலிருந்து பொட்டலங்களை
மீட்க வந்த மஹா புருஷன்
செல்லாத நோட்டுக்களை
செல்ல வைப்பதால்
நீ செலோ டேப் என்று
அன்புடன் அழைக்கப்படுவாய்
***
தமிழ் ஓவியம் இதழிலிருந்து மீள்பதிவு
கண்ணாடி ரோடு
Info Post
2 மறுமொழிகள்:
நெனெச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு கற்பனை வளம் மிகுந்த கவிதை. சூப்பர். அடிக்கடி வருவேன்.
அட! அருமையாக இருக்கிறது. 'செலோடேப்' என்பது பாதி படித்த பின் தான் புரிந்தது.
Post a Comment